பிட்காயின் விலைக் கணிப்பு 2022: BTC மீண்டு எழுமா?

By Currency.com Research Team

சமீபத்திய உயரங்களைத் தொட்ட பின் பிட்காயின் கணிசமான அளவு விழுந்துள்ளது. 2022ல் இது மீண்டு எழுமா?

உள்ளடக்கம்

2021 பிட்காயினுக்கான ஆண்டாக இருந்தது. ஆனால் 2022ன் துவக்கத்தில் குறிப்பிடத்தக்க அளவு BTC வீழ்ச்சியடைந்துள்ளது. விலையிலும் சந்தை மூலதனத்திலும் மிகப்பெரிய கிரிப்டோவான BTC உடன் எந்தவொரு கிரிப்டோகரன்சி முதலீட்டாளரும் தேடுவது இதுவாகத்தான் இருக்கும். 2022க்கான பிட்காயின் விலைக் கணிப்பு என்ன? பார்க்கலாம் வாருங்கள்.

பிட்காயினின் சமீபத்திய வரலாறு 

2021 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் BTC விலை மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்டது. அதனால் கிரிப்டோகரன்சிக்கே பொதுவான மலர்ச்சி காலமாக அது இருந்தது. செப்டம்பர் இறுதியில் துவங்கி கிரிப்டோக்களின் தலைவனாக ஏறுமுகமான நீண்ட ஓட்டத்தை எடுத்து அதன் முந்தைய சாதனைகளை முறியடித்து நவம்பர் 10ம் தேதி புதிய உச்சமான $68,789.63ஐ இன்ட்ராடே வர்த்தகத்தில் அடைந்தது. விபரமாகச் சொல்ல வேண்டுமென்றால், பிட்காயின் பிளாக்செயின் ஏற்படுத்தக்கூடிய சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த கவலை மாபெரும் கிரிப்டோ தின சரிவை மே 19ல் தூண்டியது. இதிலிருந்து மீண்டெழுவதற்கு  சிரமப்பட்டு நாணயத்தின் விலை ஜூலையில் $30,000க்கும் கீழே சென்றது.

பிட்காயினைப் போன்ற அத்தனை பெரிய ஒரு சொத்து மூன்றே மாதத்தில் இருமடங்குக்கு அதிகம் ஏறியது உண்மையிலேயே ஒரு சாதனைதான். ஆனால் இதில் பாதகமான அம்சமும் இருந்தது. தவிர்க்கமுடியாமல் ஏற்பட்ட சரிவானது, கோவிட்-19-ன் ஒமிக்ரான் மாற்றுரு குறித்த உலகளாவிய சந்தையில் ஏற்பட்ட கவலையினால் மேலும் தூண்டப்பட்டது.

வருடக் கடைசியில் நாணயத்தின் விலை $46,306.45 ஆக இருந்தது. இது இருமாதங்களில் கிட்டத்தட்ட 33%க்கும் அதிகமான வீழ்ச்சியைக் காட்டுகிறது. தொடர்ந்து வீழ்ந்தபடியிருந்த விலை ஜனவரி 21 பின் மதியத்தில் $38,630க்கு வர்த்தகமானது. இதை வருடத்தொடக்கத்துடன் ஒப்பிடும்போது 16%க்கும் மேல் விழுந்திருந்தது மற்றும் 2021 நவம்பர் 10ம் தேதி அது அனுபவித்த உச்சத்திலிருந்து 40% வீழ்ச்சி. வீழ்ச்சி அத்தோடு முடியவில்லை. ஜனவரி 22ல் இன்ட்ராடே வர்த்தகத்தின் அடிவிலையாக $34,349.25ஐத் தொட்டது. ஜனவரி 24ம் தேதி காலைப்படி, பிட்காயினின் விலை $34,760 ஆக இருந்தது.

இதை எழுதிக் கொண்டிருந்த நேரத்தில் இருந்த பிரச்சினையின் ஒரு பகுதியாக ஒட்டுமொத்தச் சந்தைகளும் சுருங்கிக் கொண்டிருந்தன. இதன் அர்த்தம் மக்களிடம் குறைவான பணமே இருந்தது. எனவே கிரிப்டோகரன்சி போன்ற அபாயங்களில் செலவிடுவது குறைந்தது. பிட்காயினுடன் மிகச்சிறப்பாக இணையப்பெற்ற ஒன்றாகவும் அதிகத் தொழில்நுட்பப் பங்குகளைக் கொண்ட பங்குச்சந்தையுமான Nasdaq விலை நேர்செய்தல் (correction) என்று அழைக்கப்படும் பகுதிக்குள் நுழைந்தது. ஒட்டுமொத்த சந்தை மதிப்பும் அதன் அதிகபட்ச புள்ளியிலிருந்து 10% வீழ்ந்துள்ளது. இதன் விளைவாக சமீபத்தில் பிட்காயினும் குறிப்பிடத்தக்க அளவு பெரிய இழப்புகளைச் சந்தித்துள்ளது. கிரிப்டோவின் இதுவரையிலான உச்ச விலை $68,789.63 நவம்பர் 10ல் நிகழ்ந்ததை நாம் நினைவில் கொண்டால், இரண்டு மாதத்துக்கும் சற்று கூடுதலான காலத்தில் $40,000க்கும் கீழே விலை இறங்கியிருப்பது எச்சரிக்கை விடுப்பதாக உள்ளது.

எனினும், பிட்காயின் முதலீட்டாளர்களும் பெரியளவிலான சந்தையும் அது முன்பு தொட்ட உச்சத்தை நோக்கி நாணயத்தைத் தள்ள இன்னும் தயாராகவில்லை. சந்தை தன்னைத்தானே நேர்செய்து கொள்வதற்கு இது காரணமானது. நிச்சயம் பிட்காயின் தற்போது நேர்செய்யும் நிலையில் இருக்கிறது. ஆனால் எப்போது மீண்டுவரும்; அப்படியொரு மீட்சி விலையில் நடக்குமா என்பதைத்தான் நாம் சற்று நேரத்துக்குப் பின் பார்க்க இருக்கிறோம்.

சந்தையும் ஒழுங்கமைப்பும்

BTC சமீபத்தில் வீழ்ச்சியடைந்தது குறித்த மிகப்பெரும் கவலைகளுல் ஒன்று இது ஒட்டுமொத்த கிரிப்டோகரன்சி சந்தையை எப்படிப் பாதிக்கும் என்பதுதான். பொதுமக்கள் பார்வையில் பிட்காயின் என்பதும் கிரிப்டோ என்பதும் வெவ்வேறானதல்ல. பிட்காயின் தவிர்த்த ஏனைய பிற காயின்கள் அவை பிட்காயின் இல்லை என்பதை வரையறுக்கும் விதமாக ஆல்ட்காயின்கள் என்றழைக்கப்படுகின்றன. BTC விலையில் எந்த மாற்றம் நிகழ்ந்தாலும் பொதுவாக அது சந்தை மீது தாக்கத்தை ஏற்படுத்தும். மீண்டும், இதை எழுதும் நேரத்தில் இதுதான் நடப்பதாகத் தெரிகிறது. கிரிப்டோ வட்டத்துக்குள் இருப்பவர்கள் இதுவொரு குறுகியகாலத் தடை என்றும் பிட்காயின் ஏதாவதொரு வகையில் மீண்டு எழும் என்றும் அதனால் எஞ்சிய கிரிப்டோ சந்தை மேலெழும் என்றும் நம்புகிறார்கள். 

ஒழுங்குமுறைச் சூழலும், குறிப்பாக அமெரிக்காவைப் பொறுத்தவரை 2022ல் பிட்காயின் மீது தாகத்தை ஏற்படுத்தக்கூடும். 2021 டிசம்பரில் ஆறு கிரிப்டோ தலைமைச் செயல் அதிகாரிகள் நிதிச்சேவை வாரியத்தின் பிரதிநிதிகள் சபை முன்பு ஆஜராகி ஒழுங்குமுறையில் “சற்று தெளிவுபடுத்தல்” தேவை என்று கூறியிருக்கிறார்கள். அவர்கள் விருப்பம் இந்த ஆண்டு நிறைவேறக்கூடும்.

ஜனவரி 19ல், US ஈட்டாவணங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC) தலைவர் கேரி கென்ஸ்லர் 2022ல் ஒழுங்குமுறை அறிமுகப்படுத்தப்படுமென தான் நம்புவதாகக் கூறியுள்ளார். நிருபர்களிடம் அவர் கூறியது: “வர்த்தகச் செயற்தளங்கள் தங்களது ஒழுங்குபடுத்தப்பட்ட வெளிக்குள் வரவில்லை என்றால் இந்த ஆண்டும் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை தொடரக்கூடும்.” ஒழுங்குமுறை வருகிறதெனில், அது நம்பிக்கையையும் நிலைத்தன்மையையும் ஏற்படுத்த வழிவகுக்கும். 

அத்துடன் பணவீக்க விகிதம் அதிகரித்து வரும்போது வட்டி வீதம் அதிகரிப்பதையும் நாம் பார்க்கமுடியும். பணவீக்கத்துக்கு எதிரான ஓர் அரணாக பிட்காயின் பார்க்கப்படும்போது, குழாய்கள் மூடப்பட்டுவிட்டால், BTCயில் தங்கள் பணத்தை இடுவது என்று வருகையில் முதலீட்டாளர்கள் மேலும் எச்சரிக்கையுடன் இருப்பார்கள்.

BTC/USD முந்தைய விலை

தேதி முடிவு மாற்றம் மாற்றம்(%) ஆரம்பம் அதிகம் குறைவு
Feb 3, 2023 23538.45 44.90 0.19% 23493.55 23595.70 23413.45
Feb 2, 2023 23493.45 -241.85 -1.02% 23735.30 24263.70 23405.70
Feb 1, 2023 23735.45 605.25 2.62% 23130.20 23834.70 22770.45
Jan 31, 2023 23130.05 297.85 1.30% 22832.20 23310.15 22719.55
Jan 30, 2023 22831.95 -909.25 -3.83% 23741.20 23801.70 22483.75
Jan 29, 2023 23741.20 711.25 3.09% 23029.95 23967.20 22975.30
Jan 28, 2023 23029.70 -50.85 -0.22% 23080.55 23197.70 22888.45
Jan 27, 2023 23080.70 70.65 0.31% 23010.05 23514.55 22535.30
Jan 26, 2023 23010.45 -54.00 -0.23% 23064.45 23287.20 22855.25
Jan 25, 2023 23064.20 426.40 1.88% 22637.80 23827.45 22334.55
Jan 24, 2023 22637.70 -283.60 -1.24% 22921.30 23169.30 22466.45
Jan 23, 2023 22921.20 205.75 0.91% 22715.45 23179.30 22516.95
Jan 22, 2023 22715.30 -76.75 -0.34% 22792.05 23083.95 22314.95
Jan 21, 2023 22792.20 124.55 0.55% 22667.65 23370.95 22432.50
Jan 20, 2023 22667.80 1583.50 7.51% 21084.30 22763.20 20864.55
Jan 19, 2023 21084.15 408.60 1.98% 20675.55 21191.95 20653.95
Jan 18, 2023 20674.70 -459.10 -2.17% 21133.80 21658.95 20401.70
Jan 17, 2023 21132.95 -57.75 -0.27% 21190.70 21632.45 20848.80
Jan 16, 2023 21190.45 309.65 1.48% 20880.80 21463.70 20617.40
Jan 15, 2023 20880.90 -78.15 -0.37% 20959.05 21059.20 20563.70

பயமும் பேராசையும்

பிட்காயின் விலைப் பகுப்பாய்வின் ஒரு முக்கியமான அளவுமுறை “பயம் மற்றும் பேராசைக் குறியீடு (fear and greed index)”. ஜெர்மனியின் ஹாம்பெர்க் நகரைச் சேர்ந்த கிரெகர் கிராம்ப்ஸ் மற்றும் அவரது தொழில் கூட்டாளி விக்டர் டோபிள்ஸ் ஆகியோர் பிட்காயின் விலை என்னவோ அதைத்தான் இன்டெக்ஸ் பார்க்கிறது என்றும் சந்தையின் பொதுவான நகரும் திசை, சமூக ஊடக மனநிலை மற்றும் ஒட்டுமொத்த BTC ஆதிக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் பூஜ்ஜியத்திலிருந்து 100 வரை மதிப்பெண்ணைக் கொடுக்கிறார்கள். இதைப் பொறுத்து முதலீட்டாளர்கள் பேராசையினால் ஊக்கம் பெற்றிருக்கிறார்களா அல்லது பயத்தினாலா என்பதை அறிகிறார்கள்.

2022 ஜனவரி 24ன்படி, இன்டெக்ஸானது மிகக் குறைவான அளவாக 13ல் இருந்தது. இது சந்தை கடுமையான பயத்தில் இருப்பதைக் காட்டுகிறது. எனினும் ஜனவரி 23ல் பயம்-பேராசை மதிப்பெண் 11 என்று காட்டியதால் மீண்டுவருவதற்கான அறிகுறியாக அதைச் சொல்லலாம். சில தருணங்களில், 2021 டிசம்பர் துவக்கத்தில் இன்டெக்ஸ் 90களில் இருந்தது. இது மக்கள் அபரிமிதமான பேராசையால் உந்தப்பட்டு இருந்ததைக் காட்டுகிறது. கடைசியாக மிகக் குறைவான இன்டெக்ஸ் இருந்தது ஜனவரி 24ல். இது ஆறுமாதங்களுக்கு முன் 2021 ஜூலை 21ல் நாணயம் $30,000க்குக் கீழே விழுந்தபோது இருந்ததைக் காட்டிலும் சற்று அதிகம். மேலும் சந்தை மீண்டுவருவது குறித்த நிலையற்ற தன்மை வர்த்தகர்களின் மனங்களில் சுழன்றுவருவதால் மதிப்பெண்ணை 10ல் வைத்திருக்கிறது.

பயம்-பேராசை குறியீடு மிக விரைவாகத் தலைகீழாக மாறக்கூடும். ஜூலை 2021 முடிவில் இன்டெக்ஸ் 60க்கு வந்தது. இது மக்கள் பேராசையால் உந்தப்பட்டிருப்பதைக் காட்டியது. அத்தகைய ஒரு விரைவான மாற்றம் மனப்பாங்கில் இந்தமுறை வருகிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

What is your sentiment on BTC/USD?

23432.45
Bullish
or
Bearish
Vote to see community's results!

பிட்காயின் விலைக் கணிப்புகள்

நிலைமை இவ்வாறு இருக்க 2022ல் பிட்காயின் விலைக் கணிப்பு என்னவாக இருக்கிறது? ஜனவரி 13ல், SEBA என்ற ஸ்விஸ் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியான குயிடோ புவெல்லர், நாணயம் வீழ்ச்சியடைந்திருக்கும் நேரத்திலும் ஒட்டுமொத்த முன்கணிப்பு மீண்டு வருவதைத்தான் காட்டுகிறது என்று கூறுகிறார். அவர் ஒரு புதிய உச்சத்தை 2022ல் BTC பார்க்க முழுவதுமாக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார். ஸ்விட்சர்லாந்திலுள்ள செயிண்ட் மொரிட்ஸ் நகரில் நடந்த கிரிப்டோ நிதிக் கலந்துரையாடலில் அவர் கூறியதாவது: “எங்கள் உள்ளக மதிப்பீட்டு மாதிரிகள் இப்போதைக்கு $50,000க்கும் $75,000க்கும் இடையில் காட்டுகின்றன. நாம் இந்த மட்டத்தைப் பார்ப்போம் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். ஆனால் இங்கே கேள்வி எப்போது என்பதுதான்.”

“அமைப்புசார் நிதி காரணமாக ஒருவேளை விலை மேலே ஏறலாம். நாங்கள் முழுமையாக ஒழுங்குபடுத்தப்பட்ட வங்கியாக இயங்குகிறோம். எங்களிடம் பல சொத்துத் தொகுதிகள் முதலீடு செய்வதற்கான சரியான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன”

ப்ளூம்பெர்க் ஆய்வாளரான மைக் மெக்கிலோனும் ஒரு நேர்காணலில் நடப்பு மட்டத்தில், நேர்செய்தல் குறுகிய காலம் முதல் இடைக்காலம் வரை நடப்பது அப்படியொன்றும் மோசமில்லை என்று கூறுகிறார். அவர் சொல்வது: ”பிட்காயின் $100,000 வரை செல்லுமென்று நான் நினைக்கிறேன். வரத்து குறைந்துவரும் போக்கினை வெறுமனே கவனிக்கும்போது தேவையும் சுவீகரிப்பும் அதிகரிக்கும் என்பது நன்றாகத் தெரிகிறது. ஆனால் எப்போது என்பதுதான் கேள்வியாக உள்ளது. இங்கு சற்று அளவுக்கு அதிகமான ஊகம் நிலவுகிறது என்று அவர் நினைப்பதாக கூறுகிறார்.

“இப்போது நாம் $40,000க்கு அருகில் பார்க்கிறோம். நன்றாக நீண்ட ஏறுமுகச் சந்தைக்குள் மிக வசதியான மண்டலமாக இது தோன்றுகிறது.”

எதிர்கால வாய்ப்பு குறித்தும் 2022க்கான பிட்காயின் விலைக் கணிப்பு குறித்தும் பேசும்போது மெக்கிலோன் இந்த ஆண்டு ஈட்டுக்காப்பாக உள்ள தங்கத்தின் இடத்தை பிட்காயின் பிடிக்குமென்றும், ”அதிக அபாயம்” உள்ள சொத்து என்பதிலிருந்து “அபாயம் குறைந்த” சொத்தாக் பிட்காயின் மாறும் என்றும் சொல்கிறார். அவர் மேலும் கூறியதாவது: “$40,000 என்ற இந்த இடத்தில் ஒரு நல்ல அடித்தளத்தை கட்டமைக்கிறது என்று நினைக்கிறேன். இது $100,000 நோக்கிச் செல்ல தூண்டுதலாகவே இருக்க வாய்ப்புள்ளது.”

ஜனவரி ஆரம்பத்தில் கோல்டுமேன் சாக்ஸைச் சேர்ந்த ஜாக் பந்த் 2022ல் பிட்காயின் $100,000 குறியீட்டை அடைவது அரிது என்று வாதிடுகிறார். அவரிடமிருந்து ஒரு குறிப்பைப் பெற்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி: “வெறுமனே ‘மதிப்பைச் சேமித்துவைத்தல்’ என்பதைத்தாண்டி பிட்காயினுக்கு வேறு பயன்பாடுகள் இருக்கக்கூடும் – டிஜிட்டல் சொத்துக்கான சந்தைகள் பிட்காயினைக் காட்டிலும் மிகப்பெரியவை – ஆனால் நாம் அதன் சந்தை மூலதனத்தை தங்கத்துடன் ஒப்பிடுவதன் மூலம் பிட்காயின் வருவாயினங்களில் நம்பத்தக்க முடிவுகள் மீது அளவுருக்களை வைக்க உதவுமென்று நினைக்கிறோம்.” பிட்காயினின் மதிப்பு சேமிப்பின் பங்களவு மடங்குகளில் அதிகரித்தால் நாணயத்தின் விலை $100,000-ஐத் தொடும் என்கிறார். கோல்டுமேன் சாக்ஸிடம் அந்தக் குறிப்பின் ஒரு பிரதியை அனுப்பமுடியுமா என்று கேட்டிருந்தோம். ஆனால் இன்றுவரை பதில் இல்லை.

பிட்காயின் திரும்ப மேலே ஏறுமா?

கடைசியாக, சற்று வித்தியாசமான ஒன்றை முயற்சிக்கலாம். Gov.capital இணையதளம் விலைக்கணிப்பு குறித்து என்ன சொல்கிறது என்று பார்ப்போம். இந்தத் தளம் அதன் விலைகளைக் கணிக்க ஒரு சூத்திரத்தைப் பயன்படுத்துகிறது. இது எந்தத் தருணத்திலும் மாறக்கூடும். அத்துடன் தன் கணிப்புகளுக்கு அரணாக மிகக்குறைந்த கணிப்பு எதிர்பார்ப்பு, அதிகபட்ச எதிர்பார்ப்பு, சராசரி எதிர்பார்ப்பு போன்றவற்றை இது பயன்படுத்துகிறது. தனது மிகுந்த நம்பிக்கையளிக்கும் முடிவுகளில்கூட, ஜனவரி 24 காலைநேரப்படி, இந்த ஆண்டிற்கான பிட் காயின் விலை கணிப்பில் இந்தத் தளம் இந்த ஆண்டில் BTC புதிய உச்சத்தை அடையும் என்று கருதவில்லை.

மிகவும் எதிர்மறையான கணிப்பு கூறுவதன்படி BTC பிப்ரவரி தொடக்கத்தில் $30,643.35க்கு இறங்கும் என்றும் ஆனால் ஆண்டு முழுவதும் வளர்ச்சி இருக்குமென்றும் சொல்கிறது. வழக்கமான BTC விலைக்கணிப்பின்படி பிப்ரவரி 1ல் விலை சற்று மீண்டு $36,051ல் வர்த்தகமாகுமென்றும் அதே நாளுக்கான சிறந்த சாத்தியமுள்ள விலையாக $41,458.65 என்றும் குறிப்பிடுகிறது. Govt.capital பிட்காயின் விலைக்கணிப்புகளுக்கு ஒரேமாதிரியான மாதிரியையே பயன்படுத்துகிறது. உதாரணமாக பிப்ரவரி துவக்கத்தில் ஓர் எழுச்சி: மிக நம்பிக்கையளிக்கக்கூடிய கணிப்பு $45,000-ஐ பிப்ரவரி 9ல் உடைக்கும் என்கிறது. அதன்பின் மாத இறுதிவாக்கில் ஒரு வீழ்ச்சி இருக்குமென்றும் பின் மார்ச்சில் ஏறுமுக விசைகளின் தாக்கத்தினால் $50,000-ஐ எட்டுமென்றும் சொல்கிறது. வழக்கமான கணிப்பை நாம் பார்த்தால், அது BTC மார்ச் இறுதியில் $45,000ஐத் தாண்டும் என்கிறது. ஆனால் மிகவும் அடக்கி வாசிக்கும் குறைந்தபட்ச கணிப்பு அக்டோபர் 15வரை இது நடக்க வாய்ப்பில்லை என்கிறது. எனினும் குறிப்பிடத்தக்க இறக்கங்கள் மே மற்றும் ஜூன் மாதங்களில் இருக்கக்கூடுமென்றும் ஆண்டுமுழுவதிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்குமென்றும் கூறுகிறது.

மிகச்சிறந்த சாத்தியக்கூறாக நவம்பர், டிசம்பரில் நாணயம் குறைந்த அளவாக $60,000களில் வர்த்தகமாகும் என்றும், டிசம்பர் 27ல் $65,282.83 என்ற ஆண்டு உச்சத்தைத் தொடுமென்றும் சொல்கிறது. அதன்பின் ஒரு சிறிய வீழ்ச்சியைக் கண்டு ஆண்டு இறுதியில் $64,810.43க்கு சற்று மேலே முடியும் என்கிறது. எனினும் இத்தளத்தின் சராசரி கணிப்பு, வருடாந்திர உச்சம் $56,767.68 என்றும் அதை டிசம்பர் 27ல் எட்டுமென்றும், ஆண்டு இறுதி விலை $56,356.90 ஆக இருக்குமென்றும் கணிப்பதைக் கவனிக்கலாம். 

இதில் மேலும் முக்கியமான ஒன்று, மிக எச்சரிக்கை கொண்ட கணிப்புப்படி டிசம்பர் 27ல் வருடாந்திர உச்சமாக $48,252.53 இருக்குமென்றும் ஆண்டு இறுதி விலை $47,903.37 இருக்குமென்றும் கணிக்கிறது. இத்தளம் ஓர் எழுச்சி இருக்குமென்றும் ஆனால் சிலர் கணிப்பதைப் போல பெரிதாக அது இருக்காது என்றும் கூறுகிறது. இந்தத் தளத்தின் வாய்ப்புள்ள இந்த மூன்று கணிப்புகளின்படி, இந்த ஆண்டில் BTC புதிய உச்சங்களை எட்டாது.

கவனத்தில் கொள்ள இறுதியாக சில விசயங்கள். முதலில், கணிப்புகள் பெரும்பாலும் தவறானவை. $100,000 என்ற அளவில் பிட்காயின் வர்த்தகமாவது என்பது முதலீட்டாளர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் மிகவும் ஆர்வத்துடன் சமீபகாலத்தில் எதிர்பார்த்துவரும் ஒன்று. எனவே குறிப்பாக BTC-யின் சமீபத்திய இழப்புகளை நாம் மனதில் கொண்டால் விருப்பப்படி நினைக்கும் போக்கு இருப்பதற்கு, முழுக்கவே வாய்ப்புள்ளது.

இரண்டாவதாக, கிரிப்டோகரன்சி சூழலமைப்பில் பிட்காயின் ஒரு நெருக்கடியான இடத்தில் உள்ளது. வரவிருக்கும் ஆண்டில் நாணயத்தில் செயல்பாடு மிகவும் முக்கியமானது. அது நன்றாகச் செயல்பட்டால், கிரிப்டோகரன்சியில் மலர்ச்சி ஏற்படக்கூடும். ஒருவேளை மோசமாக இருந்தால், ஒரு வீழ்ச்சியை நாம் பார்க்க வேண்டியிருக்கும். அமெரிக்க அரசு ஒழுங்குமுறையை அறிமுகப்படுத்துகிறதா என்பதையும் நாம் பார்க்க வேண்டும். ஏனெனில் அது தவிர்க்கமுடியாதபடி பிட்காயின் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். நிலவரம் நிச்சயமற்று காணப்படுவதால், நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிட்காயின் - US டாலர் வர்த்தகம்: BTC/USD விளக்கப்படம்

Bitcoin to US Dollar
தினசரி மாற்றம்
23427.5
குறைவு: 23375.8
அதிகம்: 23579.8

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பிட்காயின் திரும்பவும் மேல் எழுமா?

கிட்டத்தட்ட நிச்சயமாக எழும். ஆனால் இந்த நிலையில் நமக்குத் தெரியாதது என்னவென்றால், திரும்பவும் எப்போது எழும், எந்த அளவுக்கு எழும், எந்த மட்டத்திலிருந்து எழத் தொடங்கும் என்பதுதான். 2009ல் பிட்காயின் தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து அது நான்காண்டு சுழற்சிகளைக் கொண்டு இயங்கி வருவதையும், 2014 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகள் கடுமையான இழப்புகளை ஏற்படுத்தின என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். கருத்தியல் ரீதியாக, இதன் அர்த்தம் அடுத்த நான்காவது ஆண்டாக 2022 உள்ளது. ஆனால் சில ஆய்வாளர்கள் ஏறுமுகச் சுழற்சிகளின் நீளம் அதிகரித்துவருவதால் கிரிப்டோ பனிக்காலம் குறித்துப் பேசுவது முதிர்ச்சியற்றது என்றும் சொல்கிறார்கள். இருப்பினும் அவர்கள் சொல்வது சரி என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

பிட்காயினில் நான் முதலீடு செய்ய வேண்டுமா?

இதற்கு நீங்கள் மட்டும்தான் விடையளிக்க முடியும். இது சந்தை குறித்த உங்கள் புரிதலையும் உங்களால் எடுக்க முடியும் அபாய அளவையும் பொறுத்தது. பிட்காயினின் மிகப்பெரிய வளர்ச்சிக்கு பல ஆண்டுகள் எடுக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் மற்றும் முகடுகளையும், பள்ளங்களையும் சந்திக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அதேபோல உங்கள் சொந்த ஆராய்ச்சியை பொதுவாக BTC மற்றும் கிரிப்டோ சந்தையில் நீங்கள் செய்துகொள்ள வேண்டும். பிட்காயின் விலை மிகவும் மாறியல்பு கொண்டது என்பதையும் விலைகள் ஏறவும் இறங்கவும் செய்யும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். உங்களால் இழக்க முடிந்த அளவுக்கு அதிகமாக முதலீடு செய்யாதீர்கள்.

இப்போதைக்கு பிட்காயின் ஒரு நல்ல முதலீடு தானா?

இருக்கலாம். இது குறுகிய காலம் முதல் இடைக்காலத்தில் நாணயம் எப்படி நகர்கிறது என்பதைப் பொறுத்த ஒன்று. அது மேலே சென்றால், தற்போது நாம் ஒரு சரிவில் இருக்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டும். அது கிரிப்டோவில் முதலீடு செய்ய சிறந்த நேரமாகவும் இருக்கும். மாறாக, அது தொடர்ந்து விழுந்தால், சிறிது காலம் பொறுத்திருக்கலாம் என்பதைக் காட்டும். பிட்காயின் இப்போதும் நம்பமுடியாத அளவில் 13 வயதே ஆன இளமையான சொத்தாகத்தான் உள்ளது. ஒழுங்குமுறை குறித்து ஏகப்பட்ட நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. ஒருவேளை வேறொரு கிரிப்டோகரன்சி முன்னேறி வந்து உலகின் மிகப்பெரிய கிரிப்டோ என்ற BTCயின் இடத்தைப் பிடிக்கவும் கூடும்.

கணிப்புகள் நேர்மறையாக இருப்பதாகத் தோன்றினாலும், கிரிப்டோகரன்சி கணிப்புகள் மிகப் பெரும்பாலும் தவறானவை. எனவே நீங்கள் உங்கள் சொந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும். விலை ஏறவும் இறங்கவும் செய்யும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். மேலும் நீங்கள் இழப்பைத் தாங்கக்கூடிய அளவிற்கு அதிகமாக முதலீடு செய்யாதீர்கள்.

மேலும் படிக்க:

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image