பிட்காயின் எளிய விளக்கம்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

By Currency.com Research Team

வாலெட்டுகளிலிருந்து பிளாக்செயினுக்கு, மதிப்பீட்டிற்கான பரிமாற்றம், பிட்காயின் பற்றி எளிய சொற்களில் விளக்குகிறோம்

பிளாக்செயின், கிரிப்டோகரன்சிகள், பரவலாக்கம் அல்லது மைய நீக்கம், HODL, திமிங்கலங்கள், பிளாக் தேட்டம், கோல்டு வாலெட்டுகள், டோக்கன் ஆக்குதல், பம்ப் மற்றும் டம்புகள். இந்த வார்த்தைகள் எல்லாம் கேட்டு வியர்த்துக் கொட்டினால், அது உங்களுக்கு மட்டுமல்ல.

கிரிப்டோ உலகமானது உலகளாவிய பொருளாதாரத்தில் அத்தியாவசியப் பங்களிப்பைச் செலுத்தக் கனவுகாண்கிறது – டாலர்கள் மற்றும் பவுண்டுகளுக்கு மாற்றான ஒன்றை வழங்குவதன் மூலம்.

ஆனால் அந்தோ பரிதாபம். இது துறைசார் சொற்களாக இருப்பதால் பலரும் இதைப் புரிந்துகொள்வது சாத்தியமில்லை என்று நினைக்கிறார்கள். பிட்காயின் எளிய விளக்கம் – உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பற்றி தெளிவான விளக்கத்தை வாசியுங்கள்.

பிட்காயின் பொருள்விளக்கம்

எளிமையான சொற்களில் பிட்காயின் என்றால் என்ன என்று கூறமுடியுமா? அடிப்படையில், பிட்காயின் என்பது மத்திய வங்கியின் இடையீடு இல்லாமல் உருவாக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் கரன்சி.  அமெரிக்காவின் பண அமைப்புக்கு ஃபெடரல் ரிசர்வ் பொறுப்புடையதாக இருக்கையில், பிட்காயினுக்கு எந்தவொரு தனிநபரோ அல்லது அமைப்போ பொறுப்புடையதாக இருப்பதில்லை.

இதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வதற்கு, பிட்காயின் ஏன் உருவாக்கப்பட்டது என்று பார்ப்பது நல்லது. 2008ல், சடோஷி நகமோடோ என்ற புனைப்பெயர் கொண்ட ஒருவர் கிரிப்டோகரன்சிக்கான தனது தொலைநோக்குப் பார்வையை ஒரு வெள்ளைத் தாளில் எழுதியமைத்தார்.

மக்கள் வங்கியையோ அல்லது PayPal-ஐயோ பயன்படுத்தாமல் மின்னணு முறையில் ஒருவருக்கொருவர் பணம் செலுத்திக் கொள்ளும் ஓர் உலகத்தை அவர்கள் கற்பனை செய்தனர். முக்கியமாக நிதித்துறையின் விதிமுறைத் தளர்வுகள் காரணமாக உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு உடனடியாக தோன்றிய கணக்கு இது.

தொகை செலுத்தும்போது குறைவான கட்டணங்கள் இருக்குமென்பதை நகமோடோ இதன் மிகப்பெரிய பலன்களில் ஒன்றாகக் கற்பனை செய்தார். ஒரு வங்கியை நடத்துவது செலவுகிக்க தொழில் – அலுவலகச் செலவுகள் இருக்கும்; பாதுகாப்பைப் பற்றி யோசிக்க வேண்டும் – இந்தச் செலவுகள் பெரும்பாலும் நுகர்வோர் தலையில் கட்டப்படும். அவரது தொலைநோக்குப் பார்வையானது ஒவ்வொருவரும் தனது சொந்த வங்கியாகச் செயல்படவும் இடைநிலையர்கள் யாரும் தேவையில்லாத ஓர் அமைப்பை உருவாக்குவதும் ஆகும்.

இது தெளிவாக நம்மை பிட்காயின் எப்படி உருவாக்கப்பட்டது என்ற இடத்துக்குக் கொண்டு வருகிறது. தொடக்கத்தில், கிரிப்டோகரன்சியை நிலத்திலிருந்து எடுக்க 30,000 வரிகள் கொண்ட பிளாக்செயின் நிரல் ஆனது – பிட்காயினுக்கு அடித்தளமாக இருக்கும் தொழில்நுட்பத்தின் பெயர் பிளாக்செயின். 

இந்த நீண்டகதையை சுருக்கமாகச் சொல்வதென்றால், பிளாக்செயின் என்பது ஒரு பொதுவானதும் வலைத்தொடர்பில் நடைபெறும் ஒவ்வொரு பரிவர்த்தனைகளின் முழுக்கவே டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தரவுதளமாகவும் உள்ளது.

பரிவர்த்தனைகளின் பண்டில்கள் பிளாக்குகளில் வைக்கப்பட்டு அதற்கு முன்னால் உள்ள பிளாக்குகளின் சங்கிலியில் இணைக்கப்படுகிறது. ஒரு சிக்கலான புதிரைத் தீர்க்கும்போது மட்டுமே ஒரு புதிய பிளாக்கைச் சேர்க்கமுடியும் – அதைச் செய்யக்கூடிய முதல் நபர் பிட்காயின்களை வெகுமதியாகப் பெறுகிறார்.

பிட்காயின் எளிமைப்படுத்தப்பட்டது: எத்தனை பிட்காயின்கள் உள்ளன?

உண்மையில் எத்தனை பிட்காயின்கள் தான் உள்ளன? சுலபமாக, எளிய வார்த்தைகளில் சொல்வதெனில் 2009 ஜனவரியில் நேரலைக்கு பிட்காயின் வந்ததிலிருந்து, மொத்தம் 21 மில்லியன் வழங்கலாக வரையறுக்கப்பட்டது. இதை எழுதும் நேரத்தில், CoinMarketCap கூற்றுப்படி அவற்றில் தோராயமாக 18.9 மில்லியன் ஏற்கெனவே மைனிங் செய்யப்பட்டுவிட்டது.

இன்னும் தோராயமாக 2.1 மில்லியன் கண்டறியப்பட வேண்டியுள்ளது என்பதை ஓர் எளிய கணக்கில் தெரிந்துகொண்டிருப்பீர்கள் – வரும் ஆண்டுகளில், அவற்றைக் கண்டறிவது மேலும் கடினமானதாக இருக்கும். கடைசி பிட்காயின் 2140ல் மைனிங் செய்யப்படும் என்று ஊகங்கள் தெரிவிக்கின்றன. அதாவது இன்னும் 120 ஆண்டுகள் உள்ளன.

பிட்காயினின் இரசிகர்கள் பல மத்திய வங்கிகள் செய்வதிலிருந்து இது உற்சாகமூட்டக்கூடிய மாற்றம் என்கிறார்கள்: திறம்பட கூடுதல் பணத்தை அச்சடிப்பது. அளவுரீதியான எளிமையாக்கம் என்று அறியப்படும் இந்த அளவீடானது, பெரும்பாலும் பணவீக்கத்தை ஏற்படுத்தும். அதாவது பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும்.

நிலையான வழங்கல் மதிப்பை அதிகரிக்கிறது

ஒரு நிலையான வழங்கலைக் கொண்டிருப்பதால், மின்னணு பற்றாக்குறையை பிட்காயின் சமாளித்துவிடுகிறது என்று ஆதரவாளர்கள் கூறுகிறார்கள் – இது ஒவ்வொரு நாணயத்தையும் மேலும் மதிப்பு மிக்கதாக ஆக்குகிறது.

நிகழ் உலகில் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், கொரோனா வைரஸுடன் என்ன நடக்கிறது பாருங்கள். பெருந்தொற்றின் தொடக்கத்தில் கை சுத்திகரிப்பானுக்கான தேவை அதிகரித்தபோது அவற்றுக்கான வழங்கல் அதேயளவில் இருந்தது. இதன் காரணமாக, விலைகள் அதிகரித்து கை சுத்திகரிப்பானின் மதிப்பைக் கூட்டின.

நாம் மேலும் தொடரும் முன்பு, தற்போது சுழற்சியில் இருக்கக்கூடிய 18.9 மில்லியன் பிட்காயின்களின் வழங்கல் குறித்து ஒரு வார்த்தை.  இவை எல்லாம் மைனிங் செய்யப்பட்டுவிட்டன என்பது உண்மையென்றாலு, இப்போதும் செயலிலுள்ள பிட்காயின்களின் எண்ணிக்கை இதைக்காட்டிலும் மிகவும் குறைவானதாகவே இருக்கும்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு, நான்கு மில்லியன் BTC ஏற்கெனவே எப்போதைக்குமாகத் தொலைந்துவிட்டதாக ஒரு கணிப்பு தெரிவிக்கிறது – இவை எல்லாவற்றுக்கும் மேல் இன்னொரு இரண்டு மில்லியன் களவும் போயிருக்கிறது. உண்மையில் பற்றாக்குறைதான்.

நீங்கள் கேட்கலாம், சரி, அது எப்படி மறைந்துபோகும்? பிட்காயின் எங்கு சேமிக்கப்படுகிறது?

எளிதாகச் சொல்வதென்றால், உங்கள் நாணயங்களைச் சேமிக்கும் திறனை தனிப்பட்ட குறிச்சொற்கள் வழங்குகின்றன. இந்தக் குறிச்சொல்லை இழந்துவிட்டால் பேரழிவுச் சூழல்களை ஏற்படுத்தும். நீங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டால் உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு நினைவூட்டலை அனுப்பும்படி நீங்கள் கேட்க முடியும் நிலையில், பிட்காயினில் அப்படியொரு அம்சம் இல்லை.

பிட்காயின் விலை வரலாறு

பிட்காயின் தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து விண்கல்லைப் போன்றதொரு எழுச்சியைக் கண்டுள்ளது.

2011ல் ஒரு பிட்காயின் விலை $0.30 என்று தொடங்கியிஅது. 2017 தொடக்கத்தில், ஒரு பிட்காயினின் மதிப்பு தோராயமாக $998 என்று இருந்தது. 2020 குளிர்காலத்தின்போது, கிட்டத்தட்ட $20,000 விலையை எட்டியது. ஏப்ரல் 2021ல், ஒரு பிட்காயின் விலை $60,000 என்ற தடையை அடைந்தது. ஜூலையில், விலை $30,000க்கு விழுந்து பின் செப்டம்பர் துவக்கத்தில் $50,000ஐ எட்டியது. CoinMarketCap கூற்றுப்படி அதன்பின் நவம்பர் 10ம் தேதி ஒரு புதிய உச்சத்தை அடைந்து $68,789.63 என்று ஆனது. 

உண்மையில், உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியின் மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் என்பதை கடந்த பத்தாண்டுகள் அல்லது அதற்கும் மேலான காலத்தில் நாம் பார்த்த பெரிய இராட்சத வண்டியின் பயணம் என்றால் மிகையில்லை. 2010 மே மாதத்தில் ஒரு முழு BTCஐ ஒரு சென்டுக்கும் குறைவான பணத்தில் வாங்கியிருக்க முடியும் என்பதை நினைத்தால் கிறுக்குத்தனமாகத் தோன்றுகிறதல்லவா.

  • ஆரம்ப நாட்களில் சிலர் ஏகப்பட்ட பணம் சம்பாதித்தார்கள். கேமரன் மற்றும் டைலர் விங்கில்வாஸைப் பாருங்கள். இந்த இரட்டையர் மார்க் ஸக்கர்பெர்க் மீது 2010 தொடக்கத்தில் வழக்கு தொடுத்து $65 மில்லியன் அளவுக்கு செட்டில்மெண்ட் பெற்றார்கள். தங்கள் காயங்களை ஆற்றிக்கொள்ளும் விதமாக 2013ல் பிட்காயின் விலை $120க்கு வர்த்தகமானபோது, $11 மில்லியன் அளவு தொகையை பிட்காயினில் அவர்கள் முதலீடு செய்தார்கள். வேகமாய் ஓடிய நான்கு ஆண்டுகள் கழிந்து அவர்களது BTC 10,000%க்கு மேல் அதிகரித்து – ஒரு நாணயத்தின் விலை $11,000த்தையும் தாண்டி வர்த்தகமானது. இது அவர்களை பில்லியனர்களாக ஆக்கியது. இப்போது சிரித்துக்கொண்டிருப்பது யார்?
  • ஒரு தைரியமான முகத்தைக் காட்ட முயற்சிக்கும் ஒரு நபரான லாஸ்லோ ஹன்யெக்ஸ், இனி என்றென்றைக்குமாக ‘பிட்காயின் பீட்ஸாக்காரர்’ என்று அறியப்படுவார். அன்றாடக் கொள்முதல்களுக்கு பிட்காயினைப் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபிக்கும் முயற்சியில், மே 2010ல் Papa John's-ல் இரண்டு பீட்ஸாக்களை வாங்க BTC 10,000 கொடுத்துத் தடுமாறினார். நிச்சயமாக, அந்த நேரத்தில் பிட்காயினின் மதிப்பு அந்தளவு இல்லைதான் – ஆனால், இதை எழுதும் நேரத்தில் அதன் மதிப்பு தோராயமாக $60k. இதன் உண்மையான அர்த்தம் இரண்டு பீட்ஸாக்களுக்கு 600 மில்லியன் டாலர்களை அவர் கொடுத்திருக்கிறார்... ஐயோ. ஹன்யெக்ஸ் அதற்காக வருத்தப்படவில்லை என்றுதான் சொல்லிவருகிறார்.

பிட்காயின் விலையை எது பாதிக்கிறது?

நீங்கள் கிரிப்டோவுக்கு முற்றிலும் புதியவர் என்றால், பிட்காயினுக்கான ஓர் எளிய விளக்கம் தேவையென்றால், இப்போது நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்கத் துடித்துக் கொண்டிருப்பீர்கள். எப்படி ஒரு மெய்நிகர் கரன்சியின் விலை ஒரு சென்டுக்கும் குறைவாக இருந்து பின் பல்லாயிரம் டாலர்கள் மதிப்புக்கு உயர்ந்தது?

இது மிக நல்ல கேள்வி. பிறகு திரும்பவும் நீங்கள் தங்கம், வெள்ளி அல்லது உங்கள் பையிலுள்ள பணம் போன்ற பிற சொத்துக்களுக்கும் இதையே சொல்லலாம். BTCயின் மதிப்பு ஏன் உயர்ந்து வருகிறதென்றால் அதற்கு பணத்துக்கான எல்லா குணாம்சங்களும் கொண்டிருக்கிறது.

What is your sentiment on BTC/USD?

23682.10
Bullish
or
Bearish
Vote to see community's results!

ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது: நன்கு ஆடையுடுத்திய ஒரு வங்கியாளரை நம்புவதைக் காட்டிலும் கணிதக் கோட்பாட்டின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட மீண்டெழக்கூடிய ஓர் அமைப்பை நீங்கள் நம்புகிறீர்கள். பிட்காயினில் ஆர்வம் காட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால் – வணிகங்கள் அதை ஏற்பதைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை – நாணயத்தின் மதிப்பு மேலும் அதிகரிக்கும்.

இயல்பாகவே, வேறுசில காரணிகளும் உள்ளன. ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்கு, பாதியாக்கம் என்றறியப்படும் நிகழ்வு ஒன்று உள்ளது. சற்று முன்பு சொன்னதில் நீங்கள் கவனம் செலுத்தியிருந்தால், மைனிங் செய்பவர்கள் சிக்கலான கணிதப்புதிரை வெற்றிகரமாகத் தீர்க்கும்போது சங்கிலியில் ஒரு பிளாக்கைச் சேர்த்து BTC வெகுமதியைப் பெறுகிறார்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். 

2009ல் முதன்முதலாக பிட்காயின் தோற்றுவிக்கப்பட்டபோது அது BTC50 என இருந்தது. ஆனால் ஒவ்வொரு நான்காண்டுகளுக்கும் – ஒவ்வொரு210,000 பிளாக்குகளுக்கும் – இந்த வெகுமதியானது 50% குறைக்கப்படும். நவம்பர் 2012ல் BTC25-க்கு அது விழுந்தது; ஜூலை 2016ல் BTC12.5; மே 2020ல் இது BTC6.25 ஆகக் குறைந்தது. அடுத்த பாதியாக்கம் 2024ல் நடைபெறும். ஒரு பாதியாக்கம் நடந்தபின், குறைவான நாணயங்களே சுழற்சியில் இருப்பதால், அதிகத் தேவை காரணமாக விலை அதிகரிக்கிறது.

பிட்காயினுக்கான தேவை தொடர்ந்து வலுவாக இருப்பதாக எடுத்துக் கொண்டால், விலையானது தொடர்ந்து மேலேறும். வழக்கமாக மதிப்பு ஏற்றம் நேரடியாக நடைபெறுவதில்லை – அது தொடங்குவதற்கு ஒரு வருடம் கிட்ட எடுக்கக்கூடும். இந்த முந்தைய Currency.com அம்சத்தில் விரிவாக விளக்கியிருப்பதுபோல, BTC 2012 பாதியாக்கத்துக்குப் பிறகான 12 மாதங்களில் 8,566% அதிகரித்திருக்கிறது – 2016 நிகழ்வுக்குப் பின் 286% அதிகரித்துள்ளது. மே 2020ல் நடந்த பாதியாக்கத்துக்குப் பின், அந்த ஆண்டு முடிவில் BTC விலை கிட்டத்தட்ட 120% அதிகரித்தது.

BTC விலைகளை ஈர்க்கக்கூடியதாக இந்த நிகழ்வு மட்டுமே அடங்கியில்லை. மைய ஓட்டத்துக்கு நெருக்கமாக அது மெதுவாக நகரும்போது, புத்திசாலிகளின் பணம் உள்ளே வரத் தொடங்குகிறது. நாணயத்தின் மதிப்பு மேலும் அதிகரிக்கும்.

பிட்காயினை எங்கு செலவிடுவது

இவையெல்லாம் நம்மை பிட்காயின் எளிய விளக்கத்தின் நுகர்வோருக்கு மிகப் பிடித்தமான பகுதிக்குக் கொண்டு வருகிறது: பிட்காயின் எங்கு ஏற்கப்படுகிறது.

செப்டம்பர் 2021 தொடக்கத்தில், எல் சால்வடோர் நாடு பிட்காயினை சட்டப்பூர்வ பணமாக முதன்முதலாக அறிவித்தது. வியாபாரிகள் டாலரைப் போலவே பிட்காயினை ஏற்பதும் சட்டப்பூர்வமாக கட்டாயமாக ஆனது.

அமெரிக்காவில் சில பெரிய பிராண்டுகள் பிட்காயினில் கொள்முதல் செய்ய நுகர்வோரை அனுமதிக்கத் தொடங்கியுள்ளன. உதாரணமாக Microsoft மற்றும் PayPal போன்றவை பிட்காயினில் தொகை செலுத்தி வெளியேறும் விருப்பத்தேர்வைக் கொண்டிருக்கின்றன. அதேபோல, Tesla சற்றுமுன்பாக தனது எலெக்ட்ரிக் கார்களுக்குத் தொகை செலுத்த BTCயை ஏற்கத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில், எலோன் மஸ்க் மைனிங் செயல்முறையில் உள்ள பாதகமான சூழலின் காரணமாக இந்த முனைப்பை நிறுத்தி வைத்துள்ளார். மேலும் சமீபத்தில், புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவதற்கு மைனர்களின் முயற்சி காரணமாக நிறுவனம் திரும்பவும் நாணயத்தை ஏற்கத் தொடங்கக்கூடும் என்று கூறியுள்ளார்.

மெய்யுலகில் பிட்காயினைப் பயன்படுத்துதல்

ஐரோப்பாவில், பிரபல சூப்பர்மார்க்கெட் சங்கிலிகளும் BTC-யை ஒரு செலுத்துகை முறையாக ஏற்கத் தொடங்கியுள்ளன. ஆனால் Lightning Network போன்ற நிதித் தொழில்நுட்ப புதிய முயற்சிகளில் நுகர்வோர் தங்கள் கிரிப்டோவைக் கொண்டு எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தும்படி எப்படி ப்ரீபெய்டு பற்று அட்டைகள் போன்ற தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன என்பதுதான் ஒருவேளை மிகவும் ஆர்வமூட்டும் புதுமையாக இருக்கக்கூடும்.

இது எப்படி வேலை செய்கிறதென்றால்: ஜெர்ரி $5.99 மதிப்புள்ள ஒரு சீஸ் கட்டியை வாங்க கடைக்குச் செல்கிறார். அங்கே பரிவர்த்தனையை ஈடுசெய்ய அவரது BTC உடனடியாக பிட்காயினிலிருந்து டாலருக்கு மாற்றப்பட்டு – வியாபாரிகள் அதை ரொக்கப் பணத்தில் பெறுகிறார்கள்.

பிட்காயினையும் பிற கிரிப்டோகரன்சிகளையும் அன்றாடம் நுகர்வோருக்கு மேலும் கிடைக்கக்கூடியதாக உருவாக்கும் கருவிகளை நாம் கொண்டாட வேண்டும் – குறிப்பாக வியாபாரிகள் அவற்றை ஏற்பதை அவை எளிதாக்குகிறது என்றால். இவை சிறிய வளர்ச்சிகளாக இருந்தாலும், ஒரு கரன்சியாக பிட்காயின் இன்னமும் மைய ஓட்டத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது.

பல பில்லியன்களுக்கு அதிபதியும் முதலீட்டாளருமான வாரன் பஃபெட், அமெரிக்காவின் நான்காவது பெரிய பணக்காரர். இவர் ஒரு கிரிப்டோ சந்தேகவாதி என்று அறியப்படுகிறார். CNBCக்கு அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், பிட்காயினை தான் ஒருபோதும் வாங்க விரும்பவில்லை என்று கூச்சமின்றி கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

கிரிப்டோகரன்சிகள் அடிப்படையில் எந்த மதிப்பும் இல்லாதவை. அவை எதையும் உற்பத்தி செய்வதில்லை. பின்னொருநாள் யாரோ ஒருவர் வந்து உங்களிடமுள்ள நாணயத்துக்கு அதிகப் பணம் தருவார் என்று நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால் அந்த நபருக்கு பிரச்சினை வருகிறது. மதிப்பு என்று பார்க்கையில்: பூஜ்ஜியம். வாரன் பஃபெட்

அவரை சந்தேகவாதியாகவே விட்டுவிடலாம்.

வாரன் பஃபெட் என்ன சொல்லப்போகிறார் என்பதைக் கவனிக்க பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சில கிரிப்டோ விசிறிகள் 91 வயதுக்காரரின் ஆலோசனையை எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்கிறார்கள். காரணம் அவர் ஒரு ஸ்மார்ட் போனையோ அல்லது மின்னஞ்சலையோ பயன்படுத்துபவர் அல்ல. இறுதியாக 2020கள் பிட்காயினுக்கு முக்கியமான கட்டமாக இருக்கப்போகிறது.

பிரிட்ஜ்வாட்டர் அசோசியேட்ஸின் நிறுவனர் ரே டாலியோ போன்ற சில முதலீட்டாளர்கள் பிட்காயினை அதிக மதிப்புள்ளதாகக் கருதுகிறார்கள். ”ஒரு கணினியில் நிரல் எடுதப்பட்ட ஓர் அமைப்பின் வாயிலாக ஒரு புதுவகை பணத்தைக் கண்டுபிடிப்பதும் அது 10 வருடங்களாக இயங்குவதும் பண வகையாகவும் சேமித்து வைக்கக்கூடிய செல்வமாகவும் வேகமாகப் பிரபலமடைந்து வருவதும் வியத்தகு சாதனை” என்று சொல்கிறார்.

பிட்காயினுக்கு பகைவர்களும் விசிறிகளும் இருக்கிறார்கள். இருதரப்பினருமே இது கடுமையான ஏற்ற இறக்கங்களைக் கொண்டது என்பதையும் இது ஆபத்தான பந்தயமாக இதை ஆக்குவதுடன் அதிக அபாயத்தை நாடக்கூடியவர்களுக்கு மட்டுமே ஏற்ற முதலீடு என்பதையும் ஏற்கிறார்கள். நாணயத்தின் விலை அடையாளக்குறியும் செல்வாக்குமிக்கவர்கள் அதைப்பற்றி நினைப்பதைப் பொறுத்து மிகவும் சந்தேகத்துக்குரியதாக உள்ளது. எலோன் மஸ்க் இது சிறந்தது என்று சொன்னால், விலை மேலே செல்கிறது. பில் கேட்ஸ் அப்படியில்லை என்று சொன்னால், கீழே இறங்குகிறது.

பிட்காயின் என்பது பங்குகளைப் போல இல்லை. உதாரணமாக Apple பங்குகளை எடுத்துக் கொண்டால், அதன் மதிப்பு இலாபத்தையும், வளர்ச்சிக்கான சாத்தியங்களையும் – அதாவது அதன் அடிப்படைகளை ஆதாரமாகக் கொண்டது. எனினும் பிட்காயினைப் பொறுத்தவரை அதன் மதிப்பு பெருமளவில் தேவை-அளிப்பு விகிதத்தை அடிப்படையாகக் கொண்டது. அதை மக்கள் விரும்பினால், அது மேலே செல்கிறது. விரும்புவதை நிறுத்தினால், கீழே இறங்குகிறது. 

இறுதியாக சில எண்ணங்கள்

சில ஆய்வாளர்கள் புதிய டிஜிட்டல் தங்கமாக பிட்காயின் ஆகி வருவதால் எப்போதும் அதிகரிக்கும் உயரங்களை அடையுமென்று கணிக்கிறார்கள். மற்றவர்கள் இது ஒரு மாயை என்றும் விரைவில் கீழே விழுந்து ஒன்றுமில்லாமல் போய்விடும் என்கிறார்கள்.

எளிய வார்த்தைகளில் சொல்வதென்றால், பிட்காயின் மைய ஓட்டத்துக்கு வருமா இல்லை – தனது தற்போதைய மதிப்பைப் பேணுவதில் போராடி பிறகு நொறுங்கி ஒன்றுமில்லாமல் சிதறுமா என்பதை காலம்தான் சொல்லும்.

உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்து வர்த்தகத்துக்கான உங்கள் முடிவு அபாயத்தின் மீதான உங்கள் மனப்பாங்கு, இந்தச் சந்தையில் உங்கள் நிபுணத்துவம், உங்கள் தொகுமுதலீட்டின் பரவல் மற்றும் பணத்தை இழப்பதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் போன்ற காரணிகளைச் சார்ந்தது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். உங்களால் தாங்க முடிந்த இழப்பின் அளவுக்குமேல் ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள்.

பிட்காயின்களை எங்கு சேமித்து வைப்பது

முதலில் இது பெரும்பாலும் எதன் பொருட்டு பிட்காயின் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு மட்டும் என குறுகிய கால முதலீட்டுக்காக அதை வாங்குகிறீர்கள் என்றால், அதை ஒரு சந்தையில் விட்டுவைத்திருப்பது ஏற்கக்கூடியது. 

எனினும், தற்போது இருக்கும் விலையைக் காட்டிலும் நீண்ட கால நோக்கில் அதன் விலை மிக அதிகமிருக்கும் என்று நினைத்து பிட்காயினை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால், வாலெட்டில் முதலீடு செய்வது குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும். வாலெட் எனப்படுவது ஒரு இணைய வங்கிக் கணக்கு போன்றது. இது ஒரு கடவுச்சொல்லாகச் செயல்படும் ஒரு குறியீட்டின் மூலம் பாதுகாக்கப்பட்டு உங்கள் பிட்காயினைச் சேமித்துவைக்கும் இடமாக இருக்கும். 

வெவ்வேறு வகையான வாலெட்டுகள் உள்ளன. ஆனால் பரவலாக அவற்றை இரு வகைகளாகப் பிரிக்கலாம் – ஹாட் வாலெட்டுகள் மற்றும் கோல்டு வாலெட்டுகள். பல்வேறு தீர்வுகள் உள்ளன. உங்களைப் பொறுத்தவரை விவேகமானதும் பாதுகாப்பானதுமான ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பிட்காயின்களை எங்கு பெறுவது

பிட்காயினை நீங்கள் Currency.com தளத்தில் வாங்கலாம். இது உங்கள் கிரிப்டோகரன்சியை பாதுகாப்பாக வைத்திருக்க இருகாரணி உறுதிப்பாட்டு நடைமுறைகளால் தாங்கப்பட்டு மிக உயர்ந்த நிலை பாதுகாப்பை வழங்குகிறது.

பிட்காயின் ஒரு நல்ல முதலீடுதானா?

இருக்கலாம். 2021ல் உறுதியாக புதிய உச்சங்களை பிட்காயின் அடைந்துள்ளது. இதைச் சொல்லும்போது, நீங்கள் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். கிரிப்டோகரன்சிகள் அதிகளவு ஏற்ற இறக்கங்களுடன் இருக்கின்றன. விலைகள் நிச்சயம் கீழே இறங்கவும் மேலே ஏறவும் செய்யும். நீங்கள் உங்கள் சொந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் ஒருபோதும் உங்களால் தாங்க முடிந்த இழப்பைக் காட்டிலும் கூடுதலாக முதலீடு செய்யாதீர்கள்.

இந்த இணையதளத்தில் வழங்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆய்வாகவோ அல்லது முதலீட்டு ஆலோசனையாகவோ கருதக்கூடாது. இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்ட எந்தவொரு அபிப்பிராயமும் எழுதியவரின் பார்வைக் கோணத்தை அடிப்படையாகக் கொண்டது; Currency Com Bel LLC அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக உருவாவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்ட தகவல்களை நாங்கள் ஏற்கவோ அல்லது அதன் துல்லியம் அல்லது முழுமைக்கு உத்தரவாதம் அளிக்கவோ இல்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களைச் சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் தெரிந்தே, சுயமாக இதிலுள்ள அனைத்து அபாயங்களையும் ஏற்றுச் செயல்படுகிறீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image