பிட்காயின், பிட்காயின் கேஷ் மற்றும் பிட்காயின் SV: தலைசிறந்த வழிகாட்டி
பிட்காயினுக்குப் பிறகு ஒவ்வொன்றும் பெரிய வளர்ச்சிகளை வழங்குவதாகக் கூறும் பல்வேறு ஆல்ட்காயின்கள் தோன்றியுள்ளன. பிட்காயின், பிட்காயின் கேஷ் மற்றும் பிட்காயின் SV இவை பற்றிய எங்கள் எளிய வழிகாட்டி இதோ:

பிட்காயினைச் சுற்றிப் பார்ப்பதில் உங்களுக்குச் சிரமமில்லை என்றால், இந்த கிரிப்டோகரன்சிக்கு உண்மையில் இரண்டு தூரத்து உறவினர்கள் உண்டு: பிட்காயின் கேஷ் மற்றும் பிட்காயின் SV. ஒவ்வொன்றும் பிரத்யேகக் குணாதிசயங்களையும் தனக்கென சந்தை மூலதனத்தையும் கொண்டுள்ளது. அவற்றின் மதிப்பும் வெவ்வேறானவை.
இங்கே பிட்காயின், பிட்காயின் கேஷ் மற்றும் பிட்கயின் SV ஆகியவற்றை நாம் பார்க்கிறோம்- ஒவ்வொன்றின் சாதக பாதகங்களை அறிந்துகொள்வோம்.
பிட்காயினுக்கும் பிட்காயின் கேஷுக்கும் இடையில் என்ன வேறுபாடு?
பிட்காயினுக்கும் பிட்காயின் கேஷுக்கும் - அல்லது BTC மற்றும் BCH இடையிலான வேறுபாட்டைப் பார்ப்பதிலிருந்து தொடங்குவோம்.
பிட்காயின் (BTC) முதன்முதலாக ஜனவரி 2009ல் தோற்றுவிக்கப்பட்டதை நீங்கள் அறிந்திருக்கக் கூடும் - இதுவொரு வங்கிகளுக்கும் நிதிசார் சூழல்மண்டலத்துக்கும் சவால்விடக்கூடிய உற்சாகமூட்டும் புதிய இணைக்கு இணையான மின்னணு ரொக்க அமைப்பாக அறிவிக்கப்பட்டாலும், நாம் அறிவதுபோல், இதன் சாத்தியமுள்ள ஆபத்துக்கள் விரைவில் வெளிப்படத் தொடங்கின.
இதன் மிகப்பெரிய குறைபாடுகளில் ஒன்று பிட்காயினின் மாறத்தக்க அளவு. பிட்காயின் பிளாக்செயினால் ஒரு நொடிக்கு ஏழு பரிவர்த்தனைகளை மட்டுமே கையாள முடியும். காரணம் இதன் பிளாக் அளவு 1MB என வரையறுக்கப்பட்டுள்ளது. கிரிப்டோ ஆலோசகர்களுக்கு இதுவொரு மிகப்பெரிய கவலை - இந்த கிரிப்டோ கரன்சியெல்லாம் எப்படி நொடிக்கு 65,000 பரிவர்த்தனைச் செய்திகளைச் செயலாக்கம் செய்யும் விசா போன்றவற்றுடன் போட்டியிடமுடியும்?
ஒருவகையான சரிக்கட்டல் தேவை என்பது ஏற்கப்பட்டுள்ளது. இதனால் பிட்காயின் அளவு மாறத்தக்கதாகவும் வரவிருக்கும் ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படும் வளரும் தேவையைச் சமாளிக்கவும் முடியும். ஆனால் இந்த மேம்படுத்தல்கள் எப்படியிருக்கும் என்பதில் பல முரண்பாடுகள் உள்ளன - மைனர்கள் மற்றும் உருவாக்குநர்கள் குழு தூண்டப்பட்டு ஒரு சீர்படுத்தும் நடவடிக்கை ஆகஸ்ட் 2017ல் மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான் பிட்காயின் கேஷ் (BCH) பிறந்தது.
BCH 32MB பிளாக் அளவைக் கொண்டது. அதாவது இது அன்றாட அடிப்படையில் கணிசமான அளவு அதிக பரிவர்த்தனைகளைக் கையாள முடியும் (சில கணிப்புகளின் படி இரண்டு மில்லியன் வரை). செலுத்துகைகளையும் விரைவாகச் செயல்படுத்த முடியும். இவ்வாறாக பிட்காயின் வலைத்தொடர்பில் சிலநேரங்களில் காணக்கூடிய இம்சைப்படுத்தும் காத்திருப்பு நேரங்களையும் தேக்கங்களையும் தவிர்க்கப்படுகிறது. இவற்றை நிறைவேற்றுவதும் பெரும்பாலும் மிக மலிவானதாக உள்ளது. கிரிப்டோவை ஏற்கும் சில்லறை வணிகர்களிடையே பிட்காயின் கேஷ் பிரபலமான செலுத்துகை முறையாக விரைவாக மாறிவருகிறது.
எனினும், பிட்காயின் கேஷ் மற்றும் பிட்காயின் விவாதத்தில் எல்லாமே மகிழ்ச்சிகரமானதாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். பெரிய பிளாக் அளவுகளுக்கு பாதுகாப்பைச் செயல்படுத்துவ்தில் சில கவலைகள் உள்ளன. எப்படி BCH-ன் சந்தை மூலதனமானது BTCயினுடையதைக் காட்டிலும் மிகக் குறைவாக உள்ளது என்பதையும் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள் - நாணயமானது கிரிப்டோ சமூகத்தில் பரவலான ஒப்புதலை இன்னும் பெறவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.
பிட்காயினுக்கும் பிட்காயின் SVக்கும் இடையில் என்ன வேறுபாடு?
பிட்காயின் கேஷுக்கும் பிட்கயினுக்குமான விவாதத்திலிருந்து நகர்ந்து வருவோம். இப்போது நாம் கவலைப்படுவதற்கு வேறொரு ஆல்ட்காயின் உள்ளது: பிட்காயின் SV (இதில் SV என்பது சடோஷியின் தொலைநோக்கு (Satoshi's Vision))
BTCயிலிருந்து BCH பிரிந்தபின் உருவாக்குநர்களின் முரண்பாடுகள் முடிவுக்கு வருமென்று நீங்கள் நினைத்திருந்தால், அது தவறானது. பிட்காயின் கேஷ் பிளாக்செயினுக்குப் பரிந்துரைக்கப்பட்ட சில தொழில்நுட்ப மேம்படுத்தல்கள் - ஒரு பிளாக்குக்குள் பரிவர்த்தனைகள் ஒரு குறிப்பிட்ட வரிசையைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் திட்டங்கள், ஸ்மார்ட் ஒப்பந்தச் செயல்பாட்டுகளை வழங்கும் ஓர் இலக்கு போன்றவை - உலகளாவிய ஆதரவைப் பெறவில்லை. இதன் காரணமாக இன்னொரு செல்லுபடியாக்க மாற்றம் இப்போது BCH பிளாக்செயினில் ஏற்பட்டது.
What is your sentiment on BCH/USD?
பிட்காயின் கேஷ் மற்றும் பிட்காயின் SV
பிட்காயின் SV என்றால் என்ன? நல்லது. அக்டோபர் 2008ல் வெளியான பிட்காயினுக்கான சடோஷி நகமோட்டோவின் வெள்ளையறிக்கையைக் கறாராகப் பின்பற்றும் உறுதிமொழியைக் கொண்டது.
பிட்காயினா, பிட்காயின் SVயா என்று வரும்போது - அல்லது BCH-ஆ BSVயா என்று பார்க்கையில் - ஒரு முக்கியமான வேறுபாடாக பிளாக்கின் அளவு உள்ளது. இது BTCயின் பயனற்ற 1MB அளவைக் காட்டிலும் 128 மடங்கு பெரிதென்று தோற்றுவிப்பின்போது கூறப்பட்டது. பிட்காயின் SV “உலகிலுள்ள ஒவ்வொரு செலுத்துகை அமைப்பையும் சிறந்த பயனர் அனுபவம், மலிவான விற்பனையாளர் செலவு மற்றும் போதிய அளவு பாதுகாப்பு போன்றவை மூலம் மாற்றமுடியுமென்று” கருதுகிறது.
தரவுகளின்படி பிட்காயின் பிளாக்செயினில் பரிவர்த்தனை செய்வது பிட்காயின் SV மூலம் வர்த்தகம் செய்வதைக் காட்டிலும் கிட்டத்தட்ட 11,000 மடங்கு அதிகச் செலவு மிக்கது - தங்கள் செலவுகளைக் குறைக்க விரும்புவோருக்கு இதுவொரு முக்கியமான தீர்மானிக்கும் காரணியாக இருக்கக்கூடும். ஆனால் இந்தச் சரிப்படுத்தும் போராட்டம் - பிட்காயின் கேஷ் மற்றும் பிட்காயின் SV - சிலநேரங்களில் மோசமாயிருக்கும்.
பிட்காயின் SVயின் நிறுவனர் கிரெய்க் ரைட் ஒரு தொழில் முனைவோர். இவர் தொடர்ந்து தான்தான் பிட்காயினைக் கண்டுபிடித்த பெயரறியாத சடோஷி நகமோடோ என்று உரிமைகோரி சர்ச்சையைக் கிளப்பி வந்தார். இவர் மோசடிக்காரர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார் - BCH பிரபல கிரிப்டோ சந்தைகளில் கிடைக்கும்போது, பினான்ஸ் உள்ளிட்ட பல்வேறு செயற்தளங்கள் BSV உடன் சேர்த்து பட்டியல் நீக்கம் செய்து அசாதாரண நடவடிக்கையை எடுத்துள்ளன. 2019ல் நிறுவனமானது பிட்காயின் SV எதிர்பார்க்கப்பட்ட உயர்தரத்தைப் பூர்த்திசெய்யவில்லை என்று கூறி, பயனர்களைப் பாதுகாப்பதற்காக இந்த வர்த்தக இணைகள் இடைநிறுத்தம் செய்யப்படுவதாகத் தெரிவித்தது.
பிட்காயினுடன் ஒப்பிட பிட்காயின் SVயின் விலை என்ன? இதில் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. இதை எழுதிய 17 டிசம்பர் 2021ம் தேதிப்படி, ஒரு BSV விலை தோராயமாக $121.66. ஒரு BTC $47,154.38 - அதாவது ஒரு பிட்காயின் வாங்க 288 BSV நாணயங்கள் செலவாகும் என்பது இதன் அர்த்தம்.
BTC vs BCH vs BSV: தீர்ப்பு:
மொத்தத்தில், இந்தச் சரிப்படுத்தும் செயல்பாட்டை மேற்கொண்ட உருவாக்குநர்கள் அது கிரிப்டோ உலகத்தை மேலும் குழப்பத்துக்கும், அன்றாட நுகர்வோருக்கு புரிந்துகொள்ளச் சிரமமானதாகவும் ஆக்கும் என்பதைப் பற்றி யோசித்தார்களா என்று உங்களுக்கு ஆச்சரியமாய் இருக்கலாம். இவை அனைத்தும் ஒரே மாதிரி பெயர்களைக் கொண்டுள்ளன. அதாவது இந்தத் தொழில்நுட்ப நுட்பங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கே நாம் பிஎச்டி முடித்திருக்க வேண்டும்போலத் தோன்றுகிறது.
பிட்காயின் கிரிப்டோகரன்சிகளிலேயே மிகப்பெரியது. வெகுதூரத்தில் உள்ளது - அதன் நிலைப்பாட்டிற்கு BCH அல்லது BSV அச்சுறுத்தலாக இருக்குமென்று தோன்றவில்லை. வரவிருக்கும் ஆண்டுகளில், கிரிப்டோ சூழல்மண்டலத்தில் பிட்காயின் கேஷும் பிட்காயின் SVயும் இணைந்து இருக்க வாய்ப்புள்ளதா அல்லது இவற்றில் ஒன்று இழுத்துச் செல்ல முடியாமல் நின்றுவிடுமா என்று பார்ப்பது சுவாரசியமானது.
CoinMarketCap கூற்றுப்படி 15,764 கிரிப்டோகரன்சிகளுக்கும் மேல் உள்ளன- வேறு பல டிஜிட்டல் சொத்துக்கள் மலிவான விலையில், மாறத்தக்க அளவில், சில்லறை வணிகர்களுக்கு உகந்த செலுத்துகை முறைகள் போன்றவற்றை வழங்கும் முயற்சியில் உள்ளன - இதில் அதிகளவில் போட்டியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்ததின் அடிப்படையில் பிட்காயின், பிட்காயின் கேஷ் அல்லது பிட்காயின் SVயிலிருந்து மேலும் கிளைத்துப் பிரியும் வாய்ப்புகள் இல்லை என்று சொல்வதற்கில்லை. ஒரு கட்சிக்காரரிடம் மட்டுமே கிரிப்டோகரன்சியின் அல்லது அதன் பிளாக்செயினின் முழுக்கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பது மையமற்று இருப்பதன் பலன்களில் ஒன்றாக இருப்பினும், மேம்பாடுகளைச் செய்வதற்கு சிறந்த நடைமுறைகளை மேற்கொள்ள அனைவரது ஒப்புதலையும் பெறுவது பொதுவாகச் சிரமமான ஒன்றாக இருப்பது இதன் வெளிப்படையான குறைபாடாகும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எவ்வளவு பிட்காயின் கேஷ் நாணயங்கள் உள்ளன?
17 டிசம்பர் 2021ம் தேதிப்படி அதிகபட்ச வழங்கல் 21,000,000 உடன் 18,929,881 BCH நானயங்கள் சுழற்சியில் உள்ளன.
எவ்வளவு BSV புழக்கத்தில் உள்ளன?
17 டிசம்பர் 2021ம் தேதிப்படி அதிகபட்ச வழங்கல் 21,000,000 உடன் 18,926,245 BSV நானயங்கள் சுழற்சியில் உள்ளன.
எவ்வளவு பிட்காயின்கள் புழக்கத்தில் உள்ளன?
17 டிசம்பர் 2021ம் தேதிப்படி அதிகபட்ச வழங்கல் 21,000,000 உடன் 18,903,225 BTC நானயங்கள் சுழற்சியில் உள்ளன.