போல்காடாட் நாணய விலைக் கணிப்பு: DOT மேலே செல்லுமா?

By Currency.com Research Team
• புதுப்பிக்கப்பட்டது

இதைச் செய்வது ஒருபோதும் எளிமையானதில்லை என்றாலும், போல்காடாட் (Polkadot) நாணயத்தின் வருங்கால விலையை நம்மால் கணிக்கமுடியுமா?

உள்ளடக்கம்

போல்காடாட் நாணயம் அல்லது DOT நாணயம் என்பது போதிய எண்ணிக்கையில் ஆதரவாளர்களையும் ஆர்வலர்களையும் கொண்ட ஒரு கிரிப்டோகரன்சி. எந்தமாதிரியான விலைக்கணிப்பை போல்காடாட் நாணயத்தில் செய்கிறார்கள் என்று பார்க்கும் முன், போல்காடாட் என்றால் என்ன என்று பார்க்கலாம்.

போல்காடாட் நாணயம் என்றால் என்ன?

போல்காடாட் பிளாக்செயினின்,சொந்த டோக்கன் DOT காயின் ஆகும். இது 2016ல் Web3 பவுண்டேஷனால் நிறுவப்பட்டது. இந்த சுவிஸைச் சேர்ந்த இலாப நோக்கில்லாத அமைப்பின் நிறுவனர்கள், எதேரியம் துணை நிறுவனரான கேவின் வுட், பிளாக்செயின் ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஹேபர்மையர் மற்றும் தொழில்நுட்ப இயக்குநர் பீட்டர் ஸாபன் ஆகியோராவர்.

போல்காடாட் உருவாக்கியதன் நோக்கம் பயனர்கள் தாங்களாக உருவாக்கும் பிற பிளாக்செயின்களை ஆதரிப்பதில் உதவுவதற்காக ஒரு பிளாக்செயினை உருவாக்குவதாகும்.

போல்காடாட் இருவகையான பிளாக்செயின்களைக் கொண்டுள்ளது. பிரதானமான ஒன்று ரிலே செயின் என்று அழைக்கப்படுகிறது. இதில் பரிவர்த்தனைகள் நிரந்தரமாக இருக்கும். இன்னொரு செயின் பாராசெயின் என்று அழைக்கப்படுகிறது. இந்த செயின்கள் போல்காடாட் பயனர்களால் உருவாக்கப்பட்டு ரிலே செயினுடன் இணைக்கப்படுகிறது. இது பிரதான செயினின் பாதுகாப்பிலிருந்து பயனர்கள் உருவாக்கியவை பலனடையச் செய்கிறது.

போல்காடாட் எப்படிச் செயல்படுகிறது?

போல்காடாட் பங்குச்சான்று (PoS) கருத்தொற்றுமையின் திருத்திய வடிவமான முன்மொழியப்பட்ட பங்குச்சான்றைப் (NMoS) பயன்படுத்துகிறது. இதன் அர்த்தம் ஒருவர் சொந்த நாணயத்தை ஸ்டேக் செய்யும்போது, DOT தரவினைச் சரிபார்த்து அதை உறுதிப்படுத்துவதற்கு ஆட்களை முன்மொழிவதுடன், வலைத்தொடர்பின் காவலராக அல்லது பாராசெயின் பதிவுகளை ஒழுங்கமைக்க உதவும்.

DOT வைத்திருப்பவர்கள் தங்கள் நாணயங்களை வலைத்தொடர்பில் மாற்றங்களுக்கு வாக்களிக்கவும், சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவும் (அவர்களுக்குக் குறிப்பிட்ட வாக்களிக்கும் சிறப்புரிமைகள் உண்டு) சபையினால் முன்மொழியப்பட்ட தொழில்நுட்ப செயற்குழுவை ஆதரிக்கவும்கூட பயன்படுத்தலாம். நாணயத்தை Currency.com உட்பட பல்வேறு சந்தைகளில் வாங்கமுடியும். 

DOT தன்னைத்தானே 2020 ஆகஸ்டில் மறுமதிப்பீடு செய்துகொண்டது. இதன் அர்த்தம் விலையானது 100 மடங்கு குறைந்தது. இது முதலில் பேரிடராகத் தோன்றினாலும், இது எதையும் பாதிக்கவில்லை. விலை கீழிறங்கியபோது, DOT வைத்திருந்தோரின் என்ணிக்கை 100 மடங்கு கூடியது. அதாவது நிதி சார்ந்து யாரும் தவற விடப்படவில்லை. முன்னர் இருந்ததைப் போலவே அதேயளவு வலைத்தொடர்பை ஒவ்வொருவரும் சொந்தமாக வைத்திருந்தனர்.

வழங்கலைப் பொறுத்தவரை, 2022 ஜனவரி 17ன்படி, புழக்கத்தில் 987,579,314.96 DOT உள்ளன. இது மொத்த வழங்கலான 1,103,303,471ல் 89.5%.

போல்காடாட் விலைக் கணிப்பை நாம் பார்க்கும்முன், கிரிப்டோவின் வரலாற்றைப் பார்த்துவிடுவோம். முந்தைய செயல்திறன் எதிர்கால முடிவுகளைச் சுட்டிக்காட்டுவதல்ல என்றாலும், போல்காடாட் கிரிப்டோ விலைக் கணிப்பை நாம் செய்வதாக இருந்தால், இது அந்தச் சூழலைப் புரிந்துகொள்ள உதவும்.

போல்காடாட் விலை வரலாறு

பொதுச்சந்தைக்கு போல்காடாட் 2020 கோடையில் வந்ததை நாம் அறிவோம். அப்போது அதன் மதிப்பு கிட்டத்தட்ட $2.75. உதாரணமாக, அந்த ஆண்டு ஆகஸ்ட் 20ல் அது $2.69க்கு விழும் முன்பாக $2.79க்கு ஆரம்பமானது. இந்த விலையே இந்தக் கிரிப்டோவின் இதுவரையிலான குறைந்த விலையாகும்.

அந்த ஆண்டின் எஞ்சிய பகுதியில் சற்று வளர்ச்சி கண்டு ஆகஸ்ட் 21ல் $3ஐத் தாண்டியது. ஆகஸ்ட் 22ல் $4ஐயும் ஆகஸ்ட் 25ல் $5ஐயும் ஆகஸ்ட் 26ல் $6ஐயும் உடைத்தது. அதாவது ஐந்தே நாட்களில் இருமடங்கு மதிப்பை எட்டியது. பின்னர் $4க்கும் $6க்கும் இடையில் ஆண்டு முழுவதும் ஊசலாடிக் கொண்டிருந்தது. ஆனால் 2020 கடைசி சிலநாட்களில் பொங்கியெழுந்து டிசம்பர் 31ல் $9.29 என்று முடிந்தது. 

What is your sentiment on DOT/USD?

6.6589
Bullish
or
Bearish
Vote to see community's results!

2021 துவக்கத்தில் ஏற்பட்ட கிரிப்டோ மலர்ச்சிக்கு ஆட்பட்ட பல கிரிப்டோகரன்சிகளில் போல்காடாட்டும் ஒன்று. முதலில் அது ஜனவரி 3ல் $10ஐ உடைத்தது. பிறகு கணிசமான அளவு உயர்ந்து ஜனவரி 13ல் $10.96ல் முடிவடைந்தது. மறுநாளே $14.54க்கு ஏறியது. 24 மணிநேரத்தில் 32%க்கும் அதிகமான எழுச்சி.

இன்னொரு முக்கிய மைல்கல் பிப்ரவரி 3ல் நிகழ்ந்தது. முதன்முறையாக நாணயம் $20ஐ எட்டியதுடன் பிப்ரவரி 13ல் இன்ட்ராடே வர்த்தகத்தில் $30ஐத் தொட்டது. அந்த மாதமும் அடுத்த மாதமும் பெரும்பாலும் $30க்கு மேலேயே வர்த்தகமானது. ஏப்ரல் 2ல் $41.16க்கு முடிவடைந்தது.

ஏப்ரல் முதல் பாதியில் DOT அந்தக் குறியீட்டுக்கு மேலேயே இருந்தது. ஆனால் ஏப்ரல் 18ல் அதன் மதிப்பில் 23%க்கும் மேலாக இழந்து $43.11லிருந்து $32.87க்கு சரிந்தது. ஏப்ரல் 24, 25, 26ல் $30க்குக் கீழேயே இருந்தது. ஆனால் மே 12ல் திரும்ப மீண்டெழுந்து $40க்கு மேல் சென்றது. மே 15ல் புதிய உச்சமான $49.69ஐ இன்ட்ராடே வர்த்தகத்தில் தொட்டது. 

மாபெரும் கிரிப்டோ வீழ்ச்சி தினமான மே 19ல் நாணயம் பாதிக்கப்பட்டு $41.34ல் இருந்து $18.64க்கு இறங்கி கிட்டத்தட்ட 55% மதிப்பை இழந்தது. காலவோட்டத்தில் சற்று மீட்சி இருந்தாலும், முதலில் இது இறங்குமுக காலகட்டத்தைச் சந்தித்தது. ஜூலை 21ல் $10.69 என்ற அடிவிலையை இன்ட்ராடே வர்த்தகத்தில் தொட்டது.

அதிர்ஷ்டவசமாக இந்த நாணயம் ஆகஸ்ட் 31ல் $30ஐத் தொடுவதை மே 19க்குப் பிறகு முதன்முறையாகப் பார்க்கமுடிந்தது. 2021 அக்டோபர் 31ல் இது $41.78ல் வர்த்தகமானது. நவம்பர் 4ல் புதிய உச்சமாக $55ஐத் தொட்டது,  எனினும், கிரிப்டோகரன்சிகளுக்கு டிசம்பர் மாதம் கடினமானதாக இருந்தது. பிட்காயின் 19% வீழ்ந்தது. DOT-ம் விதிவிலக்கில்லை. டிசம்பர் 22ல் நாணயத்தின் மதிப்பு $26.61 ஆக இருந்தது. 

இந்தத் தடுமாற்றம் ஜனவரி பாதிவரை தொடர்ந்தது. இதை எழுதிக் கொண்டிருந்த வேளையில் நாணயத்தின் மதிப்பு $26.55. Electric Capital வழங்கிய ஓர் அறிக்கைப்படி, எதேரியத்துக்குப் பிறகு இரண்டாவது பெரிய சூழல் அமைப்பாக போல்காடாட் உள்ளது. பிற முக்கிய ஆல்ட்கயின்களைக் காட்டிலும் பிளாக்செயின் பரிவர்த்தனை சார் மேம்பாடுகள் மிக அதிகம் இதில் நடந்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. போல்காடாட் பிளாக்செயினில் இப்போது நேரலையில் உள்ள செயல்படக்கூடிய பாராசெயினான Moonbeam உடன் இந்த செயல்திட்டம் பல்வேறு புதிய ஒருங்கிணைப்புகள், நடவடிக்கைகள் மற்றும் பயனர்களை வலைத்தொடர்பில் அறிமுகப்படுத்தும்.

ஆனால் எதிர்காலம் எப்படி இருக்கும்? எந்த மாதிரியான போல்காடாட் நாணய விலைக் கணிப்பை நாம் செய்யமுடியும்? அதை இப்போது பார்க்கலாம். 

போல்காடாட் நாணய விலைக் கணிப்பு

WalletInvestor DOT நாணயம் ஒருவருட காலத்தில் $49.33ஐத் தொடுமென்றும் ஐந்தாண்டுகளில் $138.34ஐ எட்டுமென்றும் கூறுகிறது.

DigitalCoinPrice-ன் 2022ம் ஆண்டுக்கான DOT நாணய விலைக் கணிப்புப்படி 2022 ஏப்ரலில் இது $39.60ஐ எட்டுமென்கிறது. 2023 ஜனவரியில் $45.59ஐ எட்டி, அதிலிருந்து ஒரு வருடத்தில் $48.05ஐ அடையும் என்கிறது. இந்தத்தளத்தின் முன்னறிவிப்புப்படி 2025 ஜனவரியில் இது $52.17க்குச் செல்லும் என்கிறது. ஆனால் 2026 ஜனவரியில் $49.32ஐத் தொடும் என்றும் அதிலிருந்து ஒரு வருடத்தில் $74.14வரை செல்லும் என்கிறது. 2028 ஜனவரியில் $99.47ஐத் தொடும். அதிலிருந்து 12 மாதங்களில் போல்காடாட் நாணயத்தின் விலை $106.79 ஆக இருக்குமென்று நம்புகிறது.

இறுதியாக, Gov.capital. இது ஒருவருடத்தில் போல்காடாட் $130.74க்குச் செல்லும் என்றும் ஐந்து ஆண்டுகளில் $1,008.98ஐ எட்டும் என்றும் கணிக்கிறது. 2024 ஜனவரி 17ல் இதன் விலை $280.43 ஆக இருக்குமென்றும், அதன்பின் 12 மாதங்களில் அதாவது 2025ல் DOT நாணயத்தின் விலை $476.11ஐ எட்டுமென்றும் கணிக்கிறது. 2026 ஜனவர் 17ல் தளத்தின் கணிப்புப்படி DOT விலை $715.68 இருக்குமென்கிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எத்தனை போல்காடாட் நாணயங்கள் உள்ளன?

மொத்த வழங்கலான 1,103,303,471 DOT நாணயங்களில் 987,579,314.96 (89.5%) புழக்கத்தில் உள்ளன.

போல்காடாட் ஒரு நல்ல முதலீடு தானா?

இதற்கு உறுதியான விடையைச் சொல்ல இயலாது. நீங்கள் DOT ஒரு நல்ல முதலீடு என்று நினைக்கிறீர்களா இல்லையா என்பது அது மேலே செல்லுமா, அப்படியே சென்றால் எவ்வளவு ஏறும், எவ்வளவு விரைவாக அதை எட்டும் என்பதைப் பொறுத்தது. கிரிப்டோகரன்சிகள் அதிக மாறியல்புடையவை என்பதால், எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்ய வேண்டும்.

போல்காடாட் மேலே செல்லுமா?

செல்லலாம். நிச்சயம், DOTக்கான நீண்டகாலக் கணிப்புகள் உண்மையில் ஏறுமுகத்தைத்தான் காட்டுகின்றன. இருந்தாலும், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் விலைகள் இறங்கவும் அதேபோல ஏறவும் கூடும். கணிப்புகள் மிகப் பெரும்பாலும் தவறானவை. எந்தச் சொத்திலும் முதலீடு செய்யும்முன், எப்போதும் உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்யுங்கள். உங்கள் முடிவானது அபாயம் குறித்த உங்கள் மனப்போக்கு, இந்தச் சந்தையில் உங்கள் அனுபவம், உங்கள் தொகுமுதலீட்டின் (portfolio) பரவல், பணத்தை இழப்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் இழக்கத் தயாராயிருக்கும் அளவுக்கும் அதிகமாக ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள் மற்றும் முந்தைய செயல்திறன் எதிர்கால வருவாய்க்கு உத்தரவாதமல்ல என்பதை மனதில் கொள்ளுங்கள்.

போல்காடாட் நாணயத்தை வாங்குவது எப்படி

DOT நாணயத்தை நீங்கள் வாங்க விரும்பினால் Currency.com உட்பட பல்வேறு சந்தைகளில் நீங்கள் வாங்கலாம். உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்திருங்கள் மற்றும் நீங்கள் இழக்கத் தயாராயிருக்கும் அளவுக்கும் அதிகமாக ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள்.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image