ராலி விலைக் கணிப்பு: இந்த மிகையான ஏற்றம் தொடருமா?
படைப்புகளுக்கு உரிமையளிக்கும் நோக்கம் கொண்ட செயற்தளமான ராலி இரு வாரங்களில் 70% உயர்ந்துள்ளது

உள்ளடக்கம்
- ராலி என்றால் என்ன (RLY)?
- நிறுவனர்கள்
- சமீபத்திய நாணயச் செயல்பாடு
- ராலி நாணய விலைக் கணிப்பு – நிபுணர்கள் கருத்து
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
வங்கிக் கணக்கு இல்லாதோர் நிதிச் சேவைகளைப் பெற உதவுவது முதல் யாருக்குக் கிடைக்க வேண்டுமோ அவர்களுக்கு நன்கொடைகள் கிடைப்பதை உறுதி செய்வது வரை, பலவேறு தரப்பினர் ஏற்றம் பெறவும் அவர்களுக்கு ஆதரவளித்து உதவுவதிலும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் சாத்தியமான வழிகளை நன்கு விளம்பரப்படுத்தியுள்ளது.
இசைக் கலைஞர்கள் முதல் கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் வரை இந்தக் குழுக்களில் உண்டு. இவர்கள் தங்கள் படைப்புகளை விநியோகித்து பணம் ஈட்டுவதற்கு முழுக்கவே சமூக ஊடகத்தையும் பாய்வுப் போக்குத் (streaming) தளங்களையும் சார்ந்தவர்களாக உள்ளனர். இப்போது அதிகாரத்தைத் திரும்பவும் படைப்பாளிகள் கையில் தருவதற்கு மையமில்லாதன்மையை கட்டுப்படுத்த முயற்சிக்கும் கிரிப்டோகரன்சிகள் வளர்ந்துவருகின்றன.
ராலி (RLY) இளங்குழுமங்களில் (start-up) ஒன்று. ஒரு சமூக டோக்கன் அடிப்படையிலான செயல்திட்டமான ராலி, இடைநிலையர்களைச் சார்ந்து இல்லாமல் தாங்கள் வழங்கக்கூடியவற்றுக்கான டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டமைப்பதற்காக படைப்பாளிகளும் படைப்புச் சமூகங்களும் தங்கள் முத்திரையுள்ள கிரிப்டோகரன்சிகளை உருவாக்க அனுமதிக்கிறது.
இந்தச் செயல்திட்டம் 2020ல் தோற்றுவிக்கப்பட்டது. நிச்சயம் சுவாரசியமானதுதான் இல்லையா? இதற்கு அடிச்சட்டம் உள்ளதா? சமீபத்திய ராலி விலைக் கணிப்பு எப்படி இருக்கிறது?
விலைக் கணிப்புகளைப் பார்க்கும் முன்பாக, இந்த நாணயம் குறித்த மேலோட்டமாகப் பார்க்கலாம்.
ராலி என்றால் என்ன (RLY)?
ராலி நாணயம் படைப்பாளிகள் தங்கள் இரசிகர்களிடம் புதிய வெளியீடுகளை அணுகச் செய்வது முதல், பொருட்களை விற்பது, நிகழ்ச்சிகளை நடத்துவது வரை வெவ்வேறு வழிகளில் பணமாக்குவதற்கு தங்கள் நாணயங்களைத் தோற்றுவிக்க அனுமதிக்கிறது. படைப்பாளிகள் தங்கள் படைப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றலை வழங்குவதாக இந்த நிறுவனச் செயற்தளம் சொல்கிறது.
தன்னைத்தானே இது “படைப்புச் சமூகத்துக்கான கிரிப்டோ” என்று அழைத்துக் கொள்கிறது. செயற்தளமோ பரிவர்த்தனைக் கட்டணங்களோ இன்றி இயங்குவதாக ராலி கூறுகிறது. இது மரபார்ந்த மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் செயற்தளச் செயல்பாடுகளிலிருந்து மாறுபட்டது.
படைப்பாளிகளால் உருவாக்கப்படும் நாணயங்கள் ராலியின் “டோக்கன் பிணைப்பு வளைவு” என்பதற்கேற்ப வெளியிடப்படுகிறது. இந்த நேரியல் வளைவு RLY நாணயத்தின் நடப்பு விலையில் 1%ஐத் தொடக்க விலையாகக் கொண்டிருக்கும்.
டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படுகிறது. அவர்கள் வைத்திருக்கும் டோக்கன்களின் அளவுக்கேற்ப சமூக வெகுமதிகளில் பங்குகளைப் பெறுகிறார்கள். இதன் அர்த்தம் எந்தளவு அதிகம்பேர் செயற்தளத்தில் ஈடுபடுகிறார்களோ, எந்தளவு அதிகம்பேர் நாணயங்களில் முதலீடு செய்கிறார்களோ அந்தளவு ஒவ்வொருவருக்கும் வெகுமதி வழங்கப்படும்.
டோக்கன் வைத்திருப்பவர்கள் NFTகளை வாங்கவும், விற்கவும், சேகரிக்கவும் செயற்தளம் அனுமதிக்கிறது.
சூழல் மண்டலத்திலிருந்து எந்தளவு வெளியே எடுக்க முடியும் என்பதற்குக் கட்டுப்பாடு உள்ளது. கொடுக்கப்பட்ட எந்த வாரத்திலும் படைப்பாளி நாணய வழங்கலில் 5% மட்டுமே எடுக்க முடியும்.
RLY என்பது ராலியின் சொந்த டோக்கன். இது ஒரு ERC-20 டோக்கனாகும். அதாவது ராலி எதேரியம் பிளாக்செயினில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ராலியால் இயக்கப்படும் பக்கச்சங்கிலியில் படைப்பாளி நாணயங்கள் உள்ளன. படைப்பாளி நாணயங்களை வாங்குவதற்கு, பயனர்கள் தங்கள் RLY-ஐ இந்தப் பக்கச்சங்கிலியுடன் இணைக்க வேண்டும். ஒரு பாலம் அல்லது பிளாக்செயின் பாலம் என்பது அடிப்படையில் தகவல்களை அல்லது டோக்கன்களை பிளாக்செயின் செயல்திட்டங்களுக்கிடையில் அனுப்புவதைக் குறிக்கிறது.
நிறுவனர்கள்
Coin Market Cap அறிக்கைப்படி, பெயர் வெளியிடாத பலதரப்பட்ட படைப்பாளிகளும் ஊடக வல்லுநர்களும் ராலியை உருவாக்கியுள்ளனர். இதன் தலைமைச் செயல் அதிகாரி பிரென்மர் மோரிஸ். கலிபோர்னியாவிலுள்ள சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த மோரிஸ், கிளேர்மோண்ட் மெக்கென்னா கல்லூரியில் 2009ம் ஆண்டில் நிதிப் பொருளாதாரமும் அரசும் என்ற தலைப்பில் BA பட்டம் பெற்றுள்ளார். ராலியின் தலைமைச் செயல் அதிகாரியாக ஆவதற்கு முன், Patreon-க்காக உலகளாவிய சந்தை நோக்கிச் செல்லுதல் மற்றும் விற்றுமுதல் தலைவராகப் பணியாற்றினார். Patreon என்பது படைப்பாளிகள் சமூகத்துக்கு ஆற்றலையும் முதலீட்டு வாய்ப்புகளையும் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு செயற்தளமாகும்.
படைப்பாளர் கூட்டாண்மையின் துணைத் தலைவராக நிக் மில்மேனும் செய்தித்தொடர்பு தலைவராக கர்ட் படட்டும் உள்ளனர்.
இந்தத் தகவல்கள் எல்லாம் ராலியின் 2022 அல்லது 2030 விலைக் கணிப்பில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன?
விலைக் கணிப்புகளை நாம் பார்க்கும்முன், RLY நாணயத்தின் சமீபத்தியச் செயல்பாட்டினைப் பார்ப்போம்.
சமீபத்திய நாணயச் செயல்பாடு
RLY நாணயம் வெளியான உடனேயே 2020 டிசம்பர் 27ல் $0.07997 ஆக இருந்த அதன் மதிப்பு 2021 மார்ச் 18ல் $1.1212 ஆக உயர்ந்தது. பின் RLY நேர் செய்தலுக்குள் சென்று மார்ச் 24ல் $0.7966 விலைக்கு வந்தது. பின் மேலேறி ஏப்ரல் 2ல் $1.3786ஐத் தொட்டது. 2021 மே 3ல் $1.1507ஐ எட்டியபின், நாணயம் விழத் தொடங்கியது. ஜூன் 9ல் $0.4099 ஆகச் சரிந்தது. செப்டம்பர் 3ல் $0.8802 விலைக்கு உயர்ந்தாலும், பொதுவாக கீழிறங்கும் போக்கிலேயே இருந்தது. 2022 ஜனவரி 9ல் RLY விலை $0.286க்கு விழுந்து, பிப்ரவரி 13ல் அதற்கும் கீழாக $0.2306 விலையைத் தொட்டது.
இருப்பினும் பிப்ரவரி 16ல், நாணயத்தின் விலை $0.3664 ஆக உயர்ந்தது. அதாவது ஒரு வருடத்துக்கு முன்பிருந்த விலையைக் காட்டிலும் கிட்டத்தட்ட 50% அதிகரித்துள்ளது மற்றும் முந்தைய 30 நாட்களுக்கு முன் இருந்த விலையைக் காட்டிலும் 25% அதிகம்.
RLY நாணயங்களின் அதிகபட்ச வழங்கல் 15 பில்லியன். தற்போது புழக்கத்தில் 2.47 பில்லியன் உள்ளது. செயற்தளத்தின் சந்தை மூலதன மதிப்பு $939.14 மில்லியன்.
இந்தத் தகவல்கள் ராலியின் விலைக் கணிப்பில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன?
ராலி நாணய விலைக் கணிப்பு – நிபுணர்கள் கருத்து
விலைக் கணிப்புகள் ஒரு சுட்டிக்காட்டியாக உதவிகரமானவை. ஆனால் இவை சாத்தியக் கூறுகளே தவிர முழுமையானது அல்ல. நீண்டகால விலைக் கணிப்புகள் முழுக்கவே இலக்கிலிருந்து விலகியிருக்கக்கூடும். காரணம் கிரிப்டோ சந்தையின் இயல்பான மாறியல்பும் எதிர்கால விலைகளைப் பாதிக்கக்கூடிய அறியப்படாத பல காரணங்களும் ஆகும். இதை மனதில் கொண்டு ராலி விலைக் கணிப்புகளைப் பார்க்கலாம்.
முதலில் WalletInvestor. இது அவநம்பிக்கையான விலைக் கணிப்பைத் தருகிறது; ராலி $0.096 ஆக ஒருவருடத்தில் வீழ்ச்சியடையும் என்கிறது.
Gov.capital, மிக அதிக நேர்மறையான முன்னறிவிப்பைத் தருகிறது. இது ராலி கிரிப்டோ 2023ல் $1.129 விலையைத் தொடுமென்று கணிக்கிறது. இந்த செயற்தளம் ஐந்தாண்டு காலத்தில் நாணய விலை $3.978க்கு வருமென்று எண்ணுகிறது.
இறுதியாக, DigitalCoinPrice. இது ராலியின் மதிப்பு 2022ல் $0.53ஐயும் 2023ல் $0.64ஐயும் எட்டுமென நினைக்கிறது. இந்த இணையத்தளத்தின் 2025க்கான ராலி விலைக்கணிப்பு $0.86 ஆக உள்ளது.
ஞாபகமிருக்கட்டும், இந்த விலைக் கணிப்புகள் சுட்டிக்காட்டிகளே தவிர முழுமையானவை அல்ல. கிரிப்டோ சந்தை அதிக மாறியல்புடையது; விலைகள் விழவும் எழவும் செய்யும்; நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் தொகைக்கு அதிகமான பணத்தை ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எத்தனை ராலி நாணயங்கள் உள்ளன?
RLY நாணயத்தின் அதிகபட்ச வழங்கல் 15 பில்லியன். இதில் 2.47 பில்லியன் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன.
ராலி ஒரு நல்ல முதலீடு தானா?
சாத்தியம் உள்ளது. இதற்குப் பின்னால் சுவாரசியமான நோக்கமும் திடமான குழுவும் உள்ளது. சமீபத்தில் அதிகளவில் பிரசித்தமடைந்துள்ளது. இது எதிர்கால வளர்ச்சிக்கான சமிக்ஞையாக இருக்கலாம்.இருந்தாலும், கிரிப்டோ சந்தை அதிக மாறியல்புடையது என்பதையும் அனைத்து டோக்கன்கள், நாணயங்களின் விலைகள் கீழிறங்கவும் மேலேறவும் கூடுமென்பதை நினைவில் கொள்வது நல்லது.
ராலி மேலே செல்லுமா?
சில வல்லுநர்கள் நாணயம் மேலே ஏறுமென்று கணிக்கிறார்கள். மற்றவர்கள் நாணயம் எதிர்காலத்தில் இறங்குமென்று கணிக்கின்றனர்.
விலை முன்னறிவிப்புகள், அதிலும் குறிப்பாக நீண்டகால முன்னறிவிப்புகளை சுட்டிக்காட்டிகளாக மட்டும் பார்க்க வேண்டுமே தவிர முழுமையானதாக அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நான் ராலியில் முதலீடு செய்யலாமா?
முதலீடு உங்கள் தனிப்பட்ட முனைப்பு சார்ந்த விசயம். உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்யுங்கள்; ராலியின் எதிர்கால வாய்ப்புகளை ஊக்குவிக்கக்கூடிய அல்லது பலவீனப்படுத்தக்கூடிய ஏதேனும் மேம்பாடுகள் அதன் சூழல் மண்டலத்துக்குள் வந்துள்ளதா என்று உடனுக்குடன் தெரிந்துகொள்ள முயலுங்கள்.
முதலீடு செய்வது அபாயகரமானதாக இருக்கலாம். நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் தொகைக்கு அதிகமான பணத்தை ஒருபோதும் முதலீடு செய்யக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.