ரேவன்காயின் விலைக் கணிப்பு: இப்போது என்ன நடக்கிறது?

By Currency.com Research Team

ஜனவரி துவக்கத்தில் சிறிதளவில் ரேவன்காயின் விலையேற்றம் கண்டது. ஆனால் சமீபத்திய ரேவன்காயின் விலைக் கணிப்பு என்னவாக உள்ளது?

ரேவன்காயின் விலைக் கணிப்பு                                 
சில முதலீட்டாளர்களுக்கு ரேவன்காயின் ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது. காரணம் இது உங்கள் சொந்த டோக்கன்களை உருவாக்க வழங்கும் வாய்ப்புகள் – புகைப்படம்: Shutterstock
                                

உள்ளடக்கம்

கிரிப்டோகரன்சியின் மிகவும் சுவாரசியமான கருத்தாக்கங்களில் ஒன்று ரேவன்காயின். ஏற்ற இறக்கமான விலை வரலாறு இருக்கையில், ரேவன்காயினின் (RVN) விலையை துல்லியமாகக் கணிப்பது சாத்தியம் தானா?

ரேவன்காயின் பிளாக்செயினின் சொந்த நாணயம் ரேவன்காயின் (RVN). இந்த பிளாக்செயின் பிட்காயின் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டது. ரேவன்காயினை மீட்டெடுக்க முடியாத கணக்குகளுக்கு அனுப்புவதன் மூலம் மக்கள் தங்கள் சொந்த டோக்கன்களை உருவாக்க அனுமதிக்கிறது. நிறுவனத்தின் வெள்ளையறிக்கை இதை மேலும் விளக்குகிறது: “பிட்காயின் நிரலின் ஒரு விலகல் மீது கட்டமைக்கப்பட்டதுதான் ரேவன்காயின். ஒரு நிமிட நேரத்தில் ஒரு தொகுதி வெகுமதி, வெளியிடப்பட்ட நாணயங்களின் எண்ணிக்கையில் மாற்றம், நிறையுள்ள விநியோக அட்டவணையாக இல்லாதது, சொத்து உருவாக்கம், செய்தியனுப்பும் திறன்கள் போன்றவை முக்கிய மாற்றங்களாகும்.” 

இந்தக் கட்டுரையில் ரேவன்காயின் குறித்தும் அதன் சொந்த கரன்சி குறித்தும் மேலும் தெரிந்துகொள்ளலாம்.

ரேவன்காயினின் துவக்ககட்ட விலை வரலாறு

ரேவன்காயின் விலைக் கணிப்புக்கு நாம் செல்லும் முன்பாக, அதன் வரலாற்றைப் பார்க்கலாம். முந்தைய செயல்பாடு எதிர்கால முடிவுகளுக்கு உத்தரவாதமல்ல என்றாலும், ரேவன்காயினின் விலை வரலாற்றைப் பார்க்கும்போது நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இது தோற்றுவிக்கப்பட்ட 2018ம் ஆண்டிலிருந்து பல முகடுகளையும் பள்ளங்களையும் சந்தித்துள்ளது.

திடீர் விலையேற்றம் ஏற்படும் முன்பாக ஒரே வரம்புக்குள் நீண்டகாலம் தேங்கி நிற்கக்கூடிய நாணயங்களைச் சேர்ந்ததல்ல இது. மாறாக, கிரிப்டோகரன்சியில் எந்தமாதிரியான ஏற்ற இறக்கம் இருக்கும் என்பதற்கான நல்ல உதாரணமாக முதல் ஆண்டில் இதில் நடந்த வர்த்தம் இருந்தது.

2018 மார்ச் 10ல், ரேவன்காயின் $0.0265 விலையில் தொடங்கியது. மார்ச் 12ல் இன்ட்ராடே வர்த்தக உச்சவிலையாக $0.0343ஐ எட்டியது. பிறகு துவக்ககட்ட உற்சாகமாகத் தெரிந்தது தலைகீழாக மாறியது. மார்ச் 18ல் இன்ட்ராடே வர்த்தகத்தின் குறைந்த விலையாக $0.0171க்கு விழுந்தது. மார்ச் 27 இன்ட்ராடே வர்த்தகத்தில் $0.07292 என்ற உச்சத்தைத் தொட்டபோது சற்று ஊக்கமளிப்பதாக இருந்தது. அன்றைய குறைவான இன்ட்ராடே விலையாக $0.03627 இருந்தது. இதன் அர்த்தம் சிலமணி நேரங்களில் இருமடங்கு விலை மாற்றம் ஏற்பட்டு அன்றைய வர்த்தக முடிவில் விலை $0.06977 ஆக குறைந்தது.

மே 4ம் தேதி வரை ரேவன்காயின் $0.03 குறியீட்டைச் சுற்றியே வர்த்தகமாகி வந்தது. ஜூன் 7 இன்ட்ராடே வர்த்தகத்தில் உச்சவிலையாக $0.05779ஐத் தொட்டு இறுதியில் $0.02933 விலையில் முடிவடைந்தது. 2018 அக்டோபர் வரையிலும் இந்த மட்டத்திலேயே இருந்தது. திரும்ப உயர ஆரம்பித்தபோது, அக்டோபர் 23 இன்ட்ராடே வர்த்தகத்தில் $0.06079க்கு வர்த்தகமானது. திரும்பவும் RVN விலை நவம்பர் 14ல் $0.03க்கும் கீழே இறங்கியது. நவம்பர் 22ல் மீண்டும் $0.02க்குக் கீழே சென்றது. இந்த மட்டத்தை நவம்பர் 27ல் உடைத்தது. பிறகு டிசம்பர் 2ல் திரும்பவும் விழுந்தது. 2019 மார்ச் 3 வரை திரும்ப இந்த மட்டத்துக்கு அது திரும்பவே இல்லை. அன்றைய தேதி முடிவில் விலை $0.02371 ஆக இருந்தது.

பிறகு மலர்ச்சி காலத்தில் ரேவன்காயின் சற்றே விலையேறி மார்ச் 29ல் இன்ட்ராடே வர்த்தக உச்சவிலையான $0.06928ஐத் தொட்டது. சில வாரங்களுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் இது 192% அதிகம். 2019 ஏப்ரல் 7ல் இது $0.07414 என்ற உச்சத்தை அடைந்தது.

பிறகு RVN விலை குறையத் தொடங்கியது. மே 10ல் இன்ட்ராடே வர்த்தகத்தில் குறைந்தவிலையாக $0.04114ஐப் பதிவுசெய்தது. பிறகு ஜூன் 3ல் $0.08026 என்ற உச்சத்தை எட்டியது. பிறகு மெல்ல இறங்குமுகப் போக்கினுள் நுழைந்தது. இந்த இறங்குமுகப் போக்கு 2019 நவம்பர் 4 முதல் 2020 பிப்ரவரி 3வரை தொடர்ந்தது. விலை $0.03க்குக் கீழேயே இருந்தது. 2020 பிப்ரவரியில் பெரும்பாலும் இந்தப் புள்ளிக்கு மேலேயே இருந்தாலும் மாத இறுதியில் திரும்பவும் விழுந்தது.

மார்ச் 13ல், RVN அதுவரையில்லாத குறைந்த விலையான $0.008794க்கு இன்ட்ராடே வர்த்தகத்தின்போது விழுந்தது. சற்றே மீண்டுவந்து $0.01435 விலையில் முடிவடைந்தது. ஒரு சென்டுக்கும் இரண்டு சென்டுக்கும் இடையில், மே 24 அன்று இன்ட்ராடே வர்த்தகத்தில் $0.02045 என்ற உயரத்தை அடையும்வரை ஊசலாடியது. 

2020 செப்டம்பர் இறுதிவரை RVN $0.02 சுற்றியே வர்த்தகமாகி வந்தது. திரும்ப அது விழுந்தபோது 2021 ஜனவரி 29 வரை அது திரும்ப எழவே இல்லை. அன்றைய இறுதி விலையாக $0.02704 இருந்தது.

2021, 2022ல் RVN விலை வரலாறு

2021ன் துவக்கமானது கிரிப்டோகரன்சியின் மலர்ச்சி காலமாக இருந்தது. அந்தப் பொதுவான சந்தை உற்சாகத்திற்கு ரேவன்காயினும் ஆட்பட்டது. ஜனவரி 30ல் RVN இன்ட்ராடே வர்த்தக உச்சமாக $0.03915 விலையை எட்டியது. விரைவிலேயே $0.03க்குக் கீழே சென்றது. பின்னர் பிப்ரவரி 5ல் சற்று மேலேறி $0.03006க்கு முடிவடைந்தது.

மேலும் வளர்ச்சியைப் பார்க்க முடிந்தது. பிப்ரவரி 9ல் $0.04ஐ உடைத்து மறுநாள் $0.05337 என்ற இன்ட்ராடே வர்த்தக உச்சத்தை எட்டியது. அது அத்துடன் நிற்கவில்லை – பிப்ரவரி 18ல், இன்ட்ராடே வர்த்தக உச்சமாக $0.1005ஐ RVN தொட்டு முதன்முறையாக 10 சென்ட் என்ற தடையை உடைத்தது.

அதன்பின் நாணயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து பிப்ரவரி 20ல் இருமடங்குக்கும் அதிகமாக $0.2854ஐத் தொட்டு அதுவரையில்லாத உச்சத்தை RVN பதிவுசெய்தது. எனினும் இந்த விலையளவில் அதனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஏப்ரல் 14ல் $0.2639 விலையைத் தொடுமுன்பாக நாணயம் $0.20வைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

எனினும் மீண்டும் இந்நாணயத்தால் இந்த மட்டத்தைத் தக்கவைக்க முடியவில்லை. மே 19ல் மாபெரும் கிரிப்டோ வீழ்ச்சி தினத்தில் விழும் முன்பாக $0.15ஐச் சுற்றிக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் ரேவன்காயினின் இன்ட்ராடே வர்த்தக அதிகபட்ச விலை $0.132. இதிலிருந்து 57% விலையிறங்கி $0.05649க்கு வந்து நாள் முடிவில் $0.08647க்கு வந்தது.

ஆகஸ்ட் 10 வரையிலும் RVN சரிவுக்கு முன்பு இருந்த உச்சத்துக்குக் கீழேயே சிறிதுகாலம் இருந்து அன்றைய தேதியில் $0.1412 என்ற உச்சத்தை எட்டியது. மறுநாள் $0.1769க்கு அதிகரித்தது. சில சரிவுகள் இருந்தாலும் மே 19 நிகழ்வுகளுக்கு முன்பாக இருந்த விலைக்கு நெருக்கமாக விலை தொடர்ந்தது. 

நவம்பர் 25ல் RVN தோராயமாக $0.11க்கு வர்த்தகமானது. 2021 டிசம்பர் 20ல் கிட்டத்தட்ட $0.08. விதிக்கப்பட்ட ஒழுங்குமுறையினாலும் அதற்கான சாத்தியம் காரணமாகவும், உலகளாவிய சந்தைகளை விட பெரியதாக  இருந்த கோவிட்-19ன் மாற்றுரு ஒமிக்ரான் காரணமாகவும் 2021ன் நான்காம் காலாண்டில் பல கிரிப்டோகரன்சிகள் தடுமாறின.

புத்தாண்டில் நாணயத்தின் மதிப்பு கிட்டத்தட்ட $0.10 இருந்தது. 2022 ஜனவரி 4ல் ஒரு சுருக்கமான உயரத்தைப் பார்க்க முடிந்ததுடன், $0.13க்கும் சற்று மேலான விலை வரை அணிவகுப்பைப் பார்க்க முடிந்தது. ஜனவரி 28 அன்று எழுதும் நேரத்தில், நாணயத்தின் மதிப்பு தோராயமாக $0.67 ஆக இருந்தது, இது முந்தைய முடிவிலிருந்து 2.27% அதிகமாகும். அட்டைகளில் மீட்பு உள்ளதா? சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, RSI வாங்குவதற்கான நல்ல நேரத்தைக் குறிக்கிறது. இருப்பினும், எளிய நகரும் சராசரிகள் விற்பனை நிலையில் உறுதியாக உள்ளன. DigitalCoinPrice ஆய்வுக்குழுவின் குறிகாட்டிகள், விற்கும்படி 14 பரிந்துரைகளையும், வைத்திருக்கும்படி 9ம், வாங்கும்படி மூன்று பரிந்துரைகளையும் தருகிறது.

சரி, இதுதான் இந்த நாணயத்தின் இப்போது வரையிலான வரலாறு. ஆனால் எதிர்காலம்? ரேவன்காயினின் விலைக் கணிப்பு என்ன? மற்ற பகுப்பாய்வாளர்களின் தளங்கள் எப்படிக் கணிக்கின்றன என்று பார்க்கலாம்.

RVN விலைக் கணிப்பு

முதலில், WalletInvestor-ன் செயற்கை அறிவின் மூலம் பெறப்பட்ட ரேவன்காயினின் விலைக் கணிப்புப்படி RVN ஒருவருடத்தில் $0.13ஐத் தொடும்; ஐந்து ஆண்டுகளில் $0.40 ஐத் தொடும்.

அடுத்தது, DigitalCoinPrice-ன் இந்த நாணயம் மீதான 2022க்கான ரேவன்காயின் விலைக் கணிப்புப்படி, இந்த ஆண்டு இறுதிவரையிலும் நாணயத்தின் விலை 10 சென்டுகளுக்குக் கீழேயே இருக்குமென்றும், அக்டோபரில் மாத சராசரி உயரமாக $0.099ஐ எட்டுமென்றும் கூறுகிறது. 2025க்கான ரேவன்காயின் விலைக் கணிப்பு $0.14 ஆக உள்ளது.

கடைசியாக, Gov.Capital-ன் தனிப்பட்ட சூத்திரமானது கிரிப்டோ சந்தைகளில் RVN வளர்ச்சியடையும் என்கிறது. இதன் 2022க்கான ரேவன்காயின் விலைக் கணிப்புப்படி, பிப்ரவரி இறுதியில் $0.10வைத் தாண்டும் என்கிறது. 2025 பிப்ரவரியில் $0.50 தடையை உடைக்கக்கூடும்: இது மற்ற கணிப்புகளைக் காட்டிலும் கூடுதல் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக உள்ளது.

2030க்கான ரேவன்காயின் விலைக்கணிப்பை PricePrediction.net தளத்தில் பார்க்கலாம். இது அதிகபட்ச மதிப்பாக $2.00வைக் குறிப்பிடுகிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ரேவன்காயின் விலை ஏன் ஏறுகிறது?

அலையெழுச்சி எல்லாக் கப்பல்களையும் உயர்த்துகிறது என்ற கூற்றில் சற்று உண்மையுள்ளது. தனிப்பட்ட நாணயம் ஏறுவதற்கும் சரிவதற்கும் தேவையான அதிர்ஷ்டம் ஒட்டுமொத்த கிரிப்டோகரன்சி சந்தையை பொருத்தது.

தங்கள் சொந்த டோக்கனை உருவாக்க அனுமதிக்கக்கூடிய பிட்காயின் அடிப்படையிலான பிளாக்செயினுக்கு வாய்ப்பு உள்ளது என்று கருதும் மக்களுக்கு RVN ஓர் ஆர்வமூட்டும் உருவாக்கல் ஆகும்.

இது வெறுமனே ஒரு தற்காலிக ஏற்றமாக இருந்து சந்தை தன்னைத்தானே நேர்செய்துகொள்ளவும் வாய்ப்புள்ளது. கவனமாக இருங்கள் – நீங்கள் முதலீடு செய்யும்முன் உங்கள் சொந்த ஆராய்ச்சியை மேற்கொள்வதை நினைவில் கொள்ளுங்கள்.

ரேவன்காயின் $1ஐத் தொடுமா?

தொடக்கூடும். ஆனால் அது நடந்தால், அது நீண்ட காலம் இருக்க வாய்ப்பில்லை. பெரும்பாலான ரேவன்காயின் (RVN) விலைக் கணிப்புகள் மந்தமான வளர்ச்சியையும், ஒரு டாலரை எட்டுவதற்கான குறைவான ஆதாரத்தையுமே காட்டுகின்றன.

$1ஐ ஒருபோதும் அது எட்டாது என்று இதன்மூலம் சொல்லவரவில்லை – அவ்வாறு நடக்க நீண்டகாலம் ஆகலாம்.

ரேவன்காயின் ஒரு நல்ல முதலீடு தானா?

இருக்கலாம். எனினும், இங்கே ஒரு வார்த்தை நாங்கள் எச்சரிக்க வேண்டியுள்ளது. கணிப்புகள் பொதுவாக ஏற்றத்தைக் காட்டக்கூடியதாக நேர்மறையாக இருந்தாலும், இத்தகைய கணிப்புகள் பெரும்பாலும் தவறாக இருப்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ரேவன்காயினில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், நீங்கள் சொந்தமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். கிரிப்டோகரன்சிகள் கடுமையான விலையேற்றத்தையும் இறக்கத்தையும் கொண்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். RVN விலை வரலாறு காட்டுவதைப் போல, விலை இறங்கவும் ஏறவும் கூடும். உங்களால் தாங்கக்கூடிய இழப்புக்கு அதிகமான பணத்தை ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள்.

மேலும் படிக்க:

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image