ரிப்பில் விலைக் கணிப்புகள்: எதிர்காலத்தில் XRP வளர்ச்சி எப்படியிருக்கும்
வரவிருக்கும் ஆண்டுகளில் XRP வளர்ச்சி எப்படியிருக்கும்; நாம் கவனிக்க வேண்டியது என்ன

உள்ளடக்கம்
- ரிப்பில் விலைக் கணிப்பு, XRP விலைப் போக்குகள்
- ரிப்பில் XRP விலைப் போக்கும் கவனிக்க வேண்டிய விஷயங்களும்
- ரிப்பில் எவ்வாறு செயல்படுகிறது
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
காலவோட்டத்தில் டிஜிட்டல் சொத்து வெளி முதிர்ச்சியடையும்போது, பார்வையாளர்களும் கிரிப்டோ வைத்திருப்பவர்களும் ஒழுங்குமுறையாளர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதை ரிப்பிலின் XRP முன்னோடியாகச் செய்துள்ளது. ரிப்பில் 2012ல் தொடங்கப்பட்டு, எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு கிரிப்டோகரன்சி. இது கிடைக்கக்கூடிய மிகவும் பிரபலமான நாணயங்களில் ஒன்றாகும் - இது தற்போது உலகின் எட்டாவது இடத்தில் மதிப்பிடப்பட்டுள்ளது.
இது 2021ல் ஒரு சில சரிவுகளைச் சந்தித்துள்ளது. ஆனால் ரிப்பில் விலைக் கணிப்புகளைச் செய்பவர்களிடையே பொதுவான ஒருமித்த கருத்து என்னவென்றால், நீண்ட கால அடிப்படையில் சில ஊக்கமளிக்கும் புள்ளிவிவரங்களுடன், எதிர்காலத் தோற்றம் நன்றாக உள்ளது என்பதுதான்.
இருப்பினும், உடனடி எதிர்காலம் அவ்வளவு பிரகாசமாக இருக்காது. கிரிப்டோகரன்சிகள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கின்றன. ஒட்டுமொத்த சந்தைப் போக்குகளும் முன்னின்று வழிகாட்டும்படியாக தொடர்கிறது. எனவே இது உங்களை ரிப்பிலில் முதலீடு செய்வதில் இருந்து தடுக்க கூடாது.
ரிப்பில் விலைக் கணிப்பு, XRP விலைப் போக்குகள்
2018 ஜனவரி 4ல் XRP $3.84 என்ற அதிகபட்ச விலையைப் பதிவுசெய்தது உட்பட, கடந்த காலத்தில் சில ஈர்க்கக்கூடிய உச்சங்களை எட்டியிருந்தாலும், அதற்குப்பின் தவிர்க்க முடியாத சரிவைச் சந்தித்தது. ஆண்டு முழுவதும் மற்றும் 2020 இறுதியில் தொடர்ந்து $0.24 என்ற குறைந்தபட்ச விலையைச் சந்தித்தபடி இருந்தது.
2021 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மற்றொரு ஏற்றத்தில், XRP $1.84 ஆக உயர்ந்தது. ஆனால் செப்டம்பர் மாதத்திற்குள், கிரிப்டோ சந்தையில் ஏற்பட்ட சிரமங்களால் - பிட்காயின் $100 பில்லியனை இழந்தது - XRP-ன் விலை மீண்டும் $1.40லிருந்து $1.09க்கு வீழ்ச்சியடைந்தது.
பொதுவாக கிரிப்டோகரன்சிகளுக்குக் கடினமான காலமாக இருந்த 2021 நான்காம் காலாண்டிற்குப் பிறகு, டிசம்பரில் பிட்காயின் கடுமையான இழப்புகளைச் சந்தித்தது. ஓமிக்ரான் மற்றும் அதன் விளைவாக விதிக்கப்படும் விதிமுறைகள் பொதுவாக கிரிப்டோ சந்தைகளுக்கு சிக்கலாகவே உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜனவரி 13 நிலவரப்படி, XRP $0.78ல் வர்த்தகம் ஆனது. ஆனால் ஒரு வலுவான தலைகீழ் மாற்றத்துக்குத் தயாராகவே உள்ளது.
கிரிப்டோகரன்சிகள் மென்மேலும் உலகளவில் ஸ்தாபிதம் பெற்று வருவதால் XRP ஏற்கத்தக்க இடத்தில் நிலைகொண்டுள்ளது. அதன் தனித்துவமான விற்பனைப் புள்ளி - குறிப்பாக சர்வதேச பணப் பரிமாற்றத்தை விரைவுபடுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது - அதிகரித்து வரும் உலகமயமாக்கல் நேரத்தில் அதிகமான மக்களை ஈர்க்க உதவும்.
இது சர்வதேச வங்கிப் பரிமாற்றங்களின் தற்போதைய SWIFT/BIC முறையை மாற்றும் என்று சில கணிப்புகள் கூட உள்ளன. அவ்வாறு நடந்தால், மிகவும் நேர்மறையாக உள்ள ரிப்பில் விலைக் கணிப்புகள் சரியாக இருக்கலாம்.
What is your sentiment on XRP/USD?
எனவே ரிப்பில் விலை மேலே செல்லுமா? ரிப்பிலின் மதிப்பு உயரும் என்பதில் ஒருமித்த கருத்து இருப்பதாகத் தோன்றுகிறது. இருப்பினும் எந்த அளவு உயரும் என்று யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. ரிப்பில் நாணயத்தின் விலைக் கணிப்புகள் மாறுபடக்கூடியவை. ஆனால் பல கணிப்புகள் நேர்மறையானதாகவும் மற்றும் நீண்ட காலத்திற்கு நம்பிக்கை ஊட்டுவதாகவும் உள்ளன.
ரிப்பில் XRP விலைப் போக்கும் கவனிக்க வேண்டிய விஷயங்களும்
இருப்பினும், இதில் சிக்கல்கள் இருக்கலாம். XRP தற்போது மொத்த வழங்கலான 100 பில்லியன் டோக்கன்களில், 45.4 பில்லியன் டோக்கன்கள் புழக்கத்தில் உள்ளன. ரிப்பிள் லேப்ஸ் ஆரம்பத்தில் 55 பில்லியன் XRP டோக்கன்களை வைத்திருந்ததுடன், மாதத்திற்கு ஒரு பில்லியனை தங்கள் விருப்பப்படி விற்பதற்கான உரிமையைப் பெற்றிருந்தது. இந்த வரம்புக்குட்பட்ட வழங்கல் காரணமாக தகுதியுள்ள முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தயங்கவும், நீண்டகால நோக்கில் இதை வைத்துக் கொண்டிருப்பதில் பிரயோசனமில்லை என்று முடிவெடுக்கவும் கூடும். இதனால் விலை வீழ்ச்சியடையக்கூடும்.
பல கிரிப்டோகரன்ஸிகள் வரம்புக்குட்பட்ட விநியோகத்தைக் கொண்டிருந்தாலும், ரிப்பில் எந்த நேரத்தில் எத்தனை (அல்லது அதற்குப் பதிலாக, எவ்வளவு குறைவான) டோக்கன்களை வெளியிடுகிறது என்பதில் குறிப்பாக வரம்பிடப்பட்டுள்ளது. இது ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும். இதனால் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்வார்கள். அப்படியானால், ரிப்பிலின் விலைப் பகுப்பாய்வு எதிர்பார்க்கப்பட்ட அளவு நேர்மறையாக இருக்காது.
இப்போது ரிப்பில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை, அமெரிக்காவின் செக்யூரிட்டிஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கமிஷனுடன் (SEC) நடந்து வரும் வழக்கு. XRP என்பது பதிவுசெய்யப்படாத சொத்து என்று SEC வாதிடுகிறது. இந்தக் கூற்றை ரிப்பில் மறுக்கிறது. ரிப்பிலின் விலைப் பகுப்பாய்வு, அந்நிறுவனம் வழக்கை வெல்வதைப் பொறுத்து இருக்கிறது - ஒருவேளை தோற்றால், நிலைமை மோசமாகிவிடும். இருப்பினும், பல வல்லுநர்கள், ரிப்பிலின் உரிமை கோரல் வலுவானது என்றும், அது வெற்றி பெறும் என்றும் நம்புகிறார்கள்.
தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான பிராட் கார்லிங்ஹவுஸ் ஓர் அறிக்கையை வெளியிட்டார்: " நீங்கள் கவலைப்படுவதை நான் விரும்ப மாட்டேன். இதை நாங்கள் சமாளிப்போம். எங்கள் வழக்கை நீதிமன்றத்தில் நிரூபிப்போம். எங்களிடம் ஒரு தனித்துவமான சட்டக்குழு உள்ளது. நான் சொன்னதுபோல், நாங்கள் சட்டத்தின் சரியான பக்கத்தில் இருக்கிறோம். இருப்பினும், சட்ட அமைப்பு மெதுவாக உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இது ஒரு நீண்ட, உரிமையியல் செயல்முறையின் ஆரம்பம்.”
ரிப்பில் எவ்வாறு செயல்படுகிறது
ரிப்பிலை மிகவும் சுவாரஸ்யமாக்குவது அது செயல்படும் விதம். இதில் பிளாக்செயின் இல்லை.
அதற்குப் பதிலாக, தரகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பணம் செலுத்துவதற்குப் பதிலாக பணம் செலுத்துவதற்கான வாக்குறுதிகளை பரிமாறுகிறார்கள். இதன் பொருள், எந்தவொரு நாணயத்தையும் மாற்றுவதற்கு இது பயன்படுத்தப்படலாம். இது சர்வதேச வங்கிச் சேவைக்கு ஒரு நெகிழ்வான வழியை உருவாக்கும். இது நடந்தால், ரிப்பில் விலைக் கணிப்பு மிகவும் சாதகமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ரிப்பில் - US டாலர் வர்த்தகம் – XRP/USD விளக்கப்படம்
XRP/USD முந்தைய விலை
தேதி | முடிவு | மாற்றம் | மாற்றம்(%) | ஆரம்பம் | அதிகம் | குறைவு |
---|---|---|---|---|---|---|
Feb 2, 2023 | 0.41178 | -0.00041 | -0.10% | 0.41219 | 0.41647 | 0.40920 |
Feb 1, 2023 | 0.41217 | 0.00744 | 1.84% | 0.40473 | 0.41445 | 0.39547 |
Jan 31, 2023 | 0.40473 | 0.01229 | 3.13% | 0.39244 | 0.41026 | 0.38714 |
Jan 30, 2023 | 0.39244 | -0.01999 | -4.85% | 0.41243 | 0.42100 | 0.38568 |
Jan 29, 2023 | 0.41240 | 0.00558 | 1.37% | 0.40682 | 0.41623 | 0.40561 |
Jan 28, 2023 | 0.40683 | -0.00473 | -1.15% | 0.41156 | 0.41537 | 0.40485 |
Jan 27, 2023 | 0.41164 | 0.00336 | 0.82% | 0.40828 | 0.41250 | 0.39779 |
Jan 26, 2023 | 0.40826 | -0.00783 | -1.88% | 0.41609 | 0.41679 | 0.40418 |
Jan 25, 2023 | 0.41608 | 0.00926 | 2.28% | 0.40682 | 0.42326 | 0.39621 |
Jan 24, 2023 | 0.40680 | -0.01546 | -3.66% | 0.42226 | 0.42999 | 0.40169 |
Jan 23, 2023 | 0.42226 | 0.02271 | 5.68% | 0.39955 | 0.43162 | 0.39873 |
Jan 22, 2023 | 0.39954 | -0.00289 | -0.72% | 0.40243 | 0.41089 | 0.39545 |
Jan 21, 2023 | 0.40243 | -0.00931 | -2.26% | 0.41174 | 0.41518 | 0.39705 |
Jan 20, 2023 | 0.41191 | 0.02001 | 5.11% | 0.39190 | 0.41279 | 0.38479 |
Jan 19, 2023 | 0.39191 | 0.01486 | 3.94% | 0.37705 | 0.39539 | 0.37537 |
Jan 18, 2023 | 0.37706 | -0.00880 | -2.28% | 0.38586 | 0.39526 | 0.36659 |
Jan 17, 2023 | 0.38580 | 0.00109 | 0.28% | 0.38471 | 0.39755 | 0.37814 |
Jan 16, 2023 | 0.38465 | 0.00094 | 0.24% | 0.38371 | 0.40551 | 0.37686 |
Jan 15, 2023 | 0.38375 | -0.01075 | -2.72% | 0.39450 | 0.39582 | 0.37884 |
Jan 14, 2023 | 0.39451 | 0.00983 | 2.56% | 0.38468 | 0.40762 | 0.37634 |
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ரிப்பில் $1,000-ஐ எட்டுமா?
XRP தற்போதைக்கு $1,000-ஐ எட்ட வாய்ப்பில்லை: பெரும்பாலான ரிப்பில் விலையின் ஐந்தாண்டு கணிப்புகள், 2026க்குள் $2 (DigitalCoinPrice) மற்றும் $5-6க்கு (Gov.capital) இடையில் என்று உள்ளன.
Currency.com-ன் தரவுகளின்படி, XRP விலை ஏறக்குறைய இரண்டு மாதங்களாக இறக்கப் பாதையில் சிக்கியுள்ளது. ஆனால் அது ஒரு மாறக்கூடிய புள்ளியை எட்டக்கூடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தடையை மீறி மேலேறத் தொடங்கினால் அது ஒரு பெரிய ஏற்றத்தைத் தூண்டும்.
இருப்பினும், கிரிப்டோகரன்ஸிகள் மிகவும் நிலையற்றவை என்பதையும், நீங்கள் இழப்பை தாங்கக்கூடிய அளவிற்கு அதிகமாக முதலீடு செய்யக் கூடாது என்பதையும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். எப்பொழுதும் உங்களின் சொந்த முயற்சியில் செயல்படுத்தவும். முதலீடு செய்வதற்கு முன் முழுமையான ஆராய்ச்சியை மேற்கொள்ளுங்கள்.
2025ல் ரிப்பிலின் மதிப்பு என்னவாக இருக்கும்?
ஒட்டுமொத்தமாக கிரிப்டோகரன்சிகளின் அதிகரித்துவரும் பிரபலத்திலிருந்து இந்த நாணயமானது பயனடையும் என்று சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அதாவது மதிப்பு உயரக்கூடும். இந்த ரிப்பில் கணிப்பு ஊக்கமளிக்கிறது. இது XRP ஒரு பயனுள்ள முதலீடு என்ற பொருளை வழங்குகிறது.
ஒரு வருட காலத்தில் XRP $1.31ஐ எட்டும் என்றும் ஐந்தாண்டுகளில் $3.53ஐ அடையலாம் என்றும் WalletInvestors நம்புகிறது. 2025க்கான கணிக்கப்பட்ட மதிப்பு $2 முதல் $2.90 வரை இருக்கும்.
Gov.capital XRP ஒரு வருட காலத்தில் $1.34 ஆகவும், ஐந்து ஆண்டுகளில் $5.32 ஆகவும் இருக்கும் என நம்புகிறது. 2025 ஆம் ஆண்டில், நாணயம் ஆண்டின் தொடக்கத்தில் $2.75 ஆகவும், நவம்பர் மாதத்திற்குள் அதிகபட்சமாக $4.05 ஆகவும் இருக்கும். 2022 ஆம் ஆண்டிற்கான XRP விலைக் கணிப்புப்படி, அந்த ஆண்டு நவம்பரில் நாணயம் $1.25ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2030ல் ரிப்பிலின் மதிப்பு என்னவாக இருக்கும்?
எல்லா நீண்ட காலக் கணிப்புகளையும் போலவே, இதையும் கண்டறிவது சற்று கடினம்.
அதிகபட்ச விலை $26.94ஐ எட்டுவதற்கான சாத்தியக்கூறு நாணயத்திற்கு இருப்பதாக PricePrediction கூறுகிறது. TradingEducation சற்று நம்பிக்கையுடன் உள்ளது. நாணயம் 2030க்குள் $17- $20 வரை செல்லக்கூடும் என்று நம்புகிறது.
இருப்பினும், எப்பொழுதும் போல, ஆய்வாளர்களின் கணிப்புகள், குறிப்பாக நீண்ட காலக் கணிப்புகள் தவறாக இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
ரிப்பில் ஒரு நல்ல முதலீடா?
எப்போதும் எச்சரிக்கையாக இருப்பது புத்திசாலித்தனம். எல்லா வகையான முதலீட்டையும் போலவே, பணத்தைப் பெறுவதை விட இழப்பதற்கான வாய்ப்பு எப்போதும் அதிகம் உள்ளது. நடந்துகொண்டிருக்கும் SEC நீதிமன்ற வழக்கின் நிழல் XRPயில் முதலீடு செய்யத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மீதும் உள்ளது.
ஆயினும்கூட, XRP என்பது பிட்காயின், ஈதர் மற்றும் டெதர் ஆகியவற்றால் மட்டுமே தோற்கடிக்கப்பட்ட மிகப்பெரிய கிரிப்டோகரன்ஸிகளில் ஒன்றாகும். மேலும், குறிப்பிடத்தக்க அளவு முதலீட்டாளர்கள் இதைப் பின்தொடர்கின்றனர். பல ஆய்வாளர்கள் ஊக்கமூட்டும்படியான ரிப்பில் முன்கணிப்புகளைத் தந்துள்ளனர். இது மனதில் கொள்ளத்தக்கது. ஆனால் எப்போதும் உங்கள் சொந்த ஆராய்ச்சியை முதலில் செய்வதை நினைவில் கொள்ளுங்கள்.