SAND நாணய விலைக் கணிப்பு: சாண்ட்பாக்ஸ் ஒரு நல்ல முதலீடு தானா?

By Currency.com Research Team
• புதுப்பிக்கப்பட்டது

SAND டோக்கன் NFTகளின் உலகத்துக்கு ஆற்றலை வழங்குகிறது. ஆனால் SAND நாணய விலைக் கணிப்பு என்னவாக இருக்கிறது?

SAND நாணய விலைக் கணிப்பு                                 

உள்ளடக்கம்

சாண்ட்பாக்ஸின் சொந்த டோக்கன் SAND ஆகும். பயனர்கள் தனித்துவமான  டோக்கன்களை (NFTகள்) வாங்குவதற்கும், வர்த்தகம் செய்வதற்கும், தயாரிப்பதற்கும் வழிவகுக்கக்கூடிய இணையவழி அனுபவத்தை இது வழங்குகிறது. SAND-ல் என்ன நடக்கிறது, என்ன நடந்தது, இனி என்ன நடக்கும்? நம்மால் SAND விலைக் கணிப்பைச் செய்ய முடியுமா?

SAND கிரிப்டோ விலைக் கணிப்பைப் பார்க்கும்முன், SAND விலை வரலாற்றைப் பார்க்கலாம். முந்தைய செயற்திறனை வருங்கால முடிவுகளுக்கான குறிகாட்டியாக எடுக்கக்கூடாது என்றாலும், முன்பு SAND எப்படி நடந்துகொண்டது என்பதைப் பார்ப்பதால் சாண்ட்பாக்ஸ் விலைக் கணிப்பில் சில முக்கிய சூழ்நிலைகளை நாம் புரிந்துகொள்ள முடியும்.

SAND விலை வரலாறு

SAND முதன்முதலாக 2020 கோடையில் வெளிச்சந்தைக்கு வந்தது. அந்த ஆண்டு ஆகஸ்ட் 14ல் விலை $0.08658 ஆக இருந்தது.

எனினும், இந்த விலை நாணயத்தின் ஆற்றலை சற்று அதிகமாக மதிப்பிட்டதாக இருந்தது. விலை உடனே சரிந்து, மாதத்தின் பாதியில் $0.05 குறியீட்டைச் சுற்றி வந்துகொண்டிருந்தது. ஆகஸ்ட் முடிவில் $0.07018க்கு மீண்டது.

அதிலிருந்து கீழ்நோக்கிய சரிவுக்குச் சென்றது. செப்டம்பரின் பெரும்பகுதியிலும் அக்டோபர் தொடக்கத்திலும் $0.04க்கும் $0.05க்கும் இடையிலேயே நின்று அக்டோபர் 20ல் $0.04க்கும் கீழே இறங்கியது. சரிவு அத்தோடு முடியவில்லை. 2020 நவம்பர் 4ல் அதுவரையில்லாத குறைந்த விலையான $0.02894ஐத் தொட்டது. ஆண்டின் எஞ்சிய மாதங்களில் சற்று மீண்டெழுந்து 2020 ஆண்டு முடிவில் $0.03565 ஆக இருந்தது.

2021 ஜனவரி SANDக்கு உற்சாகமளிப்பதாக இருந்தது. ஜனவர் 21ல் $0.10 என்ற தடையை உடைத்து அந்த மாதத்தின் அதிகபட்ச விலையான $0.1476ஐத் தொட்டது. சற்று பின்வாங்கல் ஏற்பட்டு மாதமுடிவில் $0.08266 விலையில் இருந்தது. இது டிசம்பர் முடிவிலிருந்து 130%க்கும் மேலன எழுச்சியைக் காட்டுகிறது. இது போன்ற உயிர்ப்பான செயல்பாட்டினால் பல முதலீட்டாளர்கள் SAND விலைக் கணிப்பைச் செய்யத் தொடங்கினர். இதனால் நாணயத்தின் விலை மேலும் ஏறியது.

இந்த நேரத்தில் கிரிப்டோகரன்சி சந்தைக்கு நீடித்த ஏறுமுகமான காலமாக இருந்தது. SAND, தனது சொந்த வழியில் இந்த நடவடிக்கையால் பீடிக்கப்பட்டு பிப்ரவரியில் மேலும் வளர்ச்சியைக் கண்டது. பிப்ரவரி 13ல் இன்ட்ராடே வர்த்தகத்தில் உச்சவிலையான $0.2136ஐத் தொட்டது. பிப்ரவரி 22ல் $0.30வுக்கும் மேலே சென்று மாதாந்திர உச்சவிலையான $0.3645ஐ எட்டியது. ஒரு வீழ்ச்சியும் இருந்தது. ஆனால் பிப்ரவரியில் இறுதி விலையாக $0.2179 இருந்தது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிட்டால் 160%க்கும் மேல் அதிகம்.

2021 மார்ச் SANDக்கு மேலும் வளர்ச்சியைத் தந்தது. மார்ச் 28ல் நாணயம் மாதாந்திர அதிகபட்ச விலையான $0.9327ஐ அடைந்தது. மாத இறுதியில் $0.8293 ஆக இருந்தது. இது முந்தைய மாதத்தைக் காட்டிலும் கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம். ஏப்ரலில் தொடர்ந்து உந்திச் செல்ல இந்த டோக்கன் தவறிவிட்டது. 

குறைந்தது ஒரு SAND விலைக் கணிப்பாவது இந்த கிரிப்டோ $1ஐ உடைக்குமென்று சொல்லியிருந்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. மாறாக, ஏப்ரல் முதல்நாளில் $0.8334 மாதாந்திர உச்சமாக இருந்து. பின், மெல்லமெல்ல சீராகச் சரியத் தொடங்கி மாத இறுதியில் 25% இறங்கி $0.6211 என்று முடிந்தது.

SAND நாணய விலைக் கணிப்பு
SAND நாணய விலைக் கணிப்பு – நன்றி: Currency.com

2021 மே SANDக்கும் அதன் முதலீட்டாளர்களுக்கும் மேலும் மோசமானதாக இருந்தது. மே 4ல் இன்ட்ராடே வர்த்தகத்தின் உச்சமாக $0.7211 இருந்தது எனினும், முழு மாதத்துக்கும் இதுதான் சிறந்த விலையாக இருந்தது.

மே 10ல் பேரிடர் தாக்கியபோது இன்ட்ராடே வர்த்தகத்தின் உச்சவிலையே $0.4018 தான். மாபெரும் கிரிப்டோ வீழ்ச்சி தினத்தன்று $0.1829 என்ற விலைக்கு வீழ்ச்சியடைந்தது – இது பாதிக்கும் மேலான வீழ்ச்சி – சிலமணி நேரங்களில் விலை $0.2841க்கு மீண்டு வந்தது. நாணயம் ஒரு சிறிய அளவில் திரும்ப ஏறினாலும், அது போதுமானதாக இல்லை. மாத முடிவில் $0.3346 ஆக இருந்தது – சந்தை வீழ்ச்சிக்கு முன் இருந்ததைவிட இது மிகவும் குறைவு. ஏப்ரல் முடிவில், இந்த விலையை விட கிட்டத்தட்ட பாதி குறைந்திருந்தது.

ஜூன் மாதம் தேக்கத்துக்கான நேரமாக இருந்தது. ஜூன் 3ல் மாதாந்திர உச்சவிலை $0.3692ஐ அடைந்தது. ஆனால் மாதத்தின் பெரும்பாலான நாட்களில் $0.30க்குக் கீழாக இருந்தது. மாத இறுதி விலை $0.2453 – முந்தைய மாதத்தைக் காட்டிலும் கால் பங்குக்கும் மேலாக வீழ்ச்சியடைந்திருந்தது. ஜூலை இதைவிட நன்றாக இருந்தது. ஜூலை 7ல் $0.4435ஐத் தொட்டபோது, சந்தை வீழ்ச்சிக்கு முந்தைய நிலைகளுக்குத் திரும்பியது.

இதில் இன்னும் வரவிருந்தன. எனினும், மறுநாள் நாணயம் $0.50வைத் தாண்டி ஜூலை 14ல் $0.60க்கு எழுந்தது. மேடுகளும் பள்ளங்களும் இருந்தாலும், ஜூலை 24ல் மாத உச்சமான $0.8442ஐ எட்டியது. இந்த நிலையிலிருந்து சற்று பின்வாங்கல் இருந்தது. ஆனால் மாதமுடிவில் இருந்த $0.6396 விலை ஒருமாதத்தில் கிட்டத்தட்ட மூன்றுமடங்கு ஏறியதைக் காட்டுகிறது.

2021 ஆகஸ்டில் SAND தனது நிலையைத் தக்கவைத்துக் கொண்டதுடன் மேலும் அதிகரித்து இறுதியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட $1 குறியீட்டை ஆகஸ்ட் 29ல் உடைத்தது. மறுநாள் மாத உச்சவிலையான $1.20ஐத் தொட்டது. ஒரு சிறிய சரிவு ஏற்பட்டாலும், ஆகஸ்ட் இறுதியில் $0.955 என்று முடிந்தது. இது முந்தைய மாதத்தின் விலையில் கிட்டத்தட்ட பாதி பங்கு அதிகரித்தது.

செப்டம்பரில், மாத முதல்நாளின் இன்ட்ராடே வர்த்தகத்தில் $1.13ஐ எட்டியதுதான் SAND நாணயம் பெற்ற மிகச்சிறந்த ஒன்று. பின்னர் சுருண்டு விழுந்து $0.6718ல் முடிந்தது – ஆகஸ்ட் கடைசியோடு ஒப்பிட்டால் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வீழ்ச்சி.

அக்டோபர் மாதத்தில், மிகுந்த விலையேற்றத்திற்கான SAND நாணய விலைக் கணிப்புகூட கணித்திருக்க முடியாதபடி, பல விஷயங்கள் நடந்தேறுமுன் மெதுவான திடமான வளர்ச்சியைப் போலத் தோன்றியது. அக்டோபர் 28ல் விலை $0.7667ல் துவங்கியது. ஆனால் மறுநாள் $1ஐக் கடந்து இன்ட்ராடே வர்த்தக உச்சவிலையாக $1.19ஐப் பதிவுசெய்தது.

அதற்கு மறுநாள் மேலும் சிறப்புவாய்ந்ததாக இருந்தது. SAND திடீரென்று $2 குறியீட்டை உடைத்து $2.35ஐத் தொட்டது. அதற்கு மறுநாள் இன்ட்ராடே வர்த்தகத்தில் $2.41ஐ எட்டி அக்டோபர் மாதத்தின் உச்சவிலையைப் பதிவுசெய்தது. ஒரு பின்வாங்கல் ஏற்பட்டு, மாதத்தை $1.59 என்ற விலையில் முடித்தது. இருப்பினும் இந்தவிலை மூன்றே நாட்களில் இருமடங்கானதைக் காட்டுகிறது. முந்தைய மாத முடிவைக் காட்டிலும் இது 135% அதிகம்.

2021 நவம்பரில் நானயத்தின் விலை விரைந்து விண்ணில் பறந்தது. நவம்பர் 2ல் $3 தடைக்கல்லை உடைத்தது. முகடுகளும் பள்ளங்களும் இருந்தாலும், நவம்பர் 20ல் $4ஐயும் நவம்பர் 24ல் $5ஐயும் தகர்த்தது. இதுவரை இல்லாத உச்சவிலையாக $8.44ஐ நவம்பர் 25ல் பதிவுசெய்தது. மாத இறுதியில் SAND $6.77ல் வர்த்தகமாகிக் கொண்டிருந்தது.

2021 டிசம்பர், கிரிப்டோகள் குறித்து மேலும் ஊகங்களைக் கொண்டுவந்தது. பிட்காயின் 19% விழுந்தது. SAND விதிவிலக்கல்ல. இந்த மாதத்தின் குறைந்தபட்ச விலை $4.44 ஆக இருந்தது. எனினும், மாத இறுதியில் சற்று மீண்டெழுந்து $6.96க்கு வர்த்தகமானது.

2022 ஜனவரி 5ல் இதன் Lands NFT தொடரில் 70% மைல்கல் விற்பனையை எட்டியது. சாண்ட்பாக்ஸ் பல்வேறு ஹாங்காங் கூட்டாளர்களுடன் இணைந்து மெகா சிட்டி என்றழைக்கப்படும் ஒரு புதிய கலாச்சார மையத்தை உருவாக்கியது. ஆனால் தொடர்ந்துவந்த கரடிச் சந்தையில் இது ஒரு சிறிய தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தியது. இதை எழுதிக் கொண்டிருந்த 2022 ஜனவரி 25ல் நாணயம் $3.00க்கு வர்த்தகமாகிக் கொண்டிருந்தது.

நாணயத்தின் போக்கில் தலைகீழ் மாற்றம் இருக்குமா? RSI குறிக்காட்டி, ஆவரேஜ் டைரக்‌ஷனல் இன்டெக்ஸ், ஹல் மூவிங் ஆவரேஜ் இவை அனைத்துமே ஒரு வாங்குவதற்கான நிலையை சுட்டிக் காட்டுகின்றன. அதாவது நாணயம் திரும்பத் துள்ளியெழக்கூடிய நல்ல நிலையில் உள்ளதைக் காட்டுகின்றன. எனினும், 10நாள் வர்த்தக அளவு-நிறை நகர்வு சராசரியும் (VWMA) எளிய நகர்வு சராசரிகளும் (SMAs) மடங்குவீத நகர்வு சராசரிகளும் (EMAs) பொதுவான விற்கும் போக்கினைக் காட்டுகின்றன. DigitalCoinPrice-யின் குறிக்காட்டிகள் வழங்கும் தரவுப்படி: அவற்றில் 12 விற்கவும்; எட்டு கையில் வைத்திருக்கவும் மற்றும் ஆறு வாங்கவும் பரிந்துரைக்கின்றன.

இதை ஒருபுறம் வைத்துவிட்டு 2022 மற்றும் அதைத் தாண்டி சாண்ட்பாக்ஸ் விலை என்னவாக இருக்கும் என்று பார்ப்போம். மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.

கணிப்புகள், குறிப்பாக நீண்டகால நோக்கில் மிகப் பெரும்பாலும் தவறாகவே இருக்கும். அத்துடன் பல கிரிப்டோ விலைக் கணிப்புகள் சூத்திரங்களைக் கொண்டு செய்யப்படுகின்றன. இவை தொடர்ந்து மாறக்கூடியவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

SAND நாணய விலை முன்னறிவிப்பு

WalletInvestor வழங்கும் SAND நாணய விலைக் கணிப்புப்படி ஒருவருடத்தில் $11.88ஐத் தொடுமென்றும் ஐந்தாண்டு காலத்தில் $47.36ஐத் தொடுமென்றும் சொல்கிறது. 

PricePrediction.net சாண்ட்பாக்ஸின் விலை 2022ல் குறைந்தபட்சம் $3.99 ஆக இருக்குமென்கிறது. அதிகபட்சம் $4.88 ஆகவும் சராசரியாக $4.13 ஆகவும் இருக்கும் என்கிறது. ஐந்து ஆண்டுகளில் சாண்ட்பாக்ஸின் சராசரி விலை $26.50ஐ எட்டும். 2030ல் சாண்ட்பாக்ஸின் சராசரி விலை $85.33 ஆக இருக்குமென்கிறது.

இறுதியாக, Gov Capital SAND ஒருவருடத்தில் $12.56ஐ எட்டுமென்றும் ஐந்தாண்டுகளில் $107.32ஐ எட்டுமென்றும் சொல்கிறது. இந்த நாணயத்தின் 2025க்கான சாண்ட்பாக்ஸ் விலைக்கணிப்புப்படி, பிப்ரவரியில் $50 குறியீட்டைத் தாண்டுமென்றும் அந்த ஆண்டு டிசம்பரில் $76.85 என்ற உச்சத்தை எட்டுமென்றும் கூறுகிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இருக்கலாம். SAND கடந்த 12 மாதங்களில் நிச்சயம் மிக நன்றாகச் செயல்பட்டுள்ளது – உண்மையில் இதன் விலை வியப்பூட்டும் வகையில் ஒரு வெடிப்பைக் கண்டுள்ளது.

இதைச் சொல்லும்போது, நீங்கள் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். கிரிப்டோகரன்சிகள் அதிக மாறியல்பு கொண்டவை. விலைகள் நிச்சயம் கீழே இறங்கவும் மேலே ஏறவும் செய்யும். நீங்கள் உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்வதுடன் இழக்கத் தயாராக இருக்கும் தொகைக்குமேல் ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள்.

அதற்கு வாய்ப்புள்ளது. இதில் கவனிக்க வேண்டிய ஒருவிஷயம், இது புதிய உச்சத்தை மிகச் சமீபத்தில் எட்டியது, தொடர்ந்து முன்னேறி செல்லுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். எதுவாயினும் முதலீடு செய்யும்முன் உங்கள் சொந்த ஆராய்ச்சியை நீங்கள் செய்ய வேண்டும்.

நீங்கள் ஒரு கேம் விளையாடுபவர் என்றால், உங்கள் சொந்த NFTகளை உருவாக்குவது, விற்பது போன்ற யோசனை உங்களுக்குப் பிடிக்கும் என்றால் நிச்சயம் சாண்ட்பாக்ஸ் ஈர்க்கக்கூடியதாகத்தான் உள்ளது. இருந்தாலும், உங்கள் முதலீட்டில் கிடைக்கும் ஆதாயத்தை வைத்து லம்போர்கினி காரை வாங்க பெரும்பாலும் வாய்ப்பில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com Bel LLC அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image