ஷிபா இனு நாணயத்தின் விலைக் கணிப்பு: இதனால் உண்மையாகவே DOGE-ஐ அழிக்க முடியுமா?

By Currency.com Research Team

கடந்த ஆண்டு ஷிபா இனு புதிய உச்சத்தை எட்டியதால், 2022 ஆம் ஆண்டு மீம் நாணயத்திற்கு என்ன காத்திருக்கிறது?

உள்ளடக்கம்

சந்தையின் மிகவும் பிரபலமான மாற்று மீம் நாணயங்களில் ஒன்று, ஷிபா இனு (SHIB). ஆனால் சமீபத்தில் இந்த நாணயத்தில் என்ன நடந்துள்ளது, மிக முக்கியமாக, என்ன நடக்கும்? ஷிபா இனு நாணயத்தின் விலையைக் கணிக்க முடியுமா? SHIB-ன் எதிர்காலம், ஷிபா இனு நாணயத்தின் விலை பற்றி என்ன சொல்லப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

ஷிபா இனு பற்றிய சிறு அறிமுகம்

ஷிபா இனு 2020ல் ரியோஷி என்று அழைக்கப்படும் ஒரு மர்மமான நிறுவனரால் உருவாக்கப்பட்டது. முதல் பார்வையில், ஷிபா இனு ஒரு நாயைச் சின்னமாகக் கொண்ட ஒரு கிரிப்டோகரன்சியை நீங்கள் பார்க்கலாம். இது DOGE-ஐ சூறையாடக்கூடியதாக நீங்கள் நினைக்கலாம் - ஆனால் அதற்கு மேலும் ஏதாவது இருக்கிறதா?

கோட்பாட்டளவில், SHIB-ன் பின்னணியில் உள்ள யோசனையானது, 100% மையமில்லாத. அதன் சமூகத்தால் இயக்கப்படும் ஒரு கிரிப்டோகரன்சியை உருவாக்குவதாகும். பிட்காயினை அடிப்படையாகக் கொண்ட DOGE போலல்லாமல், SHIB ஆனது எதேரியம் பிளாக்செயினை அடிப்படையாகக் கொண்டது.

SHIB மற்றும் DOGE இடையே உள்ள வேறுபாடுகள்
SHIB மற்றும் DOGE இடையே உள்ள வேறுபாடுகள் - புகழ்: Currency.com

CoinMarketCap கூற்றுப்படி, 2022 பிப்ரவரி 1ல், 549 டிரில்லியன் SHIB நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன - சுவாரஸ்யமாக இருந்தாலும், CoinMarketCap மற்றும் CoinGecko இடையே உண்மையான தொகை குறித்து விவாதம் நடந்து வருகிறது. எவ்வாறாயினும், அதிகபட்ச வழங்கல் - அதாவது உருவாக்கப்படக்கூடியது - ஒரு குவாட்ரில்லியன் அல்லது ஒரு மில்லியன் பில்லியன். இதன் பொருள் SHIB நாணயத்தின் விலை எப்போதும் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கும்.

இது ஏறவே ஏறாது என்பதற்காக இதைச் சொல்லவில்லை. ஆனால் அளவுக்கதிகமான வழங்கல் நாணய விலையில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நிச்சயமாக, சில கடுமையான நிதி இடையூறுகளை ஏற்படுத்தாமல் கம்பீரமான $1 மதிப்பை எட்டாது. ஆனால் நாணயத்தின் குறைந்த விலை காரணமாக, அகலக்கால் வைக்க விரும்பாமல் இருக்கும் மக்கள் இருக்கும்வரை வளர்ச்சிக்கு வாய்ப்புள்ளது.

ஷிபா இனு வெள்ளையறிக்கையில் (அல்லது "வூஃப் பேப்பர்") ரியோஷி எழுதியது போல்: "நாங்கள் 'டோஜ்காயின் கில்லர்' என்ற புனைப்பெயரைப் பெற்றுள்ளோம். ஏனெனில் டோஜ்காயினின் மதிப்பை அதிவேகமாக, $0.01 மதிப்பைக் கடக்காமல் விஞ்சும் திறன் எங்களிடம் உள்ளது."

SHIB நாணயங்களின் எண்ணிக்கையில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், மொத்த விநியோகத்தில் பாதி எதேரியம் நிறுவனர் விட்டலிக் புட்டெரினுக்கு வழங்கப்பட்டது. அவர் மே 2021ல் அதில் 90%ஐ எரித்தார், அதாவது முகவரி/கணக்குக்கு அனுப்பினார்- இது 410.24 டிரில்லியன் டோக்கன்களுக்குச் சமமான $6.7 பில்லியன் மதிப்பைக் கொண்டது. அப்போது பேசிய அவர், “அப்படிப்பட்ட அதிகாரத்தின் இருப்பிடமாக நான் இருக்க விரும்பவில்லை” என்றார்.

மேலும், கடந்த மே மாதம், 1.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள 50 டிரில்லியன் நாணயங்களை கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக புட்டரின், இந்திய கோவிட் கிரிப்டோ நிவாரண நிதிக்கு வழங்கினார். "மீம் குமிழியை உண்மையில் மக்களுக்கு நல்லது செய்யக்கூடியதாக மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பு" என்று கோடீஸ்வரர் விவரித்தார்.

ஷிபாஸ்வாப்: மிகப்பெரிய எதிர்பார்ப்புகள்?

6 ஜூலை 2021 அன்று, SHIBன் அடுத்த கட்ட நடவடிக்கை அதன் சொந்தச் சந்தை - ஷிபாஸ்வாப் – நிறுவுவது. இதுவும் எதேரியம் பிளாக்செயினில் இயங்குகிறது. இது மக்கள் தங்கள் SHIBஐ மற்ற கிரிப்டோகரன்சிகளுக்கு ஒரு மையமில்லா சந்தையில் பரிமாற அனுமதிக்கிறது. பயனர்கள் ஷிபாவின் மற்ற கிரிப்டோக்கள், LEASH (டோஜ் கில்லர்) மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட BONE ஆகியவற்றைப் பெறலாம்.

ஷிபா இனு விலைக் கணிப்பைக் கருத்தில் கொள்ளும்போது கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், நாணயம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான டோக்கன் வைத்திருப்பவர்களின் அர்ப்பணிப்புள்ள இணையவழி இரசிகர்களைக் கொண்டுள்ளது. 2.7 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டர் பின்தொடர்பவர்கள், 463,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட subReddit ஆகியவற்றைக் கொண்டிருப்பது ஆகியவற்றுடன் குறைந்த ஷிபா இனு நாணயத்தின் விலை, அதன் வரையறுக்கப்பட்ட பயன்பாட்டை வைத்து பார்க்கும்போது மிகவும் நன்றாக உள்ளது.

இந்தத் தளங்கள் கிரிப்டோகரன்சி பயன்பாடு, போக்குகள் பற்றிய நியாயமான விவாதங்களுக்குச் செல்ல சரியான இடம் இல்லை என்று சொல்வது பாதுகாப்பானது என்றாலும், SHIB-ல் ஆர்வமுள்ளவர்களுக்கு நேர்மறையான, உற்சாகமான, வரவேற்கும் இடங்களை வழங்கியதற்கு நீங்கள் அவர்களுக்கு பாராட்டை கொடுக்க வேண்டும்.

இணையவழியில் ஷிபா இனு நாணய சுவிசேஷகர்கள் நியாயமான எண்ணிக்கையை விட நிச்சயமாக அதிகமாக உள்ளனர், எனவே இந்த மீம் நாணயம் எங்கும் போய்விடாது என்று நினைப்பது ஏற்கக்கூடியது. 2022ல் ஷிபா இனு நாணயத்தின் விலைக் கணிப்பு எப்படி இருக்கும்?

SHIB விலை வரலாற்றின் சாராம்சம்

SHIB விலை வரலாற்றைப் பார்ப்போம். மேலும் அது ஷிபா இனு நாணயத்தின் விலையைக் கணிக்க உதவுமா என்பதையும் பார்ப்போம்.

ஆகஸ்ட் 2020ல் தொடங்கப்பட்டபோது, SHIB-ன் மதிப்பு $0.0000000001 என்ற அளவில் இருந்தது. தொடர்ந்து ஒன்பது மாதங்களுக்கு அதே அளவில் நீடித்தது. ஆனால் பின்னர் ஏதோ நடந்தது.

மே 2021 தொடக்கத்தில் DOGE மிக அதிகமான ஏற்றத்தில் சென்றபோது, மக்கள் அடுத்த டோஜ்காயினைத் தேடத் தொடங்கினர். அவர்களில் பலர் SHIB-ஐ தேர்வு செய்தனர். இதன் பொருள், மே 8 அன்று, சனிக்கிழமை இரவு நேரலையில் எலோன் மஸ்க் தோன்றிய நாளில், விலை வெடித்தது. $0.000005246 என்பதிலிருந்து $0.00001883 விலைக்குச் சென்றது - ஏறக்குறைய 260% உயர்வு.

What is your sentiment on SHIB/USD?

0.00001218
Bullish
or
Bearish
Vote to see community's results!

அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனத்தில் மஸ்க் காட்சியளித்தது உண்மையில் DOGE-ன் விலையைத் தாக்கியது. SHIB தொடர்ந்து விரிவடைந்தது - மே 10 அன்று $0.0000388 என்ற இதுவரை காணாத உயரத்திற்குச் சென்றது.

இருப்பினும், கிரிப்டோ சந்தை மே 19 அன்று பெரிய சரிவைக் கண்டது. SHIB-ம் அதில் பாதிக்கப்பட்டது. மே 21 அன்று $0.00000622 ஆகக் குறைந்தது. மேலும் மே 24 அன்று $0.00001159 வரை மீண்டு வந்தது. அதன்பிறகு அந்த உயர்விற்கு அருகில் திரும்ப வரவில்லை.

ஜூன் 17 அன்று பல ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் CoinBase சந்தையில் SHIB- ஐ பட்டியலிடுவதாக வந்த பெரிய அறிவிப்பு, ஷிபா இனு நாணயத்தின் விலையை ஒரு மணி நேரத்தில் $0.00000728-லிருந்து $0.000009331-க்கு உயர்த்தியது. இது 28% அதிகரிப்பு. ஆனால் இந்த திடீர் ஏற்றத்தைத் தொடர்ந்து மீண்டும் விலை குறைந்தது.

ஆகஸ்ட் 7 அன்று, ஷிபா இனு உருவாக்குநர்கள் சமூகத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து SHIB-ன் விநியோகத்தைக் குறைக்க "எரிக்கும் (கணக்குகளுக்கு அனுப்புதல்) செயல்முறையை" அறிமுகப்படுத்தியதாக ட்வீட் செய்தனர். நாணயங்களை எரிப்பதால் அவை புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டு அழிக்கப்படுகிறது. இதனால் பணவீக்க விகிதம் குறைகிறது. SHIB உருவாக்குநர்கள் ஷிபாஸ்வாப்பில் இரண்டு புதிய வர்த்தகத் தொகுதிகளைச் சேர்த்தனர் - பெர்லின் மற்றும் ரியோஷி - மேலும் SHIB, LEASH நாணயங்களில் $25,000ஐ எரித்தனர்.

பின்னர் எதிர்பாராத விதமாக, ஆகஸ்ட் 10 ஆம் தேதி, பாலி நெட்வொர்க்கில் "Mr White Hat" என்று அழைக்கப்படும் ஒரு ஹேக்கரால் DeFi திருட்டு நடந்தது. இதில் பறிபோன $600 மில்லியன் மதிப்புள்ள  கிரிப்டோகரன்ஸிகளில் $2 மில்லியன் மதிப்புள்ள 259 பில்லியன் SHIB நாணயங்களும் அடங்கும். புழக்கத்தில் உள்ள SHIB-ன் பரந்த அளவு, நாணய விலையில் செலுத்திய தாக்கத்தை இந்த ஊடுருவல் மட்டுப்படுத்தியது. SHIB விலை ஆகஸ்ட் 10 அன்று $0.00000732க்கும் $0.0000079க்கும் இடையில் சென்றது. அதற்கு முந்தைய நாள் $0.0000071-$0.00000788க்கு இடையில் இருந்தது.

அடுத்ததாக செப்டம்பர் 2021ல் கிரிப்டோ சரிவு ஏற்பட்டது. இது கிரிப்டோ சந்தையில் பல பில்லியன்களை அழித்தது. ஷிபா இனு நாணயத்தின் விலை செப்டம்பர் 8 அன்று $0.000005782 ஆகக் குறைந்தது. செப்டம்பர் 17ல், இது $0.000009138 ஆக உயர்ந்தது. ஆனால் சில வாரங்களுக்குப் பிறகு, அக்டோபர் 1 அன்று $0.000007388 ஆக இருந்தது.

எலோன் மஸ்கிடமிருந்து மற்றொரு ட்வீட் வந்தது. அவருடைய ஷிபா இனு நாயானது SHIB 600% விலையேறுவதற்கு உதவியது. SHIB ஆனது அக்டோபர் 28ல் $0.00008845 என்ற புதிய உச்சத்தை எட்டியது. அதேநேரத்தில் ஒரு அநாமதேய கிரிப்டோ திமிங்கலம் 276.6 பில்லியன் மதிப்புள்ள SHIB டோக்கன்களை வாங்கியதாக WhaleStats தெரிவிக்கிறது. அந்தத் திமிங்கலம் இப்போதும் 316.5 பில்லியன் ஷிபா இனு நாணயங்களை வைத்துள்ளது.

SHIB தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தியது. 2021 ஆம் ஆண்டில் மூன்றாவது அதிகமாக கூகிள் செய்யப்பட்ட கிரிப்டோ ஆனது. இருப்பினும், தொடர்ந்து மூன்று வாரங்கள் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. மஸ்க் இட்ட மற்றொரு ட்வீட்டில் அவர் உண்மையில் எந்த SHIB ஐயும் கொண்டிருக்கவில்லை என்பதை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, டோக்கன் 11வது பெரிய கிரிப்டோகரன்சி என்ற நிலையிலிருந்து நழுவியது. CoinMarketCap கூற்றுப்படி, $28 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்திலிருந்து, $21.1 பில்லியனாகக்குறைந்து 12வது இடத்திற்குச் சென்றது.

2022 ஜனவரி 24 அன்று, ’Shiberse’ என்று அழைக்கப்படும் 'நமது சுற்றுச்சூழலுக்கு ஏற்ற சிறந்த அனுபவத்துடன்' மெட்டாவர்ஸில் நுழைவதாக SHIB ட்வீட் செய்தது. இந்த இடத்தைப் பாருங்கள்...

2022 பிப்ரவரி 1ல், SHIB தோராயமாக $0.00002171ல் வர்த்தகம் ஆனது. CoinMarketCap கூற்றுப்படி, $11.9 பில்லியன் சந்தை மூலதனத்துடன் 15வது பெரிய கிரிப்டோவாக உள்ளது. எதிர்காலம் எப்படி இருக்கும்? 2022 ஆம் ஆண்டிற்கான ஷிபா நாணயத்தின் விலையைக் கணிக்கும்போது வேறு என்ன கருத்தில் கொள்ள வேண்டும்?

எதிர்காலம்

ஷிபா இனு நாணயத்தின் எதிர்காலத்தைப் பார்க்கும்போது, 2022ல் ஷிபா இனு நாணயத்தின் விலைக் கணிப்பு வருட இறுதிக்குள் $0.0000552 ஆக இருக்கும் என்று WalletInvestors பரிந்துரைக்கிறது. பிப்ரவரி 2023க்குள் இது $0.0000589ஐ எட்டும் என்று எதிர்பார்க்கிறது. மேலும் 2025ல் அந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் ஷிபா இனு $0.000170 ஆக இருக்கும் என்று பரிந்துரைக்கிறது.

இதற்கிடையில், Gov.capital பிப்ரவரி 2023ல் ஷிபா இனு $0.000113 ஐ எட்டக்கூடும் என்றும், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் $0.000239ஐச் சுற்றி இருக்கும் என்றும் கூறுகிறது. இது பிப்ரவரி 2025ல் $0.000455 ஆகவும், 2026ல் அதே மாதத்தில் $0.0007010 ஆகவும் இருக்கும் என்று அறிவுறுத்துகிறது.

இறுதியாக, DigitalCoin இந்த ஆண்டின் இறுதிக்குள் $0.00003008885 ஐ எட்டலாம் என்றும் பிப்ரவரி 2023ல் $0.00003433809 ஐப் பெறலாம் என்றும் கூறுகிறது. மேலும் பிப்ரவரி 2025ல் $0.00004912216 விலையையும், பிப்ரவரி 2026ல் $0.00004438969 விலையையும், பிப்ரவரி 2028ல் $0.00007060265 விலையையும் கணிக்கிறது. 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஷிபா இனு நாணயம் நல்ல முதலீடுதானா?

இருக்கலாம். அதன் சமீபத்திய புதிய வெற்றி, சிலர் நினைப்பது போல் இது ஒரு நகைச்சுவை நாணயம் அல்ல என்பதை நிரூபித்திருக்கும். மறுபுறம், அப்படி இல்லாமலும் இருக்கலாம். உண்மையில், அது ஒருபோதும் நல்ல முதலீடாக ஆகாமலும் போகலாம்.

நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், கிரிப்டோகரன்சிகள், குறிப்பாக மீம் காயின்கள், மிகவும் நிலையற்றவை - விலைகள் கூடலாம், குறையலாம். உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்யுங்கள். வர்த்தகம் செய்வதற்கான உங்கள் முடிவு, அபாயத்துக்கான உங்கள் அணுகுமுறை, இந்தச் சந்தையில் உங்கள் நிபுணத்துவம், உங்கள் தொகுமுதலீட்டின் பரவல், பணத்தை இழப்பது குறித்த உங்கள் மனநிலை ஆகியவற்றைப் பொறுத்தது என்று எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எப்போதும் நீங்கள் இழப்பைத் தாங்கக்கூடிய அளவிற்கு அதிகமாக முதலீடு செய்யாதீர்கள்.

ஷிபா இனு நாணயம் $1 ஐ அடைய முடியுமா?

அடையக்கூடும். ஆனால் அதன் விலை எவ்வளவு குறைவாக இருக்கிறது என்பதைப் பார்க்கும்போது தற்போதைக்கு இதைப் பார்க்க முடியாமல் போகலாம். முதலில், அப்படி நடப்பதற்கு ஏகப்பட்ட பணம் உலகத்தின் வழங்கலுக்குள் வரவேண்டும். அதாவது இதுவொரு கடுமையான பணவீக்கத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.

இரண்டாவதாக, அது உண்மையில் அந்த உயரங்களை அடைய வடிவமைக்கப்படவில்லை. அதன் குறைந்த மதிப்பு என்பது ஒரு சென்ட் தடையைக்கூட உடைக்காமல் போட்டியாளர்களை விடச் சிறப்பாகச் செயல்படும் என்று அர்த்தம். அது நாணயத்தின் மீதான விமர்சனம் அல்ல; அது அப்படித்தான் இயங்குகிறது.

ஷிபா இனு நாணயத்தை எப்படி வாங்குவது

SHIB நாணயத்தை வழங்கக்கூடிய சந்தைகளில் Currency.com, Kucoin, CoinBene, Capital.com, Probit Global, CoinDCX, WazirX, Binance, Crypto.com, Huobi OKEx, Coinbase, ShibaSwap ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image