SOL நாணய விலைக் கணிப்பு: ஏன் இந்தத் திடீர் விலையேற்றம்? அடுத்து என்ன?
SOL புதிய உச்சத்தை நவம்பரில் அடைந்தது. இப்போது SOL விலைக் கணிப்பு என்னவாக உள்ளது?

உள்ளடக்கம்
- கிரிப்டோ சரிவுகள்
- ஒரு புதிய வழி?
- இக்னிஷன் சூடு பிடிக்கிறது
- மீட்சிக்கான பாதை
- கீர்த்திக்கான பாதை
- சொலானா (SOL) விலைக் கணிப்பு
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
சொலானா பிளாக்செயினின் சொந்த நாணயமான SOL கடந்த சில மாதங்களாக திடீர் விலையேற்றத்தைச் சந்தித்துள்ளது. மே மாதம் கிரிப்டோகரன்சி சந்தை வீழ்ச்சியடைந்தபோது இருந்த நிலையைக் காட்டிலும் இப்போது உயர்ந்த நிலையில் வர்த்தகமாகிறது. விலை எழுச்சிக்கு என்ன காரணம், SOL விலைக் கணிப்பு என்னவாக இருக்கலாம் என்பதை பார்ப்போம்.

கிரிப்டோ சரிவுகள்
2021 மே, செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் கிரிப்டோகரன்சி சந்தை வீழ்ச்சிகளைக் கண்டுள்ளது. ஸ்டேபிள்காயினாக இல்லாத கிட்டத்தட்ட எல்லா கிரிப்டோவும் பெரிய அடியை வாங்கியுள்ளது. சந்தைகள் பொதுவாக தன்னைத்தானே நேர்ப்படுத்திக் கொள்ளும் மற்றும் கால ஓட்டத்தில் விலைகள் மெதுவாக மேல்நோக்கி நகரும். இது SOLக்கும் பொருந்தும்.
இந்த விஷயத்தில் சொலானா மிகையான ஒன்று. நவம்பர் 6ம் தேதி புதிய உச்சமாக $258.93ஐத் தொட்டது. ஆனால் ஒட்டுமொத்தமாக கிரிப்டோகரன்சி சந்தை மீது கூடுதல் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என்ற உண்மையும் விலை ஏற்றத்தைத் தொடங்கிவைக்க உதவியிருக்கலாம். அப்படியெனில், எப்போது எப்படி இது முடிவடையும் என்பது இந்தநிலையில் நமக்குத் தெரியாது. ஆனால் மேலும் கூடுதலான பேர் கிரிப்டோவில் முதலீடு செய்யவும், மறுமுதலீடு செய்யவும் தொடங்கியிருப்பதால், சில நாணயங்களும் டோக்கன்களும் அதற்கான உந்துதலைக் கண்டடைந்து மேற்கொண்டு நகர்வதற்கே மேலும் வாய்ப்பிருப்பதாகத் தோன்றுகிறது. இந்தச் சூழலில், சொலானா ஒரு முதன்மையான பயனாளியாக உள்ளது. ஆனால் இதுவே வேறொரு கிரிப்டோவுக்கு வேறொரு சமயத்தில் நிகழக்கூடும்.
ஒரு புதிய வழி?
சொலானாவின் இயற்பண்பும் முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடியதாக உள்ளது. எதேரியம் செய்துவரும் அதே பல விசயங்களைத்தான் இது செய்கிறது எனினும், இதை வேறொரு வழியில் செய்கிறது. உதாரணமாக, எதேரியம் பிளாக்செயின் பங்குச்சான்று (PoS) முறையில் இயங்குகிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால், இதன் அர்த்தம் நீங்கள் ETHஐ மைன் விரும்பினால், நீங்கள் எத்தனை ஈதரை மைனிங் செய்யலாம் என்பது எத்தனை ETH நாணயங்களை நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. ஒரு சிறப்பு வாலெட்டில் குறிப்பிட்ட அளவு ஈதரை நீங்கள் பூட்டி வைத்திருந்தால், அது உங்களுக்கு மைனிங் ஆற்றலை வழங்குகிறது. ஸ்டேக்கிங் செய்வதும் பிளாக்செயினில் பரிவர்த்தனைகளைச் சோதிக்கவும் செயல்படுத்தவும் உதவும். சொலானா வித்தியாசமானது. ஏனெனில், இது வரலாற்றுச் சான்று (PoH) என்றழைக்கப்படும் முறையைப் பயன்படுத்துகிறது. இதன் உட்கருத்து என்னவென்றால் ஒருவர் எத்தனை வைத்திருந்தார், அதை எப்போது வைத்திருந்தார் என்று காட்டக்கூடிய நேர முத்திரைகளை உருவாக்குவதாகும். தரவுகள் துல்லியமாகக் காட்டப்படுவதையும் நியாயமான முறையில் மக்களால் நாணயங்களையும் கணினி அமைப்புகளையும் அணுகுவதை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கம்.
PoHம் PoS உருவாக்கப்பட்ட அதே அடிப்படையைக் கொண்டதுதான். இதனால் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் இலகுவாக இயங்கக்கூடியது. இதன் அர்த்தம் என்னவென்றால், எதேரியத்தைப் போல, சொலானா பிளாக்செயின் ஸ்மார்ட் ஒப்பந்தங்கள், மையமில்லா நிதி மற்றும் தனித்துவமான டோக்கன்கள் (NFTs) போன்ற விஷயங்களில் ஈடுபடும்போது, எதேரியத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டக்கூடிய ஒன்று இதில் உள்ளது. உண்மையில் எதேரியத்தை விட சொலானா மிக வேகமாக இயங்கும் தன்மையுடையது என்று சொலானா சொல்கிறது. எதுவாயினும், இதன் அர்த்தம் ஆல்ட்காயின் உலகில் ஈதருக்கு சவால்விடக்கூடியது எதுவாயிருக்கும் என்று தேடும் முதலீட்டாளர்களுக்கு இது ஓர் ஆர்வமூட்டும் கிரிப்டோ.
இக்னிஷன் சூடு பிடிக்கிறது
SOL விலையேற்றத்துக்குப் பின்னால் உள்ள இன்னொரு உந்துசக்தியாக ஒரு நிகழ்வைக் குறிப்பிடலாம். ஆகஸ்ட் இறுதிவாக்கில், இக்னிஷன் (Ignition) என்றழைக்கப்பட்ட சொலானா நிகழ்வைச் சுற்றி உற்சாகம் குழுமியிருந்தது. மக்களுக்கு அது என்னவாக இருக்குமென்று தெரியாதபோது, குறிப்பிடத்தக்க ஊகங்கள் நிலவின. கிரிப்டோ சமூக ஊடகத்தில் உண்மையான சலசலப்பு நிலவியது. இதன் விளைவாக மேலும் மேலும் ஆட்கள் SOL நாணயத்தில் முதலீடு செய்தனர். இது விலை அதிகரிக்க உதவியது.
சில வட்டங்களில் இக்னிஷனில் சில SOL நாணய எரிப்பும் (மீட்கமுடியாத முகவரி/கணக்குக்கு நாணயம் அனுப்பப்படுவது) இருக்குமென்று ஒரு நம்பிக்கை இருந்தாலும், இத்தகைய நிகழ்வு குறைவான சொலானா நாணயங்களை விளைவிக்கும் காரணத்தால் தாக்குப்பிடித்தவற்றின் மதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த கணிப்பு தவறாகிவிட்டது. மாறாக, இக்னிஷன் என்பது சொலானா அல்லது குறைந்தது பிளாக்செயினுக்குப் பின்னால் எது அனுப்பப்பட்டுவந்ததோ அதைத்தான் குறித்தது. அதன் பெயர் ‘ஹாக்கத்தான்’ (hackathon). இந்த நிகழ்வு ஆகஸ்ட் 31ல் ஏற்படுத்தப்பட்டது. நிரலர்கள் சொலானா பிளாக்செயினில் இயங்கக்கூடிய விஷயங்களுக்கு போட்டிபோட்டுக் கொண்டு யோசனைகளை வழங்கியதைப் பார்க்க முடிந்தது. இதற்குக் காரணம் நிறுவனம் $5 மில்லியன் மதிப்புள்ள பரிசுகளை அறிவித்திருந்தது. போட்டிக்கான வகையினங்களில் Web3, மையமில்லா தானியங்கி அமைப்புகள் (DAOs) போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துபவை, மையமில்லா செயலிகள், பிற உள்கட்டுமானத் திட்டங்கள் ஆகியவை அடங்கும். இந்த நிகழ்வினை வழங்குவதற்கு தொழில்நுட்ப அசுர நிறுவனம் மைக்ரோசாஃப்ட் பொறுப்பேற்றுக் கொண்டது.
வெளிப்படையாகத் தெரிவதுபோல், ஒரு மரபர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் – அதுவும் உலகின் மிகப்பெரிய நிறுவனம் – கிரிப்டோ உலகில் ஈடுபாடு காட்டுவதென்பதும் $120,000 மதிப்புள்ள ரொக்கப் பரிசுகளை வழங்குவதும், குறிப்பாக மைக்ரோசாஃப்டின் ஈடுபாடு நிகழ்வின் சுவாரசியமான பகுதியாக அமைந்திருந்தது. மையமில்லா நிதி (DeFi), கேமிங், NFTs ஆகிய வகையினங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.
DeFi பிரிவை வழங்கியவர்கள் Standard Chartered மற்றும் Jump Capital. Standard Chartered-ன் ஈடுபாடும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் ஒரு பன்னாட்டு வங்கி நிறுவனம் மரபார்ந்த வங்கிக்கு மாற்றாக இருக்கக்கூடிய ஒன்றில் பங்கெடுப்பதாக அது பார்க்கப்பட்டது. இதை பொதுவான இடம் சார்ந்த விஷயம் என்று வைத்துக்கொண்டாலும், Standard Charteredக்குப் பதில் இந்த இடத்தில் இங்கிலாந்து விளையாட்டு நிறுவனமான Liverpool Football Club இருந்திருந்தாலும் அதனால் சொலானா நிகழ்வுக்கு எந்தத் தீங்கும் இருந்திருக்காது. இந்த வகையில் $185,000 பரிசுகள் இருந்தன. இறுதியாக, இரு கேமிங் (வழங்கியோர் Forte) மற்றும் NFT வகையினங்களில் (வழங்கியோர் Metaplex) ஒவ்வொன்றுக்கும் $120,000 பரிசைக் கொண்டிருந்தது.
முழு நிகழ்வும் சொலானாவின் ஒரு சரியான முயற்சி என்று நிரூபித்தது. காரணம் பிளாக்செயினில் அது ஆர்வத்தை விரிவுபடுத்தியதுடன் SOL நாணய விலையேற்றத்துக்கும் உதவியது. ஆனால் எதுவரை இது ஏறியுள்ளது? எப்போது ஏறியது? பார்க்கலாம்.
மீட்சிக்கான பாதை
2021 மே 18ல், புதிய உச்சமாக $58.30 என்னும் அதிக விலையை இன்ட்ராடே வர்த்தகத்தில் எட்டி SOL மிக நல்ல இடத்தில் இருந்தது. 2020 ஏப்ரலில் $0.78ல் இது தொடங்கியதையும் அந்த ஆண்டு ஜூலை வரை $1 தடையை உடைக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்கையில், 2021 துவக்கத்தில் கிரிப்டோ மலர்ச்சியின்போது இந்த வளர்ச்சி ஏற்பட்டதை இந்த விலை காட்டுகிறது.
What is your sentiment on SOL/USD?
மறுநாள் SOLக்கு மட்டுமல்ல பெரும்பாலான பிற கிரிப்டோகரன்சிகளுக்கும் ஒரு மோசமான இடத்தில் போய் நிறுத்தியது. இதன் மதிப்பில் 48%க்கும் மேல் இழந்தது. $35.11 விலையில் முடியுமுன் $29.43 என்ற குறைந்த விலையை இன்ட்ராடே வர்த்தகத்தில் பதிவுசெய்தது. மே 20ல் $51.26 என்ற உச்சத்தைத் தொட்டபோது இந்த இழப்பு ஒரு குறுகியகாலத் தடையாகத் தோன்றியது. ஆனால் எந்த நம்பிக்கையும் குறுகிய காலம் கொண்டதாகவே இருந்தது. விலை திரும்பவும் சுருண்டு விழுந்து மாதமுடிவில் $32.82 ஆனது. நிலவரம் திரும்பவும் மீளத் தொடங்கியது. ஆனால் அந்த மாதத்தில் SOL எட்டிய அதிகபட்ச விலையாக ஜூன் 7ல் இன்ட்ராடே வர்த்தகத்தில் உச்சவிலையாகத் தொட்ட $44.10 தான் இருந்தது. ஜூன் மாதத்தை $35.56 விலையில் முடித்தது. அடுத்த மாதமும் SOL மந்தமாக வர்த்தகமாகி மாதமுடிவில் $36.83ல் முடிந்தது.
கீர்த்திக்கான பாதை
ஆகஸ்ட் இரண்டாம் பாதியில் கதை மேலும் சுவாரசியமடையத் தொடங்கியது. ஆகஸ்ட் 15ல், குறைந்தபட்ச இன்ட்ராடே விலையாக $43.45 இருந்தது. அதைத் தொடர்ந்து அன்றைய அதிகபட்ச இன்ட்ராடே விலையாக 25% மேலேறி $54.63ஐப் பதிவு செய்தது. அன்றைய தினத்தில் $53.75 விலையில் முடிவடைந்தது. மறுநாள் $53.54ல் தொடங்கி 28%க்கும் மேல் ஏறி $68.82ஐத் தொட்டாலும் விலை இறங்கி $62.43க்கு முடிவடைந்தது. ஆகஸ்ட் 17ல் $64.21 விலைக்கு இறங்குமுன்பாக இன்ட்ராடே வர்த்தகத்தில் உச்சவிலையான $74.89ஐத் தொட்டது. ஆகஸ்ட் 27ல் $80 என்ற தடையை உடைத்து குறைந்தவிலை $72.72லிருந்து $88.85 என்ற உச்சத்துக்கு ஏறியது – இது 22%க்கும் அதிகமான வளர்ச்சி. குறிப்பிடத்தக்கபடி, மறுநாள் இது முதன்முறையாக $90 தடையை உடைத்து $85.79லிருந்து $97.84க்கு மேலும் 14% ஏறியது. மறுநாளே SOL $100 என்ற நம்பிக்கையளிக்கப்பட்ட இடத்தைத் தொட்டது. அன்றைய இன்ட்ராடே உச்சமாக $116.85 இருந்தது. மறுநாள் இது $130.01ஐ எட்டினாலும் 16%க்குமேல் கீழிறங்கி ஆகஸ்ட் மாதத்தை $108.48 என்ற விலையில் முடித்தது. ஒரு மாதத்தில் கிரிப்டோகரன்சி கிட்டத்தட்ட மூன்றுமடங்கு தாவியேறியிருந்தது. இதற்கெல்லாம், மேலே குறிப்பிட்டிருந்த காரணிகளுக்கும் ஒரு பங்குண்டு. இது எந்தவொரு SOL கணிப்பும் எதிர்பார்த்திருக்காத ஒரு குறிப்பிடத்தக்க வெடிப்பு
செப்டம்பர் 9ல் SOL $214.96 என்ற ஒரு புதிய உச்சத்தை எட்டியது. பின்னர் அக்டோபர் 25ல் இன்னொரு புதிய உச்சமான $218.73ஐத் தொட்டது. நவம்பர் 6ல் $260.06 என்ற புதிய உயரத்தை எட்டியது.
எனினும், கிரிப்டோகரன்சிகளுக்கு டிசம்பர் மாதம் கடினமான ஒன்றாக இருந்தது. பிட்காயின் 19% இறங்கியிருந்தது. விதிவிலக்கின்றி SOL-ம், டிசம்பர் 23ல் கிட்டத்தட்ட அதன் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கினை இழந்து $178.93க்கு இறங்கியது.
அடுத்ததாக ஜனவரி 10ல் மேலும் கீழிறங்கி $130.80க்கு வந்தது. ஆனால் சமீபத்தில் குறிப்பிடத்தக்க நகர்வைப் பார்க்க முடிகிறது. தற்போது $154.38 விலையில் உள்ளது. டெக்னிகல் இண்டிகேடர்கள், மொமண்டம் ரிவர்சல் இண்டிகேடர் (MRI) போன்றவை அடித்தள சமிக்ஞையை வெளிக்காட்டுவதால், சந்தை ஆர்வலர்கள் மிக வலுவான ஏற்றத்தை பரிந்துரைக்கின்றனர்.
SOL நாணய விலையில் இதுதான் சமீபத்திய வரலாறு. ஆனால் எதிர்காலம் எப்படியிருக்கும்? சொலானா விலைக் கணிப்பைத் தரும் சில நிறுவனங்களின் கணிப்புகளைப் பார்ப்போம்.
சொலானா (SOL) விலைக் கணிப்பு
Wallet Investor SOL விலை ஏறுமென்று கணிக்கிறது. ஒருவருடத்தில் இது $445.61ஐ எட்டுமென்றும் ஐந்து ஆண்டுகளில் $1,656.39ஐத் தொடுமென்றும் கணிக்கிறது.
DigitalCoinPrice-ன் SOL விலைக் கணிப்புப்படி, 2022ல் பிப்ரவரியில் 49.96% விலை அதிகரிக்குமென்றும் அந்த மாதத்தில் சராசரியாக விலை $230.70 இருக்குமென்றும் கணிக்கிறது. இதே தளம் 2023 ஜனவரியில் விலை $216.06ஐத் தொடுமென்றும் ஜனவரி 2024ல் $235.85 ஆக இருக்குமென்றும் சொல்கிறது. ஜனவரி 2025ல் நாணய மதிப்பு $334.94 ஆகவும் ஜனவரி 2026ல் இது $337.98 ஆக இருக்குமென்றும் கணிக்கிறது. 2027 ஜனவரியில் இது $407.59 ஆகவும் டிசம்பர் 2028ல் $583.43 ஆகவும் இருக்கும் என்கிறது.
கடைசியாக, Gov.capital-ன் விலைக் கணிப்பை எடுத்துக் கொண்டால், இப்போதிருந்து ஒரு வருடத்தில் SOL $551.48ஐ எட்டுமென்றும், ஐந்தாண்டுகளில் $4,461.75ஐத் தொடுமென்றும் சொல்கிறது. 2024 ஜனவரியில், நாணயம் $1,186.12ஐத் தொடுமென்றும் 2025 ஜனவரியில் அதன் மதிப்பு $2,046.13க்குச் செல்லுமென்றும் கணிக்கிறது. 2026க்கான இதன் கணிப்பு $3,130.40 ஆக உள்ளது. இதே தளம் 2023 செப்டம்பரில் SOL $1,000 குறியீட்டை உடைக்குமென்று கணிக்கிறது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
SOL விலை $1,000ஐ எட்டுமா?
அதற்கு வாய்ப்புள்ளது. Gov.capital தளம் 2023 செப்டம்பர் மாதத்தில் இது நடக்குமென்று நினைக்கிறது. எனினும், மற்ற விலைக் கணிப்புகள் ஏறுமுகத்தைக் காட்டினாலும் மேலும் எச்சரிக்கையுடன் இருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். கணிப்புகள் மிகப் பெரும்பாலும் தவறானவை என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம். நீங்கள் உங்கள் சொந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் – கிரிப்டோகரன்சிகள் அதிக மாறியல்புடையவை என்பதையும் விலை ஏறவும் இறங்கவும் செய்யுமென்பதையும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் அளவுக்கு அதிகமாக ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள்.
2025ல் SOL விலை என்னவாக இருக்கும்?
அது எந்த விலைக் கணிப்பை நீங்கள் பின் தொடர்கிறீர்கள் என்பதைப் பொறுத்து $346.72க்கும் (DigitalCoinPrice) $3,097.70க்கும் (Gov.capital) இடையில் எதுவாகவும் இருக்கக்கூடும். இவ்வாறு சொன்னாலும், இவற்றைக் காட்டிலும் ரொம்பவே குறைவான விலையை எட்டவும், பல கிரிப்டோக்களின் வழித்தடத்தைத் தொடர்ந்து தொழிலை விட்டே செல்லவும் அல்லது இதைவிட அதிக மதிப்பை எட்டவும் கூடும். உண்மை என்னவென்றால், நமக்கு உண்மையிலேயே தெரியாது என்பதுதான்.