சோம்னியம் ஸ்பேஸ் கியூப்ஸ் விலைக் கணிப்பு: ஒரு மெட்டாவெர்ஸ் முன்னோடி

By Currency.com Research Team

CUBE, சோம்னியம் ஸ்பேஸின் மெட்டாவெர்ஸ் பொருளாதாரத்திற்கு சக்தியளிக்கிறது. ஆனால் அது வலுவானதா?

சோம்னியம் ஸ்பேஸ் கியூப்ஸ் விலைக் கணிப்பு                                 
சோம்னியம் ஸ்பேஸின் படைப்பாளிகள் நிதிக்கு நிதியளிக்கும் முதலீட்டாளர்களில் பாலிகனும் வின்னி லிங்கமும் உண்டு – புகைப்படம்: Shutterstock
                                

உள்ளடக்கம்

மெட்டாவெர்ஸ்களின் பிரபல்யம் மையவோட்டத்தில் ஆரவாரிக்கிறது. இவை பழகுவதற்கான புதிய வழியாக பயனர்களால் பார்க்கப்படுகின்றன; வணிகங்கள் ஒரு புதிய வருவாய் பாய்வோட்டமாகப் பார்க்கின்றன; உருவாக்குபவர்களோ இதை உருவாக்குவதற்கான புதிய முறையாகப் பார்க்கிறார்கள்.

இந்த மெய்நிகர் உலகங்களின் முன்னோடிகளில் சோம்னியம் ஸ்பேஸும் ஒன்று. இது 2018ல் ஆர்தர் சைகோவ் என்ற செக் தொழில்முனைவோரால் தோற்றுவிக்கப்பட்டது. சமூகமானது செயலூக்கமுள்ள பொருளாதாரத்தின் மூலம் பலம் பெற்று அதில் இயங்கக்கூடிய பிரமாண்டமான டிஜிட்டல் உலகை உருவாக்கும் தொலை நோக்குப் பார்வையைக் கொண்டிருந்தார்.

இதை அடைவதற்கான திறவுகோலாக CUBE டோக்கன் உள்ளது. இதை பணமாக்குவதற்கு, உடை, ஓவியம் இன்னபிற பல்வேறு படைப்புகளை அணுக மற்றும்/அல்லது வாங்க இதைப் பயன்படுத்தலாம். மிக வேகமாகப் போட்டி நிறைந்த வெளியாக மாறி வருகின்ற நிலையில் CUBE முதன்மையாக வர முடியுமா?

மெட்டாவெர்ஸின் ’ஆகச்சிறந்த சேருமிடம்’

மெய்நிகர் யதார்த்த (VR) வன்பொருளும் மென்பொருளும் காலவோட்டத்தில் பிரமாண்டமான வளர்ச்சியை எட்டியுள்ளன. சோம்னியம் ஸ்பேஸ் இதில் கடைசிகட்டத் தொடுகையைச் சேர்க்க விரும்புகிறது. அதன் நோக்கம் “ஆகச்சிறந்த சேருமிடத்தை” உருவாக்குவதாகும். இது ஒரு மெய்நிகர் யதார்த்த உலகம். எதிர்காலச் செய்தித்தொடர்பு, பொழுதுபோக்கு, இணைய வர்த்தகத்துக்கு முன்னோடியாக இது இருக்கும்.

சோம்னியம் ஸ்பேஸின் தொலைநோக்குப் பர்வை முகநூல் தனது பெயரை மெட்டா என்று மாற்றிக் கொண்டதற்கும், தற்போதைய மெட்டாவெர்ஸ் வளர்ச்சிக்கும் முன்பாகவே தொடங்கிவிட்டது. இந்த களத்தில் முதலில் இறங்கிய அதன் சாதகமான அம்சம் தெளிவாக தெரிகிறது, ஏனெனில் இது சிறந்த மெட்டாவர்ஸ் தளங்களில் ஒன்றாக மாறியுள்ளது. 

இது பயனர்கள் சந்திக்கவும், பணியாற்றவும், பழகவும் வெற்றிகரமாக ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கியுள்ளது. எல்டன் ஜானின் இசைக் குழு முதல் டிஜிட்டல் ஃபேஷன் நிகழ்ச்சிகள் வரை அனைத்தையும் இந்தச் செயற்தளம் வழங்குகிறது. எனினும் குழுவில் தன்னிறைவடைந்ததற்கான அறிகுறியைக் காணோம். சோம்னியம் ஸ்பேஸின் நீண்டகால இலக்கு, தொடர்ந்து பிரபஞ்சத்தை மேம்படுத்துவதும், தனது சொந்த சமூகத்தாலும் பொருளாதாரத்தாலும் இயங்கக்கூடிய வியப்பிலாழ்த்தும் பயனர் தோற்றுவிக்கும் உலகை உருவாக்குவதுமாகும்.

சோம்னியம் ஸ்பேஸ் கியூபுகள் (CUBE) என்றால் என்ன?

மெட்டாவெர்ஸ் தனது பொருளாதாரம் மூன்று அடித்தளக் கற்களைக் கொண்டதாக விவரிக்கிறது: நிலம், சொத்துக்கள், சந்தையிடம். பயனர்களுக்கு இந்தப் பொருளாதாரத்துக்கான திறவுகோலாக சோம்னியம் ஸ்பேஸ் கியூப் (CUBE) உள்ளது. இதை நிலம், ஃபேஷன், பொருட்கள் மற்றும் பிறவற்றை வாங்குவதற்கு உபயோகிக்கலாம்.

சோம்னியம் ஸ்பேஸ், CUBEஐயும் பிற டோக்கன்களையும் வேடிக்கையான வகையில் ஒப்பிடுகிறது. இவற்றை ரொக்கப் பணம் மூலம் வாங்கி செயல்பாடுகளுக்கு அல்லது சொத்துக்களை வாங்குவதற்கு செலவிடலாம். ஆனால் பௌதீகமான நாணயங்கள் அல்லது நுழைவுச்சீட்டுகளுக்குப் பதிலாக இந்த டோக்கன்கள் மெய்நிகரானவையாக, எதேரியம் பிளாக்செயினில் இருக்கும்.

இதன் சமூகத்துக்கு உரிமையளிப்பதற்கு இந்த டோக்கன்கள் அவசியம். படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அல்லது நிகழ்வுகளைப் பணமாக்கலாம்; நிலச்சுவான்தார்கள் தங்கள் மெய்நிகர் வீட்டு மனைகளை வாடகைக்கு விட்டு இலாபமீட்டலாம். CUBE ஓர் இலாபமீட்டக்கூடிய நிதி முறையாவணமாக வடிவமைக்கப்படவில்லை என்று சோம்னியம் ஸ்பேஸ் குறிப்பிட்டுள்ளது. இதற்கு மாறாக, செயலூக்கமுள்ள பொருளாதாரத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இது உருவாக்கப்பட்டது. ஆனால் எந்தப் பொருளாதாரத்திலும் இருப்பதுபோல, பிரதான கரன்சியின் வெற்றி மிக முக்கியமானது.

இதை மனதில் கொண்டு, CUBE-ன் வரலாற்றைப் பார்த்தால் இதன் அதிரவைக்கும் பயணத்தின் காரணமாக இது ஒரு நடைபாதை போலல்லாமல் ரோலர்கோஸ்டரை ஒத்திருக்கிறது. 

சோம்னியம் ஸ்பேஸ் கியூப்ஸ்: விலை வரலாறு

சோம்னியம் ஸ்பேஸ் 2018ல் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் அதன் டோக்கன் சமீபத்தில்தான் வெற்றியைக் கண்டுள்ளது. 2020 ஆண்டு முழுவதிலும் CUBE $1க்குக் கீழேயே இருந்தது. அதிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டது.

2021 மார்ச்சில் இதன் பேரணி தொடங்கியது. அம்மாதத்தின் முதலிரு வாரங்களில் இது $1க்கும் மேலேறி $2க்கு அருகில் வந்தது. மார்ச் 15ல் NFT விற்பனை அதிகரிப்பு காரணமாக CUBE $1.91க்கு எழுந்தது என்று NonFungible தெரிவிக்கிறது. சோம்னியம் ஸ்பேஸில் NFTயின் இதுவரையில்லாத அதிகபட்ச விற்பனை மார்ச் 12ல் $4.4 மில்லியனில் இருந்து மார்ச் 24ல் $7.2 மில்லியனாக உயர்ந்தது.

2021 வசந்தகாலத்தில், மெய்நிகர் நிலத்துக்கு சிறப்பான தருணமாக அமைந்தது. புளூம்பெர்க் கூட அதைப்பற்றி செய்தியறிக்கை வெளியிட்டது. அதன் தரவுகளில் சோம்னியம் ஸ்பேஸின் புள்ளியியல் பயன்படுத்தப்பட்டது. ஏப்ரலில் CUBE தொடர்ந்து அதிகரித்து ஏப்ரல் 6ல் $3.22 என்ற உச்சத்தைத் தொட்டது.

இன்னொரு ஸோம்னியம் ஸ்பேஸ் கியூபின் தடை மீறிய விலையேற்றம் நிகழ அதிககாலம் எடுக்கவில்லை. CUBE ஜெமினி சந்தையை உருவாக்கிய ஏப்ரல் 30 அன்று $4.83ஐத் தொட்டு சாதனை படைத்தது. மே 1ல் நிறுவனம் ஒரு புதையல் வேட்டையை அறிவித்தது. இதில் $10,000 மதிப்புள்ள CUBE கைப்பற்றப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மே மாதத்தின் பெரும்பகுதியில் $4க்கு மேலேயே விலை இருந்தது. ஆனால் படிப்படியாக விழத் தொடங்கியது. மாத இறுதியில் $2க்கு அருகில் வரை சரிந்தது. அதைத் தொடர்ந்த மாதங்களில் இந்த விலையில் தன்னைத் தக்கவைத்துக் கொண்டது.

CUBE-ன் விலை அக்டோபரில் திரும்பவும் குமிழிடத் தொடங்கியது. முதலில் இந்தத் திடீர் எழுச்சி அக்டோபர் 26ல் புதிய முதலீடுகள், புதுப்பித்தல்கள், தயாரிப்புகள் அறிவிக்கப்பட்டபோது நடந்தது. இதில் Teslasuit உடனான (VR பயன்பாடுகளுடன் உபயோகிப்பதற்கு முழு உடல் தொடுவுணர்ச்சியுள்ள உடை தயாரிக்கும் நிறுவனம்) கூட்டாண்மையும் சோலனாவுடன் இணைதலும் அடங்கும்.

ஏதோ பெரிதாக நடந்துகொண்டிருந்தது என்றாலும், அது பரந்துபட்ட மெட்டாவெர்ஸ் நிலப்பரப்பைப் பாதித்தது: அந்த வாரத்தில் முகநூல் தனது பெயரை மெட்டா என்று மாற்றியது; இதனால் மெட்டாவெர்ஸ் டோக்கன்களின் விலை ராக்கெட் வேகத்தில் பறந்தது. சிலநாட்களுக்குப் பின் CUBE அதுவரை இல்லாத உச்சவிலையாக $28.12க்கு வந்தது. அதேநாளில், CUBE, SAND, MANA ஆகியவற்றின் ஒட்டுமொத்த சந்தை மூலதன மதிப்பு $35 பில்லியனுக்கும் மேல் இருந்தது என்று சமீபத்தில் வந்த JP Morgan மெட்டாவெர்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

மெட்டாவெர்ஸ் உற்சாகத்தின் ஆரம்பகட்ட முதல் அலைக்குப் பின், CUBE தனது விலையை சற்று நேர்படுத்திக் கொண்டது. அதைத் தவிர்த்து நவம்பரில் இரண்டு திடீர் விலையேற்றங்களுடன் விலை $10க்கும் $20க்கும் இடையில் இருந்தது.  

இருப்பினும் சோம்னியம் ஸ்பேஸ் விலையிறக்கப் போக்கினில் மாட்டிக்கொண்டதாகத் தோன்றியது. தொடர்ந்த மாதத்தில் படிப்படியாகச் சரிந்தது. டிசம்பர் 12ல் FTX சந்தையில் இது பட்டியலிடப்பட்டபோது சற்று விலையேற்றம் கண்டது. ஆனால் மாத இறுதியில் $10 அடையாளத்துக்குக் கீழே விழுந்தது.

சமீபத்தில் பிப்ரவரி துவக்கத்தில் விலையேற்றம் கண்டு $8.72வைத் தொட்டது. இது படைப்பாளிகள் நிதி அறிவிப்புக்குப் பின் வந்தது. படைப்பாளிகளுக்கு $1 மில்லியன் மதிப்புள்ள CUBEகள் பட்ஜெட்டிலிருந்து ஒரு முதலீட்டை ஈட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த முதலீட்டாளர்களில் பாலிகன் பிளாக்செயின் தொழில்முனைவோர் வின்னி லிங்கமும் அடங்குவார்.

CUBE விலை $6 அடையாளத்துக்குக் கீழே விழுந்துள்ள நிலையில் இந்த மெட்டாவெர்ஸ் டோக்கனுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்குமா?

CUBE விலைக் கணிப்பு

CUBE விலைக்கணிப்பில் ஏகோபித்த கருத்தாக உள்ள ஒன்று என்னவென்றால், இந்த டோக்கன் நிலைத்திருந்து கூடியவிரைவில் எழுவதை எதிர்பார்க்கலாம் என்பதுதான்.

TechNewsLeader வழங்கும் 2022க்கான சோம்னியம் ஸ்பேஸ் கியூப்ஸின் விலைக்கணிப்புப்படி இது ஒரு வருடத்தில் $12.98ஐத் தொடும்; 2027ல் $53.53க்கும் 2031ல் $255.41க்கும் அதிகரிக்கும் என்கிறது.

இதே போன்ற விலைக் கணிப்பையே PricePrediction.net வழங்குகிறது. இதன் உத்தேசங்கள் மிகவும் ஏறுமுகமாக உள்ளன. 2022ல் டோக்கன் $9க்கு ஏறுமென்றும் 2025ல் $29ஐத் தொடுமென்றும் இது எண்ணுகிறது. இதன் 2030க்கான விலைக்கணிப்பு $190 ஆக உள்ளது. அதற்கு அடுத்த ஆண்டில் விலை $281ஐத் தொடுமென எதிர்பார்க்கிறது.

நீண்டகால முதலீட்டுக்கு CUBE ஒரு “அட்டகாசமான” தேர்வு என்று WalletInvestor சொல்கிறது. அடுத்த ஆண்டு முழுவதும் தொடர்ச்சியான ஏற்றம் இருக்குமென்றும் விலை $20.60ஐத் தொடுமென்றும் கணிக்கிறது. 2025ல் $50 அடையாளத்தை இந்த டோக்கன் தாண்டுமென்று WalletInvestor நம்புகிறது.

CUBE மீது சற்று கூடுதலான நேர்மறை விலைக் கணிப்பை Gov.capital தருகிறது. 2022ல் இந்த மெட்டாவெர்ஸ் டோக்கன் $20க்கு மேலே செல்லுமென்றும், 2025 இறுதிக்குள் $60 விலையைத் தொடுமென்றும் இது எதிர்பார்க்கிறது.

இதற்கிடையில், இந்த பத்தாண்டு இறுதிக்குள் $50ஐத் தாண்ட வாய்ப்பில்லையென்று DigitalCoinPrice கணிக்கிறது. மாறாக 2022ல் இது $8.42வையும் 2025ல் $13.63ஐயும் தொடுமென்று சொல்கிறது. 2031க்கான இதன் விலைக் கணிப்பு $35.14 ஆக உள்ளது.

சோம்னியம் ஸ்பேஸின் எதிர்காலம்

CUBE தற்போது இறங்குமுகமாக இருந்தாலும் இது நிலைத்திருப்பதற்கான பல அறிகுறிகள் தென்படுகின்றன.

முதலில் MANA, SAND போன்ற பிற மெட்டாவெர்ஸ் டோக்கன்களும் மெட்டாவெர்ஸ் உற்சாகத்தின் முதல் அலையின்போது பெற்ற தங்களது உச்சங்களில் இருந்து இறங்கி வந்துள்ளன. எனவே CUBEல் நாம் காணும் சரிவு விரிவான துறைசார் போக்கின் ஒரு பகுதிதான்.

இரண்டாவதாக மெட்டாவெர்ஸ் துறை இப்போதைக்கு வெளியேறப் போவதில்லை. இது பல்வேறு வணிகங்கள் மற்றும் துறைகளில் அதிகளவில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தனித்துவமாக, மையவோட்டத்தில் மெட்டாவெர்ஸ் வெடிப்பு ஏற்படும் முன்பாகவே சோம்னியம் ஸ்பேஸ் இங்கு வந்துவிட்டதால் முதல் நகர்வைச் செய்த சாதகமான அம்சம் இதற்குள்ளது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எத்தனை சோம்னியம் ஸ்பேஸ் கியூப்ஸ் நாணயங்கள் உள்ளன?

இதை எழுதிக் கொண்டிருந்த நேரத்தில் CoinMarketCap அறிக்கைப்படி 12.5 மில்லியன் CUBEகள் புழக்கத்தில் இருந்தன.

சோம்னியம் ஸ்பேஸ் கியூப்ஸ் ஒரு நல்ல முதலீடு தானா?

இருக்கலாம். மெட்டாவெர்ஸ் மையவோட்டத்தில் திடீரென வெடித்ததில் CUBEன் விலை அதீத ஏற்றத்தைக் கண்டது. 2021 ஜனவரியில் $1க்கும் கீழே இருந்த விலை, 2021 நவம்பரில் அதுவரை இல்லாத உச்சமாக $28ஐத் தொட்டது.

எனினும், இந்த கிரிப்டோகரன்சி தற்போது இறங்குமுகமாக உள்ளது. கடந்த காலத்திலும் கணிசமான அளவு ஏற்ற இறக்கத்தைக் காட்டியுள்ளது. நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் தொகைக்கு அதிகமான பணத்தை ஒருபோதும் முதலீடு செய்யக்கூடாது என்பதை நினைவு கொள்ளுங்கள்.

சோம்னியம் ஸ்பேஸ் கியூப்ஸ் மேலே செல்லுமா?

செல்லக் கூடும். CUBE விலைக் கணிப்புகளில் ஏகோபித்த கருத்து என்னவென்றால், இந்த கிரிப்டோகரன்சி படிப்படியான வளர்ச்சியைக் காணும். பெரும்பாலான கணிப்புகள் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் புதிய உச்சத்தை எட்டும் என்கின்றன.

எனினும் விலைக்கணிப்புகள் பெரும்பாலும் தவறானவை. முதலீடு செய்யும் முன் உங்கள் சொந்த ஆராய்ச்சியை நீங்கள் செய்ய வேண்டும்.

சோம்னியம் ஸ்பேஸ் கியூப்ஸில் நான் முதலீடு செய்யலாமா?

இது உங்களைப் பொறுத்த விசயம். சோம்னியம் ஸ்பேஸ் கியூப்ஸ் இலாபமீட்டப் பயன்படுத்தும் ஒரு நிதிசார் முறையாவணமாக வடிவமைக்கப்படவில்லை. மாறாக, இது மெட்டாவெர்ஸ் பொருளாதாரத்தைக் கட்டமைக்க உருவாக்கப்பட்டது. எனினும், சமீபத்தில் மையவோட்டத்தில் ஏற்பட்ட மெட்டாவெர்ஸ் வெடிப்புக்குப் பின் இந்த டோக்கன் வெற்றியைக் கண்டுள்ளது.

இதை எழுதிய நேரத்தில், இது இறங்குமுகமாக இருந்தது. அத்துடன் மாறியல்புடையது என்பதையும் நிரூபித்துள்ளது. எனவே முதலீட்டு முடிவு எடுக்கும் முன் உங்கள் சொந்த ஆராய்ச்சியை எப்போதும் செய்யுங்கள்.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image