ஸ்பெல் டோக்கன் விலைக் கணிப்பு: சரிவில் இருந்து மீள முடியுமா?

By Currency.com Research Team

சமீபத்திய மாதங்களில் பெரும் இழப்புகளைச் சந்தித்த பிறகு, தொப்பியிலிருந்து முயலை வெளியே இழுப்பதைப் போன்ற வித்தைகளை SPELL செய்ய முடியுமா?

ஸ்பெல் டோக்கன் விலைக் கணிப்பு                                 
சமீபத்திய சர்ச்சைகள் முதலீட்டாளர்களை தவறான வழியில் தேய்த்திருக்கலாம் – புகைப்படம்: Shutterstock
                                

உள்ளடக்கம்

Abracadabra.money என்ற மையமில்லா நிதி (DeFi) நெறிமுறையின் வெகுமதி டோக்கனாக SPELL உள்ளது. இது பல பிளாக்செயின்களுக்கும் சொந்தமானது. அவற்றில் முதன்மையானவை எதேரியம், அவலாஞ்சே, ஃபேண்டம், ஆர்பிட்ரம். SPELL-ன் பயன்பாடு, விலை நடவடிக்கை மற்றும் முன்னறிவிப்பாளர் விலைக் கணிப்புகள் என்ன? தொடர்ந்து படியுங்கள்…

எனக்காக ஸ்பெல் செய்

ஸ்பெல் டோக்கன் (SPELL) என்றால் என்ன, அதன் பயன்பாடுகள் என்ன என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ள, Abracadabra.money எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம். ஒரு மையமில்லா நிதித் (DeFi) தளமாக, Abracadabra.money பயனர்கள் USD-விலை மட்டத்திலுள்ள MIM ஸ்டேபிள்காயினைக் கடனாகப் பெறுவதற்கு வட்டி-தாங்கி டோக்கன்களை (ibTKNS) டெபாசிட் செய்ய அனுமதிக்கிறது. பயனர் எந்தச் சொத்தை இணைத்து வைத்திருக்கிறார் என்பதைப் பொறுத்து வட்டி இருக்கும் (உதாரணமாக, ALGOவிற்கு 4% வருடாந்திரம்).

Abracadabra.money பயனரால் உருவாக்கப்பட்ட உரிமை மாற்றத் தொகுதியில் இயங்குவதால், உரிமை மாற்றம் வழங்குநர்கள் (LPs) பணயம் வைக்கப்பட்ட SPELL டோக்கன்களின் மீதான வட்டி (ROI) மூலம் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். Abracadabra.money காஷி லெண்டிங் (Kashi Lending) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இது சுஷிஸ்வாப் பயன்படுத்தும் அதே நெறிமுறை ஆகும். காஷி தனிமைப்படுத்தப்பட்ட இடர் சந்தைகளை அனுமதிக்கிறது. அதாவது தளத்தின் வர்த்தக இணைகளில் முழுவதுமாக ஆபத்து பகிரப்படவில்லை.

ஆப்ராகாடாப்ராவின் முகப்புப்பக்கம், "பயனர்கள் மாய இணையப் பணத்தை உருவாக்க அனுமதிக்கிறது" என்று கூறுகிறது. நிச்சயமாக, மேஜிக் பண மரங்கள் இல்லாதது போல, மேஜிக் இணையப் பணமும் இல்லை. பண்ணை விளைச்சல் மற்றும் ஸ்டாக்கிங் நிச்சயமாக விவேகமான முதலீட்டாளர்களுக்கு நிலையான வருமானத்தைக் கொண்டு வரும் அதே வேளையில், DeFi பாரம்பரிய நிதியைப் போலவே அல்லது அதற்கும் அதிகமான ஆபத்தை கொண்டது. உங்கள் நிலை கலைக்கப்படும் அபாயத்தில் உள்ளது. சுயமான நிதி ஆலோசனை மூலம் பதட்டமில்லாத சிந்தனை மற்றும் யுக்தி மூலம் முதலீடு செய்யும்படி Currency.com எப்போதும் பரிந்துரைக்கிறது.

SPELL டோக்கன் பொருளாதாரம்

மே 2021ல் டோக்கன்-ஜெனரேஷன் நிகழ்வுக்குப் பிறகு, SPELL பாதியாக்கம் நடந்தது. இதனால் விநியோகம் 420 பில்லியனில் இருந்து 210 பில்லியனாகக் குறைந்தது. ஜனவரி 2022ல் மேலும் 5.25 பில்லியன் டோக்கன்களை எரிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. மொத்தத்தில், தற்போதைய அதிகபட்ச வழங்கல் அசல் 420 பில்லியனில் இருந்து 196 பில்லியனுக்கு சற்று அதிகமாக உள்ளது. இந்த டோக்கன் எரிப்பு புழக்கத்தில் இல்லாத டோக்கன்களை இலக்காகக் கொண்டிருந்தது. இதனால் வர்த்தக மதிப்பு பாதிக்கப்படவில்லை.

தற்போதைய புழக்கத்தின் எண்ணிக்கை 83.21 பில்லியன் ஆகும். வாரந்தோறும் 911.5 மில்லியன் டோக்கன்கள் வீதம் சுழற்சி அதிகரிக்கிறது. இந்த எண்ணிக்கை ஆளுகை திட்டங்களுக்கேற்ப மாறக்கூடியது.

வாராந்திர உமிழ்வுகள் காலப்போக்கில் தொடர்ந்து குறைகிறது
வாராந்திர உமிழ்வுகள் காலப்போக்கில் தொடர்ந்து குறைகிறது – புகைப்படம்: abracadabra.money white paper

விநியோகத்தைப் பொறுத்தவரை, மே 2021ல் ஆரம்ப DEX வழங்கலில் (IDO) 7% வெளியிடப்பட்டது. அதே சமயம் 63% ROI ஊக்கத்தொகைக்காக வைக்கப்படுகிறது. இதுவே டோக்கனின் முதன்மை நோக்கமாகும். பணவாட்ட நடவடிக்கையாக ஒவ்வொரு ஆண்டும் வெகுமதிகள் பாதியாகக் குறைக்கப்படுகின்றன. மீதமுள்ள 30% குழுவால் ஒதுக்கப்பட்டுள்ளது. இது நான்கு வருட காலத்திற்கு வழங்கப்படுகிறது.

SPELL-ன் மதிப்பு தற்போது $0.0049 ஆக உள்ளது. இது $414.83 மில்லியன் சந்தை மூலதனத்தை அளிக்கிறது. இதனால் தரவரிசையில் 130வது இடத்தில் உள்ளது. சமீபத்திய 24-மணிநேர வர்த்தக வேளையில், டோக்கன் அளவு $109.88 மில்லியனை எட்டியது. இது சந்தை மூலதனத்தில் 25%க்கும் சற்று அதிகமானதாகும்.

SPELL பொதுவாக Abracadabra.money DeFi தளத்தில் பார்மிங் ஊக்கத்தொகையாகப் பெறப்படுகிறது. பினான்ஸ், காயின்பேஸ் மற்றும் FTX ஆகியற்றில் SPELL கிடைக்கிறது.

சமீபத்திய விலை நடவடிக்கை

ஜனவரி 3 அன்று 5.25 பில்லியன் SPELL எரிக்கப்படும் என்று விளம்பரப்படுத்திய போதிலும், டோக்கன் தொடர்ந்து கீழ்நோக்கிய வேகத்தில் நுழைந்தது. பிப்ரவரி 21 ஆம் தேதிக்குள் $0.024 இலிருந்து $0.0045 ஆகச் சரிந்தது. இது 80%க்கும் அதிகமான சரிவு. 2021 நவம்பர் 16 அன்று SPELL அதுவரை இல்லாத அளவான $0.075க்கு உயர்ந்தது. இது அதன் தற்போதைய மதிப்பை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாகும்.

ஒட்டுமொத்தமாக கிரிப்டோ சந்தை 2021ன் கடைசி கட்டங்களிலும் 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலும் சரிவைச் சந்தித்தது. இதனால் வீழ்ச்சி தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால் இவ்வளவு குறுகிய காலத்தில் கிரிப்டோகரன்சியின் மதிப்பு கிட்டத்தட்ட பாதியாகக் குறைவது ஆர்வமுள்ள முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தும்.

ஊழல் இதற்கு ஒரு காரணமா?

CoinDesk அறிக்கைப்படி, வொண்டர்லேண்ட் பணச் சந்தையின் டெவலப்பர்களில் ஒருவரான Oxsifu ஒரு தண்டனை பெற்ற மோசடியாளரும் தோல்வியுற்ற கனடியன் எக்ஸ்சேஞ்ச் QuadrigaCX-ன் இணை நிறுவனருமான மைக்கேல் பேட்ரினின் புனைப்பெயர் என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கும் Abracadabra.money க்கும் என்ன சம்பந்தம்? SPELL டோக்கனை உருவாக்கிய டேனியல் செஸ்டகல்லி, பேட்ரினுடன் இணைந்து வொண்டர்லேண்டில் இணை டெவலப்பராகவும் இருந்தார்.

செஸ்டகல்லி தீங்கிழைக்கும் நடத்தையில் குற்றம் சாட்டப்படவில்லை என்பதையும், பேட்ரினுடனான அவரது தொடர்பின் உண்மையான அளவு தெளிவாக இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இது முக்கிய இதழ்கள் எதிர்மறையாகச் செய்தி வெளியிடுவதை இது நிறுத்தவில்லை. இதனால் எதிர்மறை முதலீட்டு உணர்வை ஏற்படுத்தியிருக்கலாம்.

ஒரு ட்விட்டர் பதிவில், செஸ்டகல்லி கூறினார்: “நான் இதைப் பற்றி அறிந்திருந்தேன் என்பதையும், ஒரு தனிநபரின் கடந்த காலம் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்காது என்று முடிவு செய்தேன் என்பதையும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்… அவருக்காகப் போராடுவதைப் போலவே, கடந்த காலம் எப்படி இருந்திருந்தாலும் நல்ல செயல்பாட்டாளராக நிரூபிக்கப்பட்ட வேறு யாராயிருந்தாலும் அவருக்காக நான் போராடுவேன்.” 

முன்னறிவிப்பாளர்கள் என்ன சொல்கிறார்கள்

நவம்பரில் இருந்து மதிப்பு தொடர்ந்து சரிந்தாலும், ஸ்பெல் டோக்கன் விலை முன்கணிப்பு சில நேர்மறையான இலக்குகளைக் கொண்டுள்ளது. Wallet Investor-ன் SPELL விலைக் கணிப்பின்படி, 12 மாதங்களில் $0.02 இலக்கையும், ஐந்து ஆண்டுகளில் $0.083 இலக்கையும் அடையுமென்கிறது. இது நான்கு மடங்கு மற்றும் 17 மடங்கு ஆதாயங்களைக் குறிக்கிறது.

2022 ஆம் ஆண்டிற்கான Gov Capital-ன் ஸ்பெல் டோக்கன் விலைக் கணிப்பு $0.02 ஆக உள்ளது. அதே சமயம் 2025 ஆம் ஆண்டிற்கான ஸ்பெல் டோக்கன் விலைக் கணிப்பு $0.07 ஆக இருக்கிறது. ஐந்து ஆண்டுகளில், டோக்கன் இன்றைய மதிப்பை விட 23 மடங்கு அதிகரித்து $0.117 ஆக இருக்கும் என்கிறது.

2030க்கான ஸ்பெல் டோக்கன் விலைக் கணிப்புப்படி, Tech News Leader-ன் இலக்கு $0.13 ஆகும். இது இன்றைய வர்த்தக விலைக்கு எதிராக 26 மடங்கு வருமானத்தை உருவாக்கும். 2025 ஆம் ஆண்டிற்கான அதன் SPELL விலைக் கணிப்பு மதிப்பீடு $0.20 ஆகும். PricePrediction-ன் 2030க்கான ஸ்பெல் டோக்கன் விலைக் கணிப்பு சற்று அதிகமாக $0.14 ஆக உள்ளது.

Digitalcoin-ன் ஸ்பெல் டோக்கன் விலைக் கணிப்பு மிகவும் சாதகமற்றதாக, 2022க்கு $0.006; 2025க்கு $0.009; 2030க்கு $0.02 என்ற விலை இலக்குகளை அளிக்கிறது. முன்னறிவிப்பாளரின் 26 அளவீடுகளில் பெரும்பாலானவை விற்பனையைக் காட்டுகின்றன. நான்கு மட்டுமே SPELLஐ வாங்கப் பரிந்துரைக்கின்றன.

இந்த முன்னறிவிப்பாளர்கள் ஒரு தானியங்கு சேவை என்பதை நினைவில் கொள்ளவும். அவை ஒரு வழிகாட்டியாக பயனுள்ளதாக இருக்கும், ஆனால் எந்தவொரு முழுமையான முயற்சியிலும் மற்ற பல காரணிகளை கணக்கில் கொள்ள வேண்டும். கண்டிப்பாக வெள்ளையறிக்கையைப் படியுங்கள்; சமூக ஊடகச் சேனல்களைப் பாருங்கள்; சுயாதீன ஆலோசகர்களைக் கலந்தாலோசியுங்கள்; நீங்கள் முதலீட்டைக் கருத்தில் கொண்டால் திட்டத்தின் நீண்டகால நம்பகத்தன்மையை தனிப்பட்ட மதிப்பீடு செய்யவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எத்தனை ஸ்பெல் டோக்கன்கள் உள்ளன?

அதிகபட்ச வழங்கலான 196 பில்லியனில் தற்போது 83.21 பில்லியன் SPELL புழக்கத்தில் உள்ளது.

ஸ்பெல் டோக்கன் ஒரு நல்ல முதலீடு தானா?

ஸ்பெல்  டோக்கனின் மதிப்பு சமீபத்தில் வெகுவாகக் குறைந்துள்ளது. எனவே நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், முழுமையான கவனத்துடன் பயிற்சியை மேற்கொள்ள Currency.com பரிந்துரைக்கிறது.

ஸ்பெல் டோக்கன் மேலே செல்லுமா?

சமீபத்தில் மோசமான செயல்திறன் இருந்தபோதிலும், ஸ்பெல் டோக்கன் அதிகரிக்கும் என்று டிஜிட்டல் முன்னறிவிப்பாளர்கள் பொதுவாக ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் இந்த டிஜிட்டல் முன்னறிவிப்புகளை உண்மையான நிதி ஆலோசனையாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஸ்பெல் டோக்கனில் நான் முதலீடு செய்யலாமா?

Currency.com உங்கள் சொந்த முடிவை எடுப்பதற்கு, வெள்ளையறிக்கையைப் படிக்கவும், செய்திகளைப் பார்க்கவும், சமூக ஊடகச் சேனல்களைப் பின்தொடரவும், சுயாதீன நிதி ஆலோசனையைப் பெறவும் பரிந்துரைக்கிறது.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image