1.எத்தகைய தனிப்பட்ட தகவல்களை (இனி PD என்று குறிப்பிடப்படும்) நாங்கள்1 சேகரிக்கிறோம்?

நாங்கள் பின்வரும் PDயை சேகரித்து செயல்படுத்துகிறோம்:

 1. தனிப்பட்ட மற்றும் தொடர்பு தகவல்கள் (உங்கள் பெயர், குடும்பப் பெயர், தந்தைவழிப் பெயர் (இருந்தால்), குடியுரிமை, பிறந்த தேதி மற்றும் இடம், வசிப்பிடம், கடவுச்சீட்டு அல்லது பிற அடையாள ஆவணம் வழங்கப்பட்ட தேதி, மின்னஞ்சல் முகவரி, தனிப்பட்ட மற்றும் தொடர்பு தகவல்களை சரிபார்ப்பதற்கு பெறப்பட்ட பிற தகவல்கள்);
 2. செயலியைப் பயன்படுத்தி நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் நிதிசாரா பரிவர்த்தனைகளாக அல்லாத டிஜிட்டல் டோக்கன்கள் (டோக்கன்கள்) மூலம் செய்த பரிவர்த்தனைகள் (செயல்பாடுகள்) குறித்த தரவு (தகவல்கள்);
 3. வங்கி செலுத்துகை அட்டைகள் மற்றும் மெய்நிகர் வாலெட்டுகள் பற்றிய தரவு உள்ளிட்ட உங்கள் செலுத்துகை முறையாவணங்கள் குறித்த தரவு (தகவல்கள்);
 4. ஒலி மற்றும் காணொளிப் பதிவு செய்தித் தொடர்பு (தொலைபேசி மற்றும் காணொளி அழைப்புகள், மின்னஞ்சல் மற்றும் இணைய உரையாடல் தொடர்புகள்) உள்ளிட்ட உங்களுடனான செய்தித்தொடர்பு;
 5. IP முகவரி;
 6. உங்கள் சாதன ஐடி;
 7. நீங்கள் நிறுவியுள்ள இயங்குதளத்தின் ஐடி;
 8. டிஜிட்டல் டோக்கன்களை (டோக்கன்கள்) பணத்துக்கு அல்லது மின்வழி பணத்துக்கு மாற்றாகக் கையகப்படுத்துவதற்கான பரிவர்த்தனைகளைச் (செயல்பாடுகள்) செய்வதற்குரிய கல்வித் தகுதியை (அறிதிறன்) தீர்மானிக்கையில் பெறப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிற வஸ்துக்கள் (தகவல்கள்) (பெலாரஸ் குடியரசின் குடிமக்களுக்கு மட்டும்);
 9. தகுதிவாய்ந்த முதலீட்டாளராக அங்கீகரிக்கப்படுவதற்குத் தேவையான தகவல்கள் (வருடாந்திர வருவாய், பணி அனுபவம், கல்வி, பங்குப் பரிவர்த்தனை அனுபவம் மற்றும் (அல்லது) பெறுதி (derivative) நிதிசார் முறையாவணங்கள், வழங்கமுடியாத நேரடி நிதி முறையாவணங்களுடனான பரிவர்த்தனைகள் போன்றவை);
 10. செயலியை நீங்கள் எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பது குறித்த தகவல்கள் (உதாரணமாக, இணையத் தொடர்பு வகை, அமர்வு தகவல்கள்);
 11. எங்களுக்கு நீங்கள் வழங்கும் வேறு பிற தகவல்கள் (குறிப்பாக, எங்களது தொழில்நுட்ப உதவிச் சேவையை நீங்கள் தொடர்புகொள்ளும்போது).

2. நாங்கள் ஏன் PD-யை சேகரிக்கிறோம்?

பத்தி 1ன் (a), (b), (c), (d), (h) மற்றும் (i) பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட உங்கள் PD செயலாக்கமானது பெலாரஸ் குடியரசுச் சட்டமுறைமை மற்றும் உயர் தொழில்நுட்பப் பூங்காவின் கண்காணிப்பு வாரியச் சட்டங்களின்படியும் தேவைப்படுவதால் எங்களுக்கு அது அவசியமானதாகிறது.

உங்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக குறிப்பிடப்பட்ட PDயை நாங்கள் சேகரிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

எனவே, மேற்கண்ட தகவல்களை நீங்கள் எங்களுக்கு வழங்காவிட்டால், டிஜிட்டல் டோக்கன்கள் (டோக்கன்கள்) பரிவர்த்தனைகளை நீங்கள் மேற்கொள்வதை அனுமதிப்பதற்கு எங்களுக்கு உரிமை இருக்காது

பத்தியின் (e), (f), (g) மற்றும் (j) பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட உங்கள் PD செயலாக்கமானது எங்களது சட்டப்பூர்வ நலன்களுக்காகத் தேவைப்படுகிறது2.

3. PD செயலாக்கத்தை நீங்கள் மறுக்க முடியுமா?

பின்வருவனவற்றை செயல்படுத்துவதை மறுக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது:

 1. சந்தை இயற்பண்பு மற்றும் பகுப்பாய்வுகளுக்காகத் தேவைப்படும் தரவுகள்;
 2. நீங்கள் செயலியைப் பயன்படுத்தும் விதம் குறித்த தகவல்கள்;
 3. விளம்பரங்களை உங்களுக்கு அனுப்புவதற்காக பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல். இந்தத் தகவல்களைச் செயல்படுத்துவதைத் தடுக்க நீங்கள் support@currency.com. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு முறையான கடிதம் எழுதி மறுக்கலாம்

4. எங்கள் தனியுரிமைக் கொள்கை தொடர்பாக உங்களுக்கு உள்ள உரிமைகள் யாவை?

உங்களுக்கு உள்ள உரிமைகள்:

 1. எந்த நேரத்திலும் எந்தக் காரணங்களையும் தராமல், பத்தி 3ல் குறிப்பிடப்பட்ட PD செயலாக்கத்துக்கான உங்கள் ஒப்புதலை நீங்கள் திரும்பப் பெறலாம்;
 2. உங்கள் PD செயலாக்கம் தொடர்பான தகவல்களைப் பெறுதல்;
 3. உங்கள் PD முழுமையற்றதாக, காலாவதியானதாக அல்லது தவறானதாக இருப்பின் அதில் மாற்றங்கள் செய்ய எங்களிடம் கோரலாம்;
 4. தங்களது PDயை மூன்றாம் தரப்பினரிடம் வழங்குதல் தொடர்பாக எங்களிடமிருந்து தகவல்களைப் பெறலாம்;
 5. பெலாரஸ் குடியரசு சட்டமுறைமையின் படி மற்றும் (அல்லது) உயர் தொழில்நுட்பப் பூங்காவின் கண்காணிப்பு வாரியச் சட்டங்களின்படியும் வழங்கப்பட்டபடி PD செயலாக்கத்துக்கு அடிப்படை இல்லாதபோது, அவற்றை அழித்தல் உட்ப்பட உங்கள் PD செயலாக்கத்தை நிறுத்தும்படி எங்களிடம் கோரலாம்;
 6. பெலாரஸ் குடியரசு குடிமக்கள் மற்றும் சட்டப்பூர்வ அமைப்புகளின் மேல்முறையீடுகளுக்கான சட்டமுறைமையில் விளக்கப்பட்ட வகையில், PD சம்பந்தப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அதிகாரப்பூர்வ அமைப்பிடம் PD செயலாக்கத்தின்போது எங்கள் செயல்பாடுகளுக்கு (செயலின்மைக்கு) எதிராகவும் உங்கள் உரிமைகளை மீறக்கூடிய முடிவுகள் குறித்து மேல்முறையீடு செய்யலாம்.

5. மேற்கண்ட உரிமைகளை எப்படிப் பயன்படுத்துவது?

தனிப்பட்ட தகவல் விசயத்தில் உங்கள் ஒப்புதலைத் திரும்பப்பெறும் உரிமை, PD செயலாக்கம் தொடர்பான தகவல்களைப் பெறும் உரிமை மற்றும் PD திருத்தங்கள் உள்ளிட்ட உரிமைகள், PD-யை மூன்றாம் தரப்பினர்களுக்கு வழங்குவது தொடர்பான தகவல்களைப் பெறும் உரிமை, PD செயலாக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் மற்றும் (அல்லது) அவற்றை அழிக்கவும் உரிமைகோரும் உரிமை போன்றவற்றைச் செயல்படுத்துவதற்கு, எழுத்துப்பூர்வமான விண்ணப்பத்தை Republic of Belarus, 220030, Minsk, 36-1 Internatsionalnaya str., office 724, room 2 என்ற முகவரிக்கோ அல்லது அத்தகு விண்ணப்பத்தை support@currency.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ எங்களுக்கு நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

உங்கள் விண்ணப்பத்தில் இருக்க வேண்டியவை:

 1. குடும்பப் பெயர், முறையான பெயர், தந்தைவழிப் பெயர் (இருந்தால்), வசிப்பிட முகவரி (வசிப்பிடம்);
 2. பிறந்த தேதி;
 3. அடையாள எண், அத்தகு ஓர் எண் இல்லையெனில் - அடையாள ஆவணத்தின் எண், உங்கள் ஒப்புதலைத் தரும்போது இந்தத் தகவல் உங்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தால் அல்லது உங்கள் ஒப்புதலின்றி PD செயலாக்கம் மேற்கொள்ளப்பட்டிருந்தால்;
 4. தேவைகளின் சாராம்ச அறிக்கை;
 5. தனிப்பட்ட கையொப்பம் அல்லது டிஜிட்டல் கையொப்பம்.

கூடுதல் தகவல்களை தற்போதைய தனியுரிமைக் கொள்கையில் காணலாம். இந்தத் தனியுரிமைக் கொள்கை, தொடர்பாக ஏதேனும் ஆலோசனைகள், கேள்விகள் இருப்பின் தயவுசெய்து privacy@currency.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

1 “நாங்கள்”, “எங்களுக்கு” என்பது பெலாரஸ் குடியரசு சட்டமுகமைக்கு இணங்க பதிவுசெய்யப்பட்ட (TIN 193130368), 220030, Minsk city, Internatsionalnaya street, 36-1, office 724, room 2 என்ற முகவரியில் இயங்கி வரும் “Currency Com Bel” Limited liability companyயைக் குறிக்கும். எங்களைப் பற்றிய மேலும் விரிவான தகவல்களை இந்த இணைப்பில் காணலாம்: https://currency.com/general-informationn.

2எங்கள் சட்டப்பூர்வ நலன்களின் முழுமையான பட்டியல் தனியுரிமைக் கொள்கையின் உட்பிரிவு 2.2ல் உள்ளது.