THETA நாணயத்தின் விலைக் கணிப்பு: அடையக்கூடிய விலை என்ன?

By Currency.com Research Team

THETA நாணயத்துக்கு 2021 ஆம் ஆண்டு சுவாரசியமானதாக அமைந்திருந்தது. ஆனால் 2022 எப்படி இருக்கும்?

THETA நாணய விலைக் கணிப்பு                                 
டெவலப்பர்கள் THETA வலைத்தொடர்பை அதன் பிளாக்செயினின் மேல் மையமில்லா செயலிகளை உருவாக்க பயன்படுத்தலாம் - புகைப்படம்: ஷட்டர்ஸ்டாக்
                                

இந்தக் கணிப்பில்

கிரிப்டோகரன்சி உலகில் THETA நாணயம் பரபரப்பான விஷயமாக மாறியுள்ளது. நீங்கள் THETA நாணயச் செய்திகளிலும் அதற்கு என்ன நடக்கப் போகிறது என்று அறிந்து கொள்வதிலும் ஆர்வமாக இருக்கக்கூடும்; ஆனால் நீங்கள் THETA நாணயத்தின் விலையைக் கணிக்க முடியுமா? பார்க்கலாம்.

THETA நாணய வரலாறு

கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஊரடங்குகளின் தொடக்கத்திலிருந்து, இசை நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்வுகளின் நேரலைகள் நம்பமுடியாத அளவிற்குப் பிரபலமாக உள்ளன. ஆனால் சில நேரலைகளின் தரம் மோசமாக உள்ளது.

உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் உயர் தரத்தை நோக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தற்போதுள்ள தொழில்நுட்பத்தால் மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதைச் சரியாக அடையாளம் காண முடியவில்லை. இது ஒரு பிரச்சனையாக இருக்கலாம். குறிப்பாக மக்கள் நேரலைப் பார்க்க பணம் செலுத்தி, மோசமான படம் மற்றும் இடைத்தாங்கலினால் (buffering) பாதிக்கப்படுகின்றனர்.

2017 ஆம் ஆண்டில், ஒரு புதிய அமைப்பு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த உருவாக்கப்பட்டது. மெய்நிகர் நேரலையோட்டத் தொழில்நுட்பத்தில் பின்னணி கொண்ட தொழிலதிபர் ஜியேயி லாங், இணையவழி விளம்பரம் மற்றும் மொபைல் கேமிங் நிறுவனங்களை நிறுவிய தொழில்முனைவோரான மிட்ச் லியு ஆகியோர் நேரலையோட்டத்தை மேம்படுத்த பிளாக்செயினைப் பயன்படுத்தும் தீட்டா நெட்வொர்க்கைக் கொண்டு வர ஒன்றிணைந்தனர்.

வெவ்வேறு இடங்களில் உள்ள ஆபரேடர்களின் வலைத்தொடர்புகளை இணைத்து (உள்ளடக்கத்தை வழங்கும் வலைத்தொடர்புகள் (CDNs)), இணையவழி காணொளி ஓட்டத்தை, பெரும்பாலும் நேரலையை வழங்குவதே இதன் திட்டமாகும். ஆனால் CDNகள் அவற்றின் புவியியல் இருப்பிடங்களால் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், அவர்களால் உயர்தர நேரலை ஓட்டங்களைத் தொடர்ந்து தர முடியவில்லை.

தீட்டா நெட்வொர்க் உலகளாவிய பயனர்களின் குழுவை உருவாக்குகிறது. அவர்கள் உதிரி அலைவரிசை மற்றும் பிற உடைமைகளை வழங்கி காணொளிகளின் ஓட்டத்துக்கு செய்ய உதவுகிறார்கள். கோட்பாட்டில், அதிக அலைவரிசை என்பது குறைந்த இடைத்தாங்கலுடன் கூடிய உயர்தர ஓட்டங்களைக் குறிக்கிறது.

இது எப்படி வேலை செய்கிறது? உங்களுக்குக் காட்டுகிறோம்

THETA நாணயம் எவ்வாறு செயல்படுகிறது
THETA நாணயம் எவ்வாறு செயல்படுகிறது - நன்றி: Currency.com

டெவலப்பர்கள் தீட்டா நெட்வொர்க்கைப் பயன்படுத்தி அதன் பிளாக்செயினின் மேல் மையமில்லா செயலிகளை உருவாக்கலாம். அதாவது ராயல்டி விநியோகம் மற்றும் கூட்டு நிதிநல்கை போன்றவற்றிற்கான செயலிகள். தங்கள் காணொளிகளில் கூடுதல் கட்டுப்பாட்டை விரும்பும் (அவர்கள் வீடியோக்கள் எப்படி பார்க்கப்படுகின்றன, அவற்றின் தரம் மற்றும் அவற்றுக்கான ஊதியம் எப்படி கிடைக்கும் போன்றவை) இணையவழி உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களிடம் தீட்டா பிரபலமடைந்து வருகிறது.

தீட்டா பிளாக்செயின் பின்னணியில் இயங்குகிறது. இது கருத்தொற்றுமை முறைமையை நிறுவவும் வெகுமதிகளைச் செலுத்தவும் உதவுகிறது. இது இரண்டு பூர்வீக நாணயங்களைக் கொண்டுள்ளது - எட்ஜ் நோட்களுக்கு வெகுமதிகளை வழங்கப் பயன்படும் தீட்டா பியூயல்(TFUEL) மற்றும் 2019ல் நேரலைக்கு வந்த THETA நாணயம்.

2018ல், இந்நிறுவனம் ஒரு பில்லியன் THETA நாணயங்களில் 30% தனியார் விற்பனையை நடத்தியது. இதில் சுமார் $20 மில்லியன் (£15.2 மில்லியன்) திரட்டி தீட்டா டோக்கனில் ஆர்வத்தை உருவாக்கத் தொடங்கியது. THETA நாணயம் என்பது உண்மையில் ஒரு டோக்கன். மக்கள் வாக்களிக்கும் உரிமைகள் மற்றும் பரிவர்த்தனைகளைச் சரிபார்க்க இது அனுமதிக்கிறது.

THETA விலையைப் பார்க்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் அதன் வரையறுக்கப்பட்ட விநியோகம். நீங்கள் டோக்கனை மைன் செய்து எடுக்க முடியாது. யாராவது அதை விற்கும்வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.

THETA விலை வரலாறு

THETA விலையானது அதன் முதல் சில ஆண்டுகளில் $0.10 ஆக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு, நிலவரம் மாறத் தொடங்கின. இது மே 2020ல் $0.20 தடையை உடைத்து, டிசம்பர் தொடக்கத்தில் $0.70ஐ எட்டியது; டிசம்பர் 22 அன்று முதல் முறையாக $1ஐக் கடந்தது.

பின்னர் விலை மேலும் உயர்ந்தது. ஜனவரி 5, 2021 அன்று $2.13ஐயும், பிப்ரவரி 14ல் $3.19ஐயும் எட்டியது. பிப்ரவரி இறுதியில், இது $3.10க்கு சற்று குறைவாக இருந்தது. மார்ச் மாதத்தில் வேகமாக உயர்ந்தது. அந்த மாதம் $12.21ல் முடிவடைந்தது. 293%க்கும் அதிகமான உயர்வு இது. ஏப்ரல் 16 அன்று எப்போதும் இல்லாத உச்சமாக $15.08ஐ எட்டியது.

19 மே 2021ன் கிரிப்டோகரன்சி சரிவில் THETA நாணயம் பெரும் இழப்பைச் சந்தித்தது. ஜூன் 3 ஆம் தேதி, அதன் மதிப்பு $8.93 ஆக இருந்தது. இது 2021ன் தொடக்கத்தில் இருந்ததை விட அதிகம். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இருந்த அதன் உச்சவிலையை நெருங்க முடியவில்லை. செப்டம்பரின் பிற்பகுதியில் குறைந்தபட்சமான $4.75 க்குச் சென்றது. இருப்பினும், சில இழப்புகள் இடைவிடாமல் மீட்டெடுக்கப்பட்டு, அக்டோபர் மாத இறுதியில் $8.35 ஆக உயர்ந்தது. மேலும் நாணயத்தின் நீண்டகால உயிர்வாழ்விற்காக மீண்டும் ஒரு நிலையான ஏற்றத்தில் நகர்ந்தது. இருப்பினும், பல கிரிப்டோகரன்சிகள் டிசம்பர் 2021 காலத்தில் சரிவைச் சந்தித்துத் தடுமாறின. 14 ஜனவரி 2022 நிலவரப்படி THETAவின் விலை $4.01 ஆகும்.

இவ்வளவுதான் வரலாறு. எதிர்காலம் எப்படி இருக்கும்? 2022 மற்றும் அதற்குப் பிறகான THETA நாணயத்தின் விலையைக் கணிக்க முடியுமா? பார்க்கலாம்.

THETA நாணயத்தின் விலைக் கணிப்புகள்

எதிர்காலத்தைப் பார்க்கும்போது, WalletInvestor ஒரு வருடத்தில் $9.32 மற்றும் ஐந்து ஆண்டுகளில் $29.88 என்று THETA விலையைக் கணித்துள்ளது. DigitalCoinPrice சற்று எச்சரிக்கையாக உள்ளது. இது ஒரு வருடத்திற்குப் பிறகு $8.33 ஆகவும், 2027ல் அதாவது ஐந்து ஆண்டுகளில் $14.82 ஆகவும் இருக்கும் என்று கூறுகிறது. THETA 2022ல் என்ன விலையை எட்டும்? WalletInvestor நவம்பர் 2022 காலப்பகுதியில் சராசரியாக $8.70 ஐ பரிந்துரைக்கிறது.

CryptoGround ஒரு வருடத்தில் $7.46 மற்றும் ஐந்து ஆண்டுகளில் $21.65 என்ற மதிப்பைப் பரிந்துரைக்கிறது.

பிப்ரவரி 2022 தொடக்கத்தில் THETA விலை $4.13ஐ எட்டும் என்று TradingBeasts கூறுகிறது. டோக்கனின் அதிகபட்ச விலை 2022 மே மாதத்தில் $5.09 ஆக இருக்கும் என்றும் கணிக்கிறது.

எந்தவொரு நல்ல THETA நாணய மதிப்பாய்வும், விலைக் கணிப்புகள் பெரும்பாலும் தவறானவை என்று உங்களுக்குத் தெரிவிக்கும். கிரிப்டோகரன்சிகள் மிகவும் நிலையற்றவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். முதலீடுகளின் மதிப்பு குறையவும் கூடும். எப்போதும் நீங்கள் இழப்பை தாங்கக்கூடிய அளவிற்கு அதிகமாக முதலீடு செய்யக்கூடாது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

THETA நாணயம் நல்ல முதலீடுதானா?

THETA நாணய விலைக் கணிப்புகளின் போக்கு விவாதத்திற்குரியது. சில ஆய்வாளர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து விலை ஏறும் என்பதுதான். ஆனால் எவ்வளவு ஏறும், எவ்வளவு காலத்துக்குள் ஏறும் என்பது ஊகத்திற்குரியது. எப்போதும் போல, உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்ய நினைவில் கொள்ளுங்கள்.

THETA $100க்குப் போகுமா?

THETA விலை தற்போதைக்கு $100 தடையை உடைக்காது என்று சொல்வது நியாயமானது. மிகவும் நம்பிக்கையான THETA நாணயத்தின் விலைக் கணிப்பு WalletInvestor இடமிருந்து வருகிறது. இது 2026 ஆம் ஆண்டில் நாணயம் $33.42ஐ எட்டும் என்று கணித்துள்ளது. அதனால் அது ஒருபோதும் $100ஐ எட்டாது என்று சொல்ல முடியாது. இருப்பினும், உங்களிடம் THETA இருந்தால், அது எப்போதாவது $100க்கு நகர்ந்தால், அந்த இலக்கை அடையும் வரை நீண்ட காலம் காத்திருக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

THETA நாணயத்தை எங்கே வாங்குவது

THETA நாணயத்தை Binance, OKEx, FTX, Upbit, Huobi Global உள்ளிட்ட கிரிப்டோகரன்சி சந்தைகள் மூலம் வாங்கலாம். நீங்கள் THETA-ஐ வாங்க விரும்பினால், பரிவர்த்தனைகளை மேற்கொள்ள தீட்டா நெட்வொர்க்கில் பயன்படுத்தப்படும் தீட்டா பியூயல்(TFUEL) உடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image