தோர் விலைக் கணிப்பு: DeFi செயற்தளத்தில் அடுத்து என்ன நடக்கும்?
2022 ஜனவரி கடைசியிலும் பிப்ரவரி தொடக்கத்திலும் பரிதாபகரமான நிலையில் இருந்த THOR, திடீரென 30% ஒரே நாளில் அதிகரித்தது

உள்ளடக்கம்
- தோர் என்றால் என்ன (THOR)?
- சமீபத்திய நாணயச் செயல்திறன்
- THOR நாணய விலைக் கணிப்பு – நிபுணர்கள் கருத்து
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
கிரிப்டோ இளங்குழுமங்களை வழங்கும் நிறுவனம் தனது முதலீட்டாளர்கள் செயலின்றி வருவாயை ஈட்டும் எண்ணிறந்த வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
இந்த நிறுவனங்களில் 2021ல் நிறுவப்பட்ட DeFi செயற்தளமான THOR, ஒன்றாகும். இந்த செயல்திட்டம் பல்வேறு DeFi செயல்திட்டங்கள், தனித்துவமான டோக்கன்கள் (NFTகள்), THOR நாணயதாரர்கள் சார்பாக ஸ்டேக்கிங் தொகுப்புகள் ஆகியவற்றில் முதலீடு செய்கிறது.
தன்னை “பல்-சங்கிலி உடன்படும் விளைச்சல் நெறிமுறை” என்று வரையறுத்துக் கொள்ளும் இந்தச் செயல்திட்டம் பாதகமான அம்சங்களில் இருந்து முதலீட்டாளர்கள் தங்களைக் காத்துக் கொள்ளவும் கிரிப்டோ முதலீட்டின் சாதகங்களைப் பெறவும் வாய்ப்பளிக்கிறது. இதன் இணையதளம் என்ன சொல்கிறதென்றால், பல்வேறு முதலீட்டு யுக்திகளின் அபாயங்களைச் சமன்படுத்தி முதலீட்டு வாய்ப்புகளுடன் வரச் செய்வதற்கு அனுபவமிக்க “திறனாளர்களை” மட்டும் பயன்படுத்தி நாணயதாரர்கள் “சிறிய முயற்சியில் செயலின்றி வருவாயை” வெற்றிகரமாக பெற முடியும்.
இந்த நாணயம் தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து குறிப்பிடத்தக்க அளவு ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளது. ஆனால் தோர் விலைக் கணிப்பு என்னவாக உள்ளது?
விலைக் கணிப்புகளைப் பார்க்கும் முன்பாக நாணயத்தை பரிசீலனை செய்யலாம்.
தோர் என்றால் என்ன (THOR)?
கிரிப்டோ துறையில் ஏற்ற, இறக்கச் சந்தை இரண்டிலும் மிக நம்பிக்கையூட்டும் வாய்ப்புகளை ஆராய்ந்து கண்டறிவதாக தோர் சொல்கிறது. இதன் இணைய பக்கத்தின்படி, வெகுமதிகளை ஈட்டும் செயல்முறை என்பது THOR டோக்கன்களை வாங்குவதைப் போல எளிதானது. ஒரு முனையத்தை உருவாக்கி அன்றாடம் வெகுமதிகளை ஈட்டலாம். இந்தச் செயல்திட்டத்தின் நிறுவனர்கள் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.
எந்தளவு அடர்த்தி குறைவாக இணையபக்கம் உள்ளது என்பதையும் செயல்திட்டம் குறித்து எந்தளவு தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது.
இந்தத் தரவுகள் எப்படி 2022 அல்லது 2025 தோர் விலைக் கணிப்பைப் பாதிக்கின்றன?
விலைக் கணிப்புகளைப் பார்க்கும்முன் சமீபத்திய நாணயச் செயல்பாடுகளைப் பரிசீலிக்கலாம்.
சமீபத்திய நாணயச் செயல்திறன்
இந்த நாணயம் தோற்றுவிக்கப்பட்ட உடனேயே வெடித்தெழுந்து 2021 டிசம்பர் 8ல் $177.58லிருந்து 2021 டிசம்பர் 10ல் $423.91ஐ எட்டியது. அதைத் தொடர்ந்து 2021 டிசம்பர் 11ல் $213.3க்கு இறங்கி 2021 டிசம்பர் 12ல் $387.65க்கு ஏறியது. திரும்பவும் 2022 டிசம்பர் 13ல் $174.01க்குச் சரிந்தாலும், திரும்பவும் $319.57க்கு THOR வந்தது. அதன்பின் இந்த நாணயம் பெரியளவில் இறங்குமுகமாகவே இருந்து வந்தது. 2021 டிசம்பர் 23ல் $66.69க்கு இறங்கியது. தற்காலிகமாக $202.98க்கு 2021 டிசம்பர் 24ல் ஏறினாலும், அதுவரையில்லாத குறைந்த விலையான $16.01ஐ 2022 ஜனவரி 7ல் தொட்டது. பின்னர் 2021 ஜனவரி 26ல் $233.81க்கு எழுந்தது. பிப்ரவரி தொடக்கத்தில் நாணயம் சரிந்து 2022 பிப்ரவரி 22ல் $38.9 ஆகக் குறைந்தது. அதன் பிறகு மேலெழுந்து 2022 பிப்ரவரி 23ல் $51.67 ஆக இருந்தது.
இந்த நாணயம் பிப்ரவரி 23 வரை 30 நாட்களில் கிட்டத்தட்ட 70% இழந்துள்ளது. ஆனால் அதன் பிறகு ஒரே நாளில் 30% அதிகரித்து பலனடைந்துள்ளது.
THOR நாணயத்திற்கு CoinMarketCap இல் சந்தை மூலதனம் குறித்த தகவல் இல்லை. THOR இன் முழு சந்தை மூலதனம் (அதிகபட்ச விநியோகம் புழக்கத்தில் இருந்தால்) $1.058bn ஆகும். அதிகபட்ச வழங்கலாக 20.5 மில்லியன் THOR நாணயங்கள் மற்றும் புழக்கத்தில் அறியப்படாத எண்ணிக்கையில் விநியோகம் உள்ளது.
இந்தத் தரவு THOR விலைக் கணிப்பை எவ்வாறு பாதிக்கிறது?
THOR நாணய விலைக் கணிப்பு – நிபுணர்கள் கருத்து
தோர் விலைக் கணிப்புகளைப் பார்க்கும்போது விலை எந்தப் பக்கம் நகரக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்கு அவை உதவியாக இருக்குமென்பதையும் அவற்றை சாத்தியங்களாகவே பார்க்க வேண்டுமே தவிர முழுமையானதாக அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இதை மனதில் கொண்டு THOR விலைக் கணிப்புகள் சிலவற்றைப் பார்க்கலாம்.
Price Prediction-ன் 2030க்கான தோர் விலைக் கணிப்பு விநோதமாக $863.54 என்று உள்ளது.
Digital Coin Price விலைக் கணிப்புப்படி 2023ல் THOR $81.05 ஆக இருக்குமென்றும் 2024ல் $87.52 என்றும் சொல்கிறது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எத்தனை தோர் நாணயங்கள் உள்ளன?
THOR நாணயங்களின் அதிகபட்ச வழங்கல் 20.5 மில்லியன் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புழக்கத்தில் எவ்வளவு உள்ளது என்று தெரியவில்லை.
தோர் ஒரு நல்ல முதலீடு தானா?
இது மிகவும் புதிய நாணயம். ஏற்ற இறக்கமுள்ள விலை வரலாறு உள்ளது. எனவே வருங்காலத்தில் எந்தளவு செயல்படும் என்று கணிப்பது மிகவும் சிரமமானது. தற்போதைக்கு அதன் அடர்த்திக் குறைவான இணையப் பக்கமும் நிறுவனர்கள் குறித்து போதிய தகவல் இன்மையும் இந்த நாணயத்தின் எதிர்கால வாய்ப்பு குறித்துக் கணிக்க இயலாமல் செய்கின்றன.
கிரிப்டோ சந்தை அதிக மாறியல்புடையது என்பதையும் எல்லா டோக்கன்களின் விலையும் ஏறவும் இறங்கவும் செய்யுமென்பதையும் எப்போதும் நினைவில் கொள்வது நல்லது. நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் தொகைக்கு அதிகமான பணத்தை ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள்.
தோர் விலை மேலே செல்லுமா?
விலை கணிக்கும் செயற்தளங்கள் நாணயத்தின் விலை மேலே செல்லும் என்று கருதுகின்றன. விலை முன்னறிவிப்புகள், அதிலும் குறிப்பாக நீண்டகாலக் கணிப்புகளை சுட்டிக்காட்டிகளாகவே பார்க்கப்பட வேண்டும்; முழுமையான ஒன்றாக அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நான் தோரில் முதலீடு செய்ய வேண்டுமா?
முதலீடு என்பது உங்கள் முனைப்பைப் பொறுத்த விசயம். உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்யுங்கள். தோர் சூழல்மண்டலத்தில் அதன் எதிர்கால வாய்ப்புகளை ஊக்குவிக்கும் அல்லது பலவீனப்படுத்தும் ஏதேனும் மேம்பாடுகள் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள முயலுங்கள்.
முதலீடு செய்வதில் அபாயமுள்ளது என்பது ஞாபகத்தில் இருக்கட்டும். நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் தொகைக்கு அதிகமான பணத்தை ஒருபோதும் முதலீடு செய்யக்கூடாது என்பது முக்கியம்.