பெயர் பரவல் விற்க வாங்கு மாற்றம்% வரைபடங்கள் (2 நாட்கள்)

குறியீட்டெண்களுக்கான சந்தைகளில் டிவிடெண்டுகள்

டோக்கனைஸ்டு குறியீட்டெண்களை வைத்துள்ள வாடிக்கையாளர்களால் டிவிடெண்டு தொகைகளைத் திரட்ட முடியும்

டிவிடெண்டு வழங்குதல் என்றால் என்ன?

ஒரு நிறுவனம் தனது வருவாயின் ஒரு பகுதியை அதன் பங்குதாரர்களுக்குப் பகிர்ந்தளிப்பது டிவிடெண்டு என அழைக்கப்படுகிறது. டிவிடெண்டு என்பது நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவால் தேர்வு செய்யப்பட்ட வருவாயின் ஒரு பகுதியாகும். இது பங்குகள், ரொக்கப் பணம் அல்லது சொத்தின் பங்குகள் வடிவில் வழங்கப்படலாம். ஒரு நிறுவனம் இலாபம் ஈட்டும்போது, ​​இந்தப் பணத்தை மீண்டும் நிறுவனத்தில் மீண்டும் முதலீடு செய்யலாம் மற்றும்/அல்லது அதன் பங்குதாரர்களுக்கு இலாபத்தைப் பகிர்ந்தும் அளிக்கலாம். ஒரு நிறுவனம் தான் பெற்ற இலாபத்தைப் பங்குதாரர்களுக்கு டிவிடெண்டாக வழங்க முடிவு செய்தால், ஒரு பங்குக்கு இவ்வளவு தொகை டிவிடெண்டு என நிர்ணயிக்கும். பங்குதாரர்கள் குறிப்பிட்ட தேதியில் இந்தத் தொகையைப் பெறுவார்கள்.

குறிப்பிட்ட பங்குகளை வர்த்தகம் செய்யும் போது, ​​வரவிருக்கும் டிவிடெண்டு செலுத்தத்திற்கான உரிமையை எக்ஸ்-டிவிடெண்டு தேதி தீர்மானிக்கும்; எனவே எக்ஸ் டிவிடெண்டு தேதியன்று குறிப்பிட்ட பங்கின் மதிப்பிலிருந்து தோராயமான டிவிடெண்டு மதிப்பு கழிக்கப்படும். எக்ஸ் டிவிடெண்டுக்கு முன்பாகவே குறிப்பிட்ட பங்குகளில் வர்த்தக நிலையை எடுத்துள்ள ஒருவர், எக்ஸ் டிவிடெண்டு தேதி வரும்போது, அவர் முன்னதாக வாங்கியுள்ளாரா அல்லது விற்றுள்ளாரா என்பதைப் பொறுத்து டிவிடெண்டைப் பெறவோ அல்லது செலுத்தவோ வேண்டியிருக்கும். எக்ஸ் டிவிடெண்டு தேதியன்று அந்தக் குறிப்பிட்ட பங்கினில் வர்த்தகத்தைத் தொடங்கும் எவருக்கும் டிவிடெண்டு பெறுவதற்கு உரிமை இல்லை; அவர் டிவிடெண்டு செலுத்த வேண்டிய அவசியமுமில்லை.

குறியீட்டெண்களுக்கு டிவிடெண்டு எப்படிக் கணக்கிடப்படுகிறது?

குறியீட்டெண் என்பது பொதுவாக ஒரே சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் பல பங்குகளின் நிறையிட்ட சராசரி (weighted average) பங்கு விலையைப் பிரதிபலிக்கிறது. எனவே, இந்தப் பங்குகளில் ஒன்று டிவிடெண்டு செலுத்துவதாக அறிவித்தால், எக்ஸ் டிவிடெண்டு தேதியன்று அந்தப் பங்கின் விலையிலிருந்து டிவிடெண்டு மதிப்பு கழிக்கப்படும். மேலும் குறியீட்டெண் மதிப்பிலிருந்தும் அதே டிவிடெண்டு தொகைக்குச் சமமான நிறையிட்ட சராசரி மதிப்பும் கழிக்கப்படும்.

டோக்கனைஸ்டு குறியீட்டெண்ணின் உடைமையாளர் டிவிடெண்டுகளைப் பெறுவாரா?

டோக்கனைஸ்டு குறியீட்டெண் உடைமையாளர், தொடர்புடைய குறியீட்ட்டெண் உடைமையாளர் பெறும் அதே பொருளாதார விளைவைப் பெறுவதாகக் கூறலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், "அசல்" குறியீட்டெண் உடைமையாளர் அத்தகைய குறியீட்டெண்ணை வைத்திருப்பதற்காக அதிலிருந்து டிவிடெண்டைப் பெற்றால், தொடர்புடைய டோக்கனைஸ்டு குறியீட்டெண்ணை வைத்திருப்பவருக்கும் அதே விகிதாச்சார அளவு டோக்கன்கள் கிரிப்டோ செயற்தளமான Currency.com-ல் உள்ள கணக்கில் வரவு வைக்கப்படும்.

டோக்கனைஸ்டு சொத்தை வைத்திருப்பதன் பொருளாதார விளைவு சாதகமாகவோ, பாதகமாகவோ இருக்கலாம் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

எக்ஸ் டிவிடெண்டு தேதியன்று நீங்கள் ஒரு டோக்கனைஸ்டு குறியீட்டெண்ணின் உடைமையாளராக இருந்து, "சந்தை" என்ற பிரிவில் (பயன்முறையில்) வாங்கியிருந்தால் அல்லது கிரிப்டோ செயற்தளத்தின் "பயனீடு" பிரிவில் (பயன்முறையில்) லாங் எடுத்திருந்தால், அத்தகைய டோக்கனைஸ்டு குறியீட்ட்டெண்ணை வைத்திருப்பதன் பொருளாதார விளைவு சாதகமானதாக இருக்கலாம் - உங்கள் கணக்கில் உங்களுக்காகக் கணக்கிடப்பட்ட டோக்கன்களின் அளவு, தொடர்புடைய நிறுவனத்தால் செலுத்தப்படும் டிவிடெண்டு விகிதப்படி அதிகரிக்கக்கூடும்.

எக்ஸ் டிவிடெண்டு தேதியன்று நீங்கள் ஒரு டோக்கனைஸ்டு குறியீட்டெண்ணின் உரிமையாளராக இருந்து, கிரிப்டோசெயற்தளத்தில் "பயனீடு" பிரிவில் (பயன்முறையில்) ஷார்ட் சென்றிருந்தால், அத்தகைய டோக்கனைஸ்டு குறியீட்டெண்ணை வைத்திருப்பதன் பொருளாதார விளைவு பாதகமானதாக இருக்கலாம் - உங்கள் கணக்கில் உங்களுக்காகக் கணக்கிடப்பட்ட டோக்கன்களின் அளவு, தொடர்புடைய நிறுவனத்தால் செலுத்தப்படும் டிவிடெண்டு விகிதப்படிக் குறையக்கூடும்.

ஒரு CIS முதலில்

எங்கள் மேம்பட்ட இணைய செயற்தளமானது CIS-யின் முதல் ஒழுங்குபடுத்தப்பட்ட டோக்கனைஸ்டு சொத்துக்களுக்கான சந்தை ஆகும்.

பிணையமாக கிரிப்டோ

பிட்காயின் அல்லது எதேரியத்தைப் பயன்படுத்தி உலகளாவிய நிதிச் சந்தைகளில் வர்த்தகம் செய்யுங்கள்.

பாதுகாப்பே முதன்மையானது

பெலாரஸின் உயர் தொழில்நுட்பப் பூங்கா அங்கீகரித்த பாதுகாப்பு முன்னுரிமைப்படி, பெலாரஸ் குடியரசின் சட்டத்துக்கு இணங்க உங்கள் கையிருப்புகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கப்படுகிறது.

தொழில்நுட்ப சுட்டிக்காட்டிகள்

விலை பகுப்பாய்வுகள் மற்றும் விலை விழிப்பூட்டல்களுடன் 75 மேம்பட்ட வரைபடங்களுக்கு மேல் உள்ள சவுகரியங்களுடன் உங்கள் பொசிசன்களில் ஒரு கண் வைத்திருங்கள்.

உங்கள் முதலினத்தைக் கட்டுப்படுத்துங்கள்

நீங்கள் சம்பாதித்ததைப் பேண ஸ்டாப் பாஸ் மற்றும் இலாபமெடுப்பு ஆர்டர்களைப் பயன்படுத்துங்கள்.

உங்கள் கிரிப்டோ கையிருப்புகள் மூலம் ஒரு பன்முக முதலீட்டை அமைப்பதற்கு உலகின் முதல் ஒழுங்குபடுத்தப்பட்ட டோக்கனைஸ்டு சொத்துக்களுக்கான சந்தையைப் பயன்படுத்துங்கள். உலகளாவிய நிதிசார் முறையாவணங்களில் சிறந்த பயனீட்டுடன் இறுக்கமான பரவல்களுடன் வர்த்தகம் செய்ய பிட்காயின் அல்லது எதேரியத்தில் வைப்பு செய்யுங்கள். Currency.com உங்கள் கையிருப்புகளைப் பத்திரமாகவும் சட்டென்று எடுத்துப் பார்க்கும் விதத்திலும் வைத்திருக்கும்.