முதன்மையான கிரிப்டோ டுவிட்டர் செல்வாக்காளர்கள் யார்?

By Currency.com Research Team

பிளாக்செயின் தொடர்பான ஆழ்ந்த பார்வையைப் பகிர்வதற்கு டுவிட்டரைப் பயன்படுத்தும் கிரிப்டோ மீது செல்வாக்கு செலுத்துவோர் அதிகரித்து வருகின்றனர்

                                
டைலர் வின்க்லிவோஸ், மைக் நோவோகிராட்ஸ் போன்ற கிரிப்டோ செல்வாக்காளர்கள் கிரிப்டோ நிகழ்வுகள் மூலம் பெரியளவில் செல்வத்தைச் சேர்த்துள்ளனர் – புகழ்: Shutterstock
                                

உள்ளடக்கம்

கிரிப்டோ செல்வாக்காளர்களின் எழுச்சி

கிரிப்டோ செல்வாக்காளர்களின் எழுச்சியினால் மக்கள்தொகையில் முழுக்கவே புதிய முதலீட்டாளர்கள் கிடைத்துள்ளனர். முதலீடு செய்தல் ஓய்வூதியத் திட்டங்களிலோ அல்லது நிதித் திட்டமிடுவோரைக் கொண்ட செல்வந்தர்களுக்கானதாகவோ குறுக்கப்பட்டதாக இப்போது இல்லை. கிரிப்டோகரன்சி சந்தையிடத்தில் உள்ளே நுழைவதற்கான குறைவான செலவுகளும் அதிகளவு வருவாய்க்கான வாய்ப்பும் உலகெங்கிலும் பன்முகப்பட்ட பின்புலங்களில் இருப்போரை வர்த்தகத்தில் ஈடுபட ஊக்கப்படுத்தியுள்ளது.

தனிநபர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், முதலீடு செய்வது குறித்து எந்தளவு குறைவான அனுபவம் கொண்டிருந்தாலும் கடும் அபாயமுள்ளவற்றிலும் ஒழுங்குபடுத்தப்படாத சந்தையிலும் அவர்கள் இயங்க அனுமதிக்கப்பட்டிருப்பது விவாதத்துக்குரியதே. யதார்த்தம் என்னவென்றால் விரைவில் பணக்காரர் ஆகும் நம்பிக்கையில் மென்மேலும் மக்கள் குவிந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு சந்தைகள் குறித்தும் முதலீடு குறித்தும் குறைவாகவே தெரியுமென்பதால் எளிதில் அணுகக்கூடிய வழிகாட்டுதலைத் தேடுகிறார்கள் – இதுதான் கிரிப்டோ செல்வாக்காளர்களின் எழுச்சிக்குக் காரணம்.

வரலாற்று ரீதியாகப் பார்த்தோம்னெறால், மரபுசார் சந்தைகளில் நிதிசார் வல்லுநர்கள் வழங்கும் சிறப்புத் திறனும் சேவைகளும் சமூகத்தில் ஒரு சிறிய பகுதியினர் மட்டுமே அணுகக்கூடியதாக இருந்து வந்துள்ளது. இதற்குக் காரணம் இந்த வகை அறிவைப் பெற அதிக செலவு பிடித்தது மட்டுமின்றி UK-யில் உள்ள FCA, அமெரிக்காவில் உள்ள SEC போன்ற அமைப்புகளின் ஆணைப்படி ஏற்படுத்தப்பட்ட கடுமையான விதிமுறைகளும் தான். நிறுவனங்களும், வல்லுநர்களும் இதன்படி இணங்க வேண்டியிருந்தது. சிலர் அழைப்பது போல, “வன் மேற்கு” என்ற கிரிப்டோ ஒழுங்குபடுத்தப்படாதது. இதன் அர்த்தம் யார் வேண்டுமானாலும் -அது தனி நலனாயிருந்தாலும் சரி, கிரிப்டோ செய்திகளை, தங்கள் நிபுணத்துவத்தை அல்லது பரிந்துரைகளை வெளியிடலாம்.

கிரிப்டோகரன்சிகள் மிகப் பிரபலமானவையாகவும் மரபுவழி முதலீடுகளுக்கு மாற்று வடிவமாகவும் உள்ளதால் எல்லாவித சமூக ஊடக சேனல்களிலும் தங்கள் கச்சிதமான தளத்தைக் கண்டடைகின்றன. உலகெங்கிலும் மக்கள் தங்கள் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் அல்லது ஏன் டிக்டாககைக் (TikTok) கூடத் திறந்து அடுத்த பெரிய நாணயம் குறித்த கண்ணோட்டத்தில் முடிவின்றி ஆழ்ந்து (அவரவருக்கேற்ற பாணியில்) செல்லலாம். அந்தவகையில் கிரிப்டோகரன்சி வர்ணனையாளர்களில் பலர் குறிப்பிட்ட நாணயங்களை வைத்திருக்கக் கூடியவர்களாகவும், தங்களது அதிகரித்துவரும் பின் தொடர்வோர் மூலம் தாங்கள் விரும்பும் எந்த கிரிப்டோ செயற்திட்டத்திலும் ஆட்படுத்திக் கொள்வதை அவர்களால் அதிகரிக்கச் செய்ய முடியும். அவர்களால் நாணயங்களை மேலெழச் செய்யவும், மரபான நிதிச் சந்தைகளில் தங்கள் ஓங்கி ஒலிக்கும் குரல் மூலம் சந்தையை விருப்பப்படி கையாளவும் முடியும்.

அனுபவமில்லா முதலீட்டாளர்களாக இருக்கக்கூடியவர்களிடம் போதிக்கும் இந்த சுய-பாணி கிரிப்டோ ‘நிபுணர்களின்’ ஒழுக்கநெறியை அந்தப் பக்கம் வைத்துவிட்டுப் பார்க்கையில் இத்தகு தகவல்களுக்கான தேவை அதிகரித்து வருவது கண்கூடு. கிரிப்டோ செல்வாக்காளர்கள் விரும்பக்கூடிய முக்கிய தளங்களில் ஒன்றாக டுவிட்டர் உள்ளது. அப்படியெனில் டுவிட்டரில் முதல் பத்து கிரிப்டோ செல்வாக்காளர்கள் யார், ஏன்?

முன்னணி கிரிப்டோ டுவிட்டர் செல்வாக்காளர்கள்

கிரிப்டோ உலகில் மிகச் செல்வாக்குள்ளவர்களை அறுதியிட்டுச் சொல்வது கடினம். ஆனால் டுவிட்டரில் மிகப்பெரிய கிரிப்டோ செல்வாக்காளர்கள் என்று பார்க்கையில் விடாலிக் புடெரின் மிக உயரத்துக்கு வருகிறார்.

எதேரியம் நிறுவனரான புடெரின் அடிக்கடி, குறிப்பாக எதேரியம் பற்றி தனது ஆழ்ந்த பார்வையைப் பதிவிடுகிறார். இதில் மதிப்பாய்வுகள், கட்டுரைகள், பேட்டிகள், வர்ணனைகள் அடங்கும். புடெரினின் புதிய அறிவிப்புகளைத் தெரிந்துகொள்வதற்காக 3.3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இவரைப் பின் தொடர்கிறார்கள்.

டுவிட்டரைப் பொறுத்தவரை கிரிப்டோவின் மிக செல்வாக்குள்ள பிரபலமாக 74.1 மில்லியன் பின் தொடர்வோரைக் கொண்ட எலான் மஸ்க் இருக்கக்கூடும். Tesla மற்றும் Space X தலைமைச் செயல் அதிகாரியான இவர் கிரிப்டோ குறித்து ஏகப்பட்ட டுவிட்டுகளைக் கொடுத்துள்ளார். பிட்காயின் வைத்திருப்பவராகவும் மிகப் பிரபலமான மீம் நாணயங்கள் உட்பட பிற நாணயங்களை வழங்குபவராகவும் உள்ள மஸ்க் மீது தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த நாணயங்களின் விலைகளைத் தந்திரமாகக் கையாள்கிறார் என்ற குற்றச்சாட்டு உண்டு.

2021 மே மாதத்தில், இனி டெஸ்லா கிரிப்டோவை செலுத்துகையாக ஏற்றுக் கொள்ளாது என்று டுவீட் செய்ததும் பிட்காயினின் விலை கணிசமாகச் சரிந்தது. ஜூனில், தனது பிட்காயின் சொத்துக்களின் ஒரு பகுதியை விற்றுவிட்டதாக மறைபொருளுடன் இவர் டுவீட் செய்தபின், பிட்காயின் விலை மேலும் சரிந்தது.

இதையொட்டி டோஜ்காயின் போன்ற நாணயங்கள் குறித்து அவர் இட்ட டுவீட்டுகளில் அவற்றின் விலைகள் ஏறின. மஸ்கைச் சுற்றியுள்ள இந்தத் தனிமனித வழிபாடு கிரிப்டோ மீதான மனப்பாங்கில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

1.5 மில்லியன் பின் தொடர்வோரைக் கொண்ட அந்தோனி பாம்பிலியானோ டுவிட்டரில் சந்தேகத்துக்கிடமின்றி சிறந்த கிரிப்டோ செல்வாக்காளர்களில் ஒருவராக உள்ள இன்னொரு முக்கிய பிரபலம். இவர் துவக்க நிலையில் உள்ள இளங்குழுமங்களில் முதலீடு செய்வது, செய்திகளை, ஆழமான கருத்துக்களை, பரிந்துரைகளைப் பகிர்பவராகவும் அதேபோல் நேர்காணல்களை நடத்துபவராகவும் உள்ளார். பாம்பிலியானோவின் செல்லப் பெயர் “பாம்ப் (Pomp)”. இவர் மியாமியைச் சேர்ந்தவர். 2018ல் தொடங்கப்பட்ட மோர்கன் கிரீக் டிஜிட்டல் அசெட்ஸ் என்ற பல யுக்திகளைக் கையாளும் முதலீட்டு நிறுவனத்தின் இணை நிறுவனரும் ஆவார்.

ஒரு மில்லியன் பின் தொடர்வோரைக் கொண்ட பிரையன் ஆர்ம்ஸ்ட்ராங் பிரபல சந்தையான காயின்பேஸின் (Coinbase) இணை நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியும் ஆவார். இவரும் முன்னணி டுவிட்டர் செல்வாக்காளர்களில் ஒருவர். இவர் காயின்பேஸ் மேம்பாடுகள் குறித்தும், செய்திகள், அரசியல் அபிப்பிராயங்கள் குறித்தும் தனது சமூக ஊடகத் தளத்தில் பகிர்ந்து கொள்கிறார். Give Crypto என்ற வறியோருக்கு உதவும் மனிதநேய அமைப்பின் நிறுவனராகவும் உள்ளார். கிரிப்டோ கொண்டுவருவதாகச் சொல்லும் பொருளாதாரச் சுதந்திரத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவர்.

பின்பற்றத்தக்க மிகச்சிறந்த கிரிப்டோ ஆய்வாளர்களில் ஒருவராக சார்லி லீ இருக்கிறார். இவர் காயின்பேஸின் முன்னாள் பொறியியல் இயக்குநரும், லைட்காயினைப் படைத்தவருமாவார். கிரிப்டோ பிரிவில் லீ சிறந்த அனுபவமுடையவர். கிரிப்டோ உலகின் முக்கிய மேம்பாடுகள் குறித்த செய்திகள், பகுப்பாய்வு, அபிப்பிராயங்களைப் பகிர்ந்து கொள்கிறார். டுவிட்டரில் ஒரு மில்லியன் மக்கள் லீயைப் பின் தொடர்கிறார்கள்.

700,000 பின் தொடர்வோருக்கு மேல் கொண்ட ஆன்டிரியாஸ் அன்டோனோபோலோஸ் இன்னொரு முக்கிய கிரிப்டோ டுவிட்டர் செல்வாக்காளர். இவரது “Let’s take Bitcoin” இணைய ஒளிபரப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது. அன்டோனோபோலோஸ் பல்வேறு கிரிப்டோ பிரச்சினைகளை, குறிப்பாக பிட்காயின் குறித்து ஆழமாக விவாதிப்பவர். இவர் “Mastering Bitcoin” என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். ஒரு சராசரி நபருக்கு பிட்காயின் எப்படி இயங்குகிறது என்ற ஆழமான தொழில்நுட்ப விளக்கத்தை இப்புத்தகம் தருகிறது.

டுவிட்டரில் இன்னொரு முன்னணி கிரிப்டோ செல்வாக்காளர்களில் ஒருவராக மைக் நோவோகிராட்ஸ் உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளரான நோவோகிராட்ஸ் கேலக்ஸி இன்வெஸ்ட்மெண்ட் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. இந்நிறுவனம் முழுக்கவே கிரிப்டோ வெளியிலான முதலீட்டில் கவனம் செலுத்துகிறது. இவரது சொத்து மதிப்பு $700 மில்லியன். நோவோகிராட்ஸின் செல்வங்களில் பாதி கிரிப்டோவிலிருந்து வந்ததாகும். டுவிட்டரில் அரை மில்லியன் பின் தொடர்வோருக்கு அருகில் கொண்டிருக்கும் இவர், கிரிப்டோ தொடர்பான தலைப்புகளில் டுவீட் இடுகிறார்.

சந்தேகமின்றி கிரிப்டோ செல்வாக்காளர்கள் பட்டியலில் ரோகர் வெர்-உம் உயர்ந்த இடத்தில் இருக்கிறார். இவர் BitPay, Ripple, Purse.io, Kraken போன்ற இளங்குழுமங்களில் ஆரம்பகட்ட முதலீட்டாளர். வெர் கிட்டத்தட்ட 750,000 பின் தொடர்வோரை டுவிட்டரில் கொண்டுள்ளார். இவர் பிட்காயின் கேஷின் தீவிர ஆதரவாளர். கிரிப்டோ குறித்த அனைத்து விசயங்களையும் சமூக ஊடகத் தளங்களில் பதிவிட்டும் பகிர்ந்தும் வருகிறார்.

இறுதியாக டைலர் வின்க்லிவோஸ், இன்னொரு முக்கிய கிரிப்டோ டுவிட்டர் செல்வாக்காளர். இவர் ஜெமினி என்ற கிரிப்டோ சந்தையின் உரிமையாளரும் பிட்காயினின் ஆரம்பகட்ட முதலீட்டாளரும் ஆவார். வின்க்லிவோஸ் ஒரு மில்லியன் பின் தொடர்வோரைக் கொண்டுள்ளார். கிரிப்டோகரன்சி உலகில் மேம்பாடுகள் குறித்த தனது ஆழமான பார்வைகளையும் அபிப்பிராயங்களையும் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

இறுதி எண்ணங்கள்

கிரிப்டோ செல்வாக்காளர்களுக்கு இப்போது இருப்பதைப்போல அல்லது சந்தை எப்படி நகர்கிறது என்பதில் இந்தளவு கட்டுப்பாடில்லாத சக்தி இருக்க வேண்டுமா என்பதில் காரசாரமான விவாதம் நடந்து வரும் வேளையில், இந்த பிரபல கிரிப்டோ பிரபலங்களின் தகவல்கள் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களுக்கு முக்கிய அறிவு வளமாக உள்ளதை ஏற்கத்தான் வேண்டும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மிகச்சிறாந்த கிரிப்டோ செல்வாக்காளர் யார்?

இதற்குப் பதிலளிப்பது கடினமென்றாலும், நிச்சயம் இதில் அதிகளவு புகழ் பெற்றவர் எலான் மஸ்க். இவரது டுவீட்டுகள் குறிப்பிட்ட நாணயங்களின் விலை ஏற்ற இறக்கங்களில் வியத்தகு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக பிட்காயின் மற்றும் டோஜ்காயின்.

மிகச்சிறாந்த கிரிப்டோ ஆய்வாளர் யார்?

அந்தோணி பாம்பிலியானோ பிரபலமான கிரிப்டோ ஆய்வாளர். இவர் வெவ்வேறு நாணயங்கள் மீது விரிவான ஆழமான பார்வைகளையும் வரைபட பகுப்பாய்வுகளையும் வழங்குகிறார்.

கிரிப்டோவில் முதலீடு செய்ய இது சரியான நேரமா?

சாத்தியமுள்ளது. இது இன்னும் பிறந்தநிலையில் உள்ள ஒரு துறை. எனவே பல பகுப்பாய்வாளர்கள் இன்னும் அதிகளவு கவர்ச்சிகரமான முதலீட்டுக்கான வாய்ப்புகள் இந்த வெளிக்குள் உள்ளதாகக் கருதுகின்றனர்.

எனினும் கிரிப்டோ சந்தை அதிக மாறியல்புடையது என்பதையும் நாணயம் மற்றும் டோக்கன் விலைகள் இறங்கவும் அதேபோல் ஏறவும் கூடுமென்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் தொகைக்கு அதிகமான பணத்தை ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள்.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image