உக்ரைன் கிரிப்டோ நன்கொடை: உங்கள் கிரிப்டோக்கள் உக்ரேனியர்களுக்கு எவ்வாறு உதவ முடியும்

By Currency.com Research Team
• புதுப்பிக்கப்பட்டது

செஞ்சிலுவை மற்றும் ஐ.நா. அகதிகள் முகமை உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களிடமிருந்து நிதி திரட்டுவதற்கான வேண்டுகோள்கள்

உக்ரைன் கிரிப்டோ நன்கொடை                                 
$20 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள கிரிப்டோகரன்சி மருத்துவப் பொருட்கள் முதல் பத்திரிகைகள் வரை வழங்கி உதவுவதற்காக உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளது – புகைப்படம்: Shutterstock
                                

உள்ளடக்கம்

கிரிப்டோகரன்சி தொண்டு நன்கொடைகள், ரஷ்யாவின் படையெடுப்பைச் சமாளிக்கும் போராட்டத்தில் உக்ரைனை ஆதரிப்பதற்கான வழிகளில் ஒன்றாக மாறிவிட்டன.

செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. அகதிகள் முகமை உள்ளிட்ட நன்கறியப்பட்ட தொண்டு நிறுவனங்களிடமிருந்து நிதி திரட்டும் முயற்சிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் கிரிப்டோ நன்கொடைகள் ஒரு பிரபலமான தேர்வாக உள்ளது. ஏனெனில் உக்ரேனிய அரசாங்கத்தின் சொந்த வேண்டுகோளின் மூலம் மட்டுமே $13 மில்லியன் திரட்டப்பட்டுள்ளது.

உக்ரைனில் நிலைமை மோசமடைந்ததால், பிற கிரிப்டோ தொண்டு தளங்களும் தோன்றியுள்ளன. இதில் இராணுவத்திற்கு ஆதரவளிக்கும் பிட்காயின் நன்கொடைகள் முதல் உக்ரேனிய பத்திரிகைக்கு உதவும் விற்கப்பட்ட NFT சேகரிப்பு வரை இருக்கின்றன.

எந்தவொரு முதலீட்டையும் போலவே, நன்கொடையாளர்கள் உக்ரைனுக்கான கிரிப்டோ நன்கொடையை வழங்குவதற்கு முன் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில் மோசடிகளும் நடக்கின்றன. பிளாக்செயின் தரவு நிறுவனமான எலிப்டிக், இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்களை ஏற்கெனவே  அடையாளம் கண்டுள்ளது. மோசடியாக கிரிப்டோ நிதி திரட்டுவோரையும் பட்டியலிட்டுள்ளது.

இருப்பினும், சில நிறுவனங்கள் தங்கள் கிரிப்டோ நிதி திரட்டும் முயற்சிகளுக்காகப் பாராட்டப்படுகின்றன.

அரசாங்கக் கிளை

அதிகாரப்பூர்வ உக்ரைன் கிரிப்டோ நன்கொடை தளத்தை நாடுபவர்களுக்கு, அரசாங்கம் சனிக்கிழமையன்று "கிரிப்டோகரன்சி நன்கொடைகளை ஏற்றுக்கொள்கிறது" என்று ட்வீட் செய்தது. இது ஈதர் மற்றும் பிட்காயின் பெறும் இரண்டு வாலெட் முகவரிகளை வழங்கியது.

உக்ரைனின் துணைப் பிரதமரும், டிஜிட்டல் மாற்றுகை அமைச்சருமான மைக்கைலோ ஃபெடோரோவ், பயனர்கள் USDT டோக்கன்களை அனுப்ப TRON முகவரியை ட்வீட் செய்துள்ளார். TRON DAOவின் நிறுவனர் ஜஸ்டின் சன், பின்னர் உக்ரைன் தூதரகம் மூலம் முகவரியைச் சரிபார்த்தார்.

முதலில், எதேரியம் இணை நிறுவனரான விட்டலிக் புட்டரின், அனைத்து முகவரிகளிலும் சந்தேகம் கொண்டிருந்தார். ஆனால் அவர் பின்னர், "அது முறையானது என்று பல ஆதாரங்கள் மூலம் உறுதிசெய்யப்பட்டது" என்று ட்வீட் செய்தார். இருப்பினும், கிரிப்டோ பரிவர்த்தனைகள் பெரும்பாலும் மீட்க முடியாதவை என்பதால் கவனமாக இருக்குமாறு புட்டரின் தொடர்ந்து அவரைப் பின்தொடர்பவர்களை எச்சரித்தார்.

பிப்ரவரி 28 வரை மூன்று வாலெட்டுகளுக்கும் $13.6 மில்லியன் அனுப்பப்பட்டுள்ளதாக எலிப்டிக் தெரிவித்துள்ளது. இந்த கிரிப்டோ நன்கொடைகள், "எங்களால் முடிந்த அளவுக்கு ரஷ்ய வீரர்களை அழிக்கப்" பயன்படுத்தப்படும் என்று அரசாங்கம் ஸ்கை நியூஸிடம் கூறியுள்ளது.

கம் பேக் அலைவ் (Come Back Alive)

2014ல் நிறுவப்பட்ட, கம் பேக் அலைவ் என்பது உக்ரேனிய அரசு சாரா அமைப்பு. இது ராணுவத்திற்கு உபகரணங்கள், பயிற்சி மற்றும் எதிர்த்துப் போராடுதலை பிரச்சாரம் மூலம் ஆதரவளிக்கிறது. "தொடர்ச்சியாக ஏழாவது ஆண்டாக, இந்த நிதி உக்ரேனிய இராணுவத்திற்கு மிக முக்கியமான விஷயத்தை வழங்குகிறது - ஒரு தந்திரோபாய நன்மை" என்று அதன் வலைத்தளம் கூறியது.

NGO, 2018ல் கிரிப்டோகரன்சிகளை ஏற்கத் தொடங்கியது. 2021ன் இரண்டாம் பாதியில் கிட்டத்தட்ட $200,000 பெற்றது என்று எலிப்டிக் தெரிவித்துள்ளது. Blockchair இன் தரவு அதன் நன்கொடைப் பக்கத்தில் வழங்கப்பட்ட பிட்காயின் முகவரி மூலம் $7.3 மில்லியன் மதிப்புள்ள BTC ஐப் பெற்றுள்ளது என்பதைக் காட்டுகிறது.

இதில் பெரும்பாலானவை கடந்த வாரத்தில் நன்கொடையாக வழங்கப்பட்டதை எலிப்டிக் கண்டறிந்துள்ளது. ஒரு அநாமதேய நன்கொடையாளர் $3 மில்லியன் மதிப்புள்ள BTC ஐ தொண்டு நிறுவனத்திற்கு பரிசளித்துள்ளார் என்றும் அது குறிப்பிட்டது.

இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு தனிநபர்கள் மட்டும் பரிசளிக்கவில்லை. இந்தத் தொண்டு நிறுவனத்திற்கு ஆதரவாக பல கிரிப்டோ மற்றும் NFT திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று UkraineDAO ஆகும்.

UkraineDAO

CoinDesk முதல் Bloomberg வரை, UkraineDAO தனக்கென ஒரு பெயரை உருவாக்கத் தொடங்கியுள்ளது. திட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான ரஷ்ய பங்க் இசைக்குழு புஸ்ஸி ரியாட், அவர்களின் ஆத்திரமூட்டும், விளாடிமிர் புடினை வெளிப்படையாக விமர்சிக்கும் பாடல் வரிகளைக் கொண்ட மரபுமீறல் இசை நிகழ்ச்சிகளுக்குப் பெயர் பெற்றவர்கள்.

கம் பேக் அலைவ் மற்றும் ப்ரோலிஸ்கா ஆகிய இரண்டு தொண்டு நிறுவனங்களுக்காகப் பரவலாக்கப்பட்ட அமைப்பு பணம் திரட்டுகிறது. ப்ரோலிஸ்கா, பிரிவினைவாத பிராந்தியங்களான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகளில் உள்ள பாதிக்கப்படக்கூடிய பொதுமக்களுக்கு உதவும் ஒரு NGO ஆகும்.

UkraineDAO இணையதளம் இந்தக் காரணத்துக்காக நன்கொடை அளிக்க இரண்டு வழிகளை பட்டியலிடுகிறது. நன்கொடையாளர்கள் ஈதரை அதன் வாலெட் முகவரிக்கு நேரடியாக அனுப்பலாம் அல்லது அவர்கள் "பார்ட்டி ஏலத்தில்" பங்கேற்கலாம். ஏலம் என்பது உக்ரேனியக் கொடி NFTக்கான கூட்டு முயற்சியாகும். இதில் ஒவ்வொரு பங்களிப்பாளரும் LOVE டோக்கனைப் பெறுவார்கள். இதை எழுதும் நேரத்தில், ஏலத் தொகுப்பில் $3.5 மில்லியன் இருந்தது.

"இந்த டோக்கன்களுக்கு எந்தப் பயனும் இல்லை, மதிப்பும் இல்லை; ஆனால் ஒரு உன்னதமான காரணத்திற்கு உங்கள் பங்களிப்பிற்கான ஒரு அழகான சான்றாகவும், அதை நினைவூட்டுவதாகவும் இருக்கும் " என்று வலைத்தளம் கூறுகிறது.

Reli3f

உக்ரேனிய காரணத்துக்காக நன்கொடை வழங்கும் மற்றொரு NFT திட்டம் Reli3f ஆகும். இது 41 NFT மற்றும் Web3 கலைஞர்களால் நிறுவப்பட்ட "மனிதாபிமான உதவி முயற்சி" என்று தன்னை விவரிக்கிறது. அவர்களில் மாஸ்டர்கார்டில் தயாரிப்பு மேலாளராக இருக்கும் சாத்விக் சேதி மற்றும் முன்பு டைம் இதழில் பணிபுரிந்த NFT கலைஞர் ஆண்ட்ரூ வாங் ஆகியோர் அடங்குவர்.

NFTகளை அறிமுகப்படுத்திய 30 வினாடிகளுக்குப் பிறகு, Reli3f $1 மில்லியன் நிதி திரட்டியது. அத்துடன் NFT சேகரிப்பை முழுவதுமாக விற்றது. இருப்பினும், நன்கொடையாளர்கள் பங்கேற்க இன்னும் வழிகள் உள்ளன. இரண்டாம் கட்ட விற்பனையின் அனைத்து ராயல்டிகளும் அவர்கள் தேர்ந்தெடுத்த காரணங்களுக்குப் பயன்படுத்தப்படும்.

Reli3f, திரட்டப்பட்ட நிதியில் பாதியை கம் பேக் ஆலைவ், லோக்கல் உக்ரைன் மீடியா மற்றும் ஹாஸ்பிடலர்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது. லோக்கல் உக்ரைன் மீடியாவிற்கான வாலெட் முகவரியானது கியேவ் இன்டிபென்டன்ட் பதிப்பகத்தால் அமைக்கப்பட்டது. இதன் நோக்கம் ஊடகங்கள் இடம்பெயரவும் அவர்களின் செயல்பாடுகளைத் தொடர்வதற்கு உதவுவதாகும். இதற்கிடையில், ஹாஸ்பிடலர்ஸ் ஒரு மருத்துவ பட்டாலியனுக்கான உபகரணங்கள் மற்றும் வாகனங்களுக்காக கூட்டு நிதி திரட்டலைச் செய்கிறது.  

உக்ரைன் கிரிப்டோ நன்கொடையின் எஞ்சிய பகுதிகள் தற்போதைக்கு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. ஏனெனில் நிலைமை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. அத்துடன் எதற்கு முன்னுரிமை அளிப்பது என்பது விரைவாக மாறலாம் என்பதை Reli3f குழு அங்கீகரித்துள்ளது. அது பதிந்துள்ள டுவீட்: "உதாரணமாக, மருத்துவப் பொருட்களுக்கான திடீரென்ற, அதிகப்படியான தேவை இருக்கலாம். அதற்கு நாங்கள் தயாராக இருக்க விரும்புகிறோம்."

இத்திட்டத்தில் குறைந்தபட்சம் மூன்று மோசடி பதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன என்பதால் நன்கொடையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று OpenSea எச்சரிக்கிறது. நன்கொடை அளிப்பதற்குமுன், அதிகாரப்பூர்வ கணக்கை நீங்கள் கண்டுபிடித்துள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அன்செயின் பண்டு (Unchain Fund)

அன்செயின் பண்டு உக்ரைனை ஆதரிக்க விரைவாக அமைக்கப்பட்ட கிரிப்டோ திட்டங்களின் போக்கைப் பின்பற்றுகிறது. உணவு, புலம்பெயர்ந்தோர் ஆதரவு, தகவல் தொடர்பு, மருத்துவம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் ஐந்து தொண்டு நிறுவனங்களுக்கு இந்த அமைப்பு நிதியை அனுப்புகிறது. இந்தத் திட்டம் ஆயுதங்களுக்கான நிதிச் சேகரிப்பு அல்ல என்று குறிப்பிட்டுள்ளது.

அன்செயின் பண்டினால் ஆதரிக்கப்படும் நிறுவனங்கள்:

  • Voices of Children
  • Vostok SOS
  • Project CURE
  • International Medical Corps
  • People in need

உக்ரைன் கிரிப்டோ நன்கொடைகள் அனைத்தும் பலரால் கட்டுப்படுத்தப்படும் மல்டிசிக் (மல்டிசிக்னேச்சர்) வாலெட்டுக்கு அனுப்பப்படுகின்றன. ஒன்பது வாலெட் கட்டுப்பாட்டாளர்களில், நியர்ப்ரோட்டோகால் இணை நிறுவனர் இல்லியா பொலோசுகின் மற்றும் ஹார்மனி ப்ரோட்டோகாலின் சக உறுப்பினர் நிக் வாசிலிச் ஆகியோரும் அடங்குவர்.

இதை எழுதும் நேரத்தில், அன்செயின் பண்டு ஐந்து வெவ்வேறு பிளாக்செயின்கள் மூலம் $1.5 மில்லியனுக்கு மேல் திரட்டியுள்ளது. பினான்ஸ் ஸ்மார்ட் செயின், எதேரியம், அவலாஞ்சி, ஹார்மனி, பாலிகன், நியர் மற்றும் செலோ ஆகியவை இதில் அடங்கும்.

அன்செயின் பண்டு மேலும் நன்கொடை வாய்ப்புகளைத் தொடர்ந்து வழங்கத் திட்டமிட்டுள்ளது. ஒரு NFT செயல்திட்டமானது கலைஞர்களைக் கொண்டு அதன் சங்கிலியினுடைய கருப்பொருளை வரையச் செய்வதில் ஈடுபட்டுள்ளதாக TheDefiant தெரிவிக்கிறது.

நிதி திரட்டலின் எதிர்காலம்

சமீபத்திய ஆண்டுகளில் அதிகளவில் கிரிப்டோ ஏற்றுக்கொள்ளப்படுவதால், இது திறமையான மற்றும் வெற்றிகரமான நிதி திரட்டும் முறைக்கு வழிவகுத்தது. எல்லைக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளாத விரைவான பரிவர்த்தனைகள் உக்ரைனுக்கு நன்கொடைகளை அனுப்புவதற்கு சாதகமான வழியாக மாறியுள்ளன.

மொத்தத்தில், மேலே பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்களால் $24.3 மில்லியன் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி திரட்டப்பட்டுள்ளது. கிரிப்டோவை ஏற்கும் இன்னும் அதிகமான நிதி திரட்டும் தளங்களும் உள்ளன. ஆனால் அனைத்தையும் சரிபார்ப்பது எளிதானது அல்ல.

துரதிருஷ்டவசமாக, அறக்கட்டளை மோசடி ஒன்றும் புதிதல்ல. இப்போது கிரிப்டோ நன்கொடையாளர்கள் உக்ரைன் நெருக்கடிக்கு உதவுவதற்காக வழங்கும் நிதிகளை மோசடி செய்வதிலும் இறங்கியுள்ளனர். முறையான கிரிப்டோ NGOக்கள் இருக்கும்போது, மோசடியான வாலெட் முகவரிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உக்ரைன் பிட்காயினை ஏற்றுக்கொள்கிறதா?

உக்ரேனிய அரசாங்கம் பிட்காயின், ஈதர் மற்றும் USDT நன்கொடைகளைத் தொடரும் நெருக்கடிக்குப் பயன்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்கிறது.

உக்ரைனுக்கு கிரிப்டோ நன்கொடை வழங்குவது எப்படி?

உக்ரேனிய காரணங்களுக்காக கிரிப்டோ நன்கொடைகளை ஏற்கும் பல நிறுவனங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, UkraineDAO பாதிக்கப்படக்கூடிய பொதுமக்கள் மற்றும் இராணுவத்தை ஆதரிக்கிறது. இருப்பினும், பல கிரிப்டோ தொண்டு மோசடிகள் வெளிப்பட்டிருப்பதால், நன்கொடை அளிப்பவர்கள் எப்போதும் தங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image