வணிகரின் கையகப்படுத்தலைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் செலுத்துகைகளுக்குத் தேவையான தகவல்கள்
1. “Currency Com Bel” LLC விசா மற்றும் மாஸ்டர்கார்டு சர்வதேச செலுத்துகை அமைப்புகளின் விதிகளுக்கிணங்க வெளியிடப்பட்ட வங்கி செலுத்துகை அட்டைகளைப் பயன்படுத்தும் பயனர்களிடமிருந்து நிதிகளை ஏற்கிறது. அதேபோல BELKART செலுத்துகை அமைப்பையும் ஏற்கிறது. நீங்கள் கைபேசி செலுத்துகை சேவைகளான Apple Pay, Samsung Pay போன்றவற்றின் மூலமும் செலுத்தலாம்.
2. “Currency Com Bel” LLC மூலம் உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்ட டிஜிட்டல் கையொப்பங்களின் (டோக்கன்கள்) (இனி - டோக்கன்கள்) குணாம்சங்கள் பற்றித தகவல்களை வெள்ளையறிக்கையில் காணலாம். “Currency Com Bel” LLC மூலம் உருவாக்கப்படாத கிரிப்டோகரன்சி டோக்கன்கள் பற்றிய தகவல்கள் வாடிக்கையாளர்களால் இருக்கக்கூடிய வளங்களைப் பயன்படுத்தி சொந்தமாகக் கண்டறியப்படுகிறது. “Currency Com Bel” LLC வழங்கும் sஏவைகள் பற்றிய தகவல்களை இங்கு காணலாம் here
3. டோக்கன்களைக் கையகப்படுத்துதல் விடுவித்தல் சார்ந்த அனைத்து பரிவர்த்தனைகளும் கிரிப்டோதளத்தில் (வர்த்தகத் தளம்) வாடிக்கையாளர்களால் அனுப்பப்படும் டோக்கன்களைக் கையகப்படுத்தல் அல்லது உரிமைமாற்றலுக்காக செயலியை அடிப்படையாகக் கொண்ட மின்னணு வடிவில் இணையம் மூலம் நிகழ்நேரத்தில் நிறைவேற்றப்படுகிறது.
"Currency.com".
ஆர்டர் செய்வது, அத்துடன் குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கான வழிகாட்டுதல் போன்ற பிற நடைமுறைகள் (இதற்கான இணைப்பு விதிமுறைகள், வெள்ளைத்தாள்-ல் விளக்கப்பட்டுள்ளன, டோக்கன்கள் உரிமை மாற்றத்துக்கான பொதுவான நிபந்தனைகள்) வழங்கப்படவில்லை. பொருட்கள், வேலைகள் (சேவைகள்) போன்றவற்றுக்காக தொகையை திரும்பச் செலுத்துவதற்கான நடைமுறைகள் நிறுவப்படவில்லை. "Currency.com" கிரிப்டோ தளத்தில் (வர்த்தகத் தளம்) டோக்கன்களின் விலைகள் வைக்கப்பட்டுள்ளன.
செலுத்துகையின்போது பிழைகள் நேர்ந்தால், support@currency.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.
4. இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களை இணையம் வாயிலாக பெறப்படும் செலுத்துகைச் சான்றுகளை சேமிக்கப் பரிந்துரைக்கிறோம்.
5. “Currency Com Bel” LLC-யின் ஊதியம், அதேபோல் மூன்றாம் தரப்பினரின் கமிஷன்களையும் விதிக்கப்படும் கட்டணங்களையும் கமிஷன்களும் கட்டணங்களும் என்ற பிரிவில் காணலாம்.
6. கிரிப்டோதளம் (வர்த்தகத் தளம்) மற்றும் இணையதளத்தில் டோக்கன்கள் பயனர்களிடம் கைமாறுவது (உரிமை மாற்றம்) பயன்பாட்டு விதிகளுக்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்றன.
7. பின்வருவனவற்றை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறோம்:
• உங்களிடமிருந்து நாங்கள் பெறும் அனைத்துத் தரவுகளும் தனியுரிமைக் கொள்கைக்கு இணங்க சேமிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன
• இணையதளத்தில் செலுத்துகையானது வன்பொருள், மென்பொருள் பிணைப்பின் மூலம் செலுத்துகைச் சேவைகளை வழங்குவோரின் (நிறைவேற்றுவோர்) மூலம் மேற்கொள்ளப்படுகிறது;
• எங்கள் இணையதளத்தில் ஒரு சிறப்புப் படிவத்தில் உங்கள் வங்கி விபரங்களை நீங்கள் உள்ளிடுகிறீர்கள். தகவல்களை பத்திரமாக அனுப்புவதற்கு உத்தரவாதமளிக்கும் எங்கள் செலுத்துகைச் சேவை வழங்குநோருக்கு (நிறைவேற்றுவோர்) அனுப்புகையில் PCI DSS சான்றிதழ் கொண்ட சூழலை நாங்கள் பயன்படுத்துகிறோம்;
• ஒரு வங்கி அட்டை மூலம் செலுத்தும்போது, உங்கள் வங்கி அட்டை விபரங்களின் தொடரும் பதிவுகளுக்காக உறுதிப்படுத்தும் பக்கங்களுக்கு நீங்கள் திருப்பிவிடப்படுவீர்கள்;
• உறுதிப்படுத்தும் பக்கங்களுக்கான அணுகல் SSL நெறிமுறையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது.
8. செலுத்துகை பரிவர்த்தனை நடைமுறை விளக்கம்:
8.1. வங்கி அட்டை வைத்திருப்பவர் இணையதளத்துக்குச் சென்று டோக்கன்களுக்கான செலுத்துகை ஆர்டரைச் செய்து ஆர்டரின் விதிமுறைகளை உறுதிசெய்து (டோக்கன்களின் பெயர், தொகை செலுத்தும் முறை, செலுத்தும் தொகை) வங்கி அட்டையை செலுத்துகை முறையாகத் தேர்வு செய்கிறார்.
8.2. இணையத்தில் வங்கி அட்டையைப் பயன்படுத்தி டோக்கன்களுக்கு தொகை செலுத்துவது 3DSecure தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றன. அட்டையானது 3DSecure தொழில்நுட்பத்தை அல்லது BELKART அட்டைதாரர்களுக்கான இணைய கடவுச்சொல்லை ஏற்கிறதெனில், பாதுகாப்பு குறியீட்டை உள்ளிடுவதற்காக அட்டையை வெளியிட்ட வங்கியின் பக்கத்துக்கு நீங்கள் திருப்பிவிடப்படுவீர்கள். Apple Pay மூலம் தொகை செலுத்தும்போது வாலெட் செயலியிலிருந்து ஓர் அட்டையைத் தேர்வுசெய்து வாலெட் செயலியில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் முறையைப் பொறுத்து ஒரு கடவுச்சொல்லையோ அல்லது வேறு உறுதிப்படுத்தும் முறையையோ பயன்படுத்தவும். Samsung Pay மூலம் ஆர்டர் செய்யும்போது, “Pay with Samsung Pay" மீது தட்டி உங்கள் சாம்சங் கணக்கினை உள்ளிட்டு உங்கள் பல்திறன் பேசியில் கொள்முதலை உறுதிப்படுத்தவும் (fingerprint, iris, or Samsung Pay PIN).
8.3. இணையதளம் உங்கள் ஆர்டரை செயல்படுத்தி உங்கள் ஆர்டரைப் பதிவு செய்வதற்கு மின்னணு செலுத்துகை அமைப்பில் ஒரு கோரிக்கையை உருவாக்குகிறது. இணையதளக் கோரிக்கையில், ஆர்டர் குறித்த தகவல் - ஆர்டர் விபரம், தொகை, செலுத்துகை வெற்றியடைதல் மற்றும் தோல்வியடைதலின்போது எந்த வங்கி அட்டைதாரருக்கு திருப்பப்பட வேண்டும் என்பதற்கான திருப்புகை முகவரி போன்றவை அனுப்பப்படும். ஆர்டர் வெற்றிகரமாக பதியப்பட்டால், இணையதளத்தில் மின்னணு செலுத்துகை அமைப்பு ஒரு பிரத்யேக ஆர்டர் எண்ணைத் திருப்பியனுப்பும்.
8.4. இணையதளமானது அட்டைதாரரை மின்னணு செலுத்துகை அமைப்பின் செலுத்துகை பக்கத்துக்கு திருப்பிவிடுகிறது. அதில் செலுத்துகை அளவுருக்களைக் காட்டப்படும். வங்கி அட்டை விபரங்களை உள்ளிடவும் எடுத்துரைக்கப்படுகிறது. வங்கி அட்டைதாரர் தொகை செலுத்துவதற்கான அட்டை வகையைத் தேர்ந்தெடுத்து வங்கி அட்டையின் வரைகூறுகள் பற்றிய தகவல்களை உள்ளிடுகிறார்:
• வங்கி அட்டை வகை;
• வங்கி அட்டை எண்;
• வங்கி அட்டையின் காலாவதி தேதி;
• வங்கி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் மற்றும் குடும்பப் பெயர்;
• CVC2 அல்லது CVV2 எண்கள்;
• ஒரு சிறப்பு கடவுச்சொல்லை உள்ளிட்டு ஆர்டருக்கான தொகை செலுத்துகையை உறுதிசெய்தல்.
8.5. செலுத்துகை சேவை வழங்குநர் உள்ளிடப்பட்ட வங்கி அட்டை வரைகூறுகளின் வடிவத்தின் சரியான தன்மையை உறுதிப்படுத்தி வங்கி அட்டைதாரரரை உறுதிப்படுத்துவதற்கான கூடுதல் நடைமுறைகளை சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப (3DSecure) மேற்கொண்டு அந்தச் செயல்பாட்டை அங்கீகரிப்பதற்கான கோரிக்கையை வங்கிக்கு அனுப்புகிறார்.
8.6. வங்கியானது பதிவுக்கேற்ப ஒரு பரிவர்த்தனையை மேற்கொள்ள இணையதளத்துக்கு உள்ள உரிமையை சோதித்து சம்பந்தப்பட்ட சர்வதேச செலுத்துகை அமைப்புகளினால் உருவாக்கப்பட்ட நடைமுறைகளுக்கு இனங்க பரிவர்த்தனைகளை அங்கீகரிக்கிறது.
8.7. ஓர் எதிர்மறையான உறுதிப்படுத்தல் முடிவு பெறப்படும்போது, வங்கி மின்னணு செலுத்துகை அமைப்புக்கு ஒரு மறுப்பு அறிவிப்பை அனுப்புகிறது. இதையொட்டி, இணையதளத்துக்கும் அட்டைதாரருக்கும் மறுப்புக்கான காரணத்தைச் சுட்டிக்காட்டி இந்தத் தகவலை அனுப்புகிறது.
8.8. நேர்மறையான உறுதிப்படுத்தல் முடிவு பெறுவதன்பேரில், வங்கி மின்னணு செலுத்துகை அமைப்புக்கு பரிவர்த்தனையை அங்கீகாரத்துக்கான உறுதிப்படுத்தலை அனுப்புகிறது. மின்னணு செலுத்துகை அமைப்பானது அதேவேளையில் அங்கீகாரத்துக்கான நேர்மறை முடிவு உறுதிப்படுத்தலை இணையதளத்துக்கும் அட்டைதாரருக்கும் அனுப்புகிறது.
8.9. அங்கீகாரத்துக்கான நேர்மறை முடிவின் உறுதிப்படுத்தலைப் பெற்றபின், இணையதளம் அட்டைதாரரிடம் டோக்கன்களை வசூலிக்கிறது.
9. அட்டைதாரரின் குடியுரிமையைப் பொறுத்து இணையதளத்துக்கு வருகை தருதல் மற்றும் / அல்லது அட்டைதாரர் பொருட்களை வாங்குதல் (வேலை, சேவைகள்) சட்டட்த்ஹுக்குப் புறம்பானதாகக் கருதப்படலாம். அத்தகைய நடவடிக்கைகளுக்கு, சம்பந்தப்பட்ட நாட்டின் சட்டத்தில் வழங்கப்பட்டபடி, அட்டைதாரரே பொறுப்பாவார். இந்த இணைப்பில்உள்ள ஆவணங்களை நீங்கள் சேமிக்க பரிந்துரைக்கிறோம்.