Currency.com நிறுவனர் குறித்து
விக்டர் ப்ரொகோபென்யா தொழில்நுட்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்களைத் தொடங்கி நடத்திவருபவர். இவர் இலண்டனை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய நிதிநிறுவனமான VP Capital-ன் நிறுவனர் ஆவார். VP Capital மூலமாக, Currency.com-ன் 100% பங்குகளில் உரிமைகொண்டுள்ளார்.
Currency.com என்பது ஆன்லைன் வர்த்தகத்தில் தனித்திறன் கொண்டதும் நிதியை மக்கள்மயப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடியதுமான விருதுபெற்ற அதிநவீன நிதித் தொழில்நுட்பத்தைக் கொண்ட செயற்தளமாகும். இந்த செயற்தளம் பல்வேறு கிரிப்டோகரன்சி இராஜ்ஜியங்களையும், வழக்கமான நிதியையும் டோக்கனைஸ்டு சந்தையில் வர்த்தகமாகும் சொத்துக்கள் வாயிலாக இணைத்து, முன்னணி உலகளாவிய பிராண்டுகள் மற்றும் கமாடிட்டிகளின் சிக்கலான வர்த்தகத்துக்கு உதவுகிறது.
இது முழுக்கவே ஒழுங்குபடுத்தியது; பாதுகாப்பானது; வலுவான அபாய மேலாண்மை கட்டுப்பாடுகளைக் கொண்டது; வெளிப்படையான விலையிடல் மற்றும் விரிவான நிதிசார் கல்வியை வழங்குகிறது. இது Robinhood போன்ற ஆன்லைன் நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களின் பாதையைப் பின்பற்றுகிறது. 2020-ல், நிதித் தொழில்நுட்ப செயற்தளம் வாடிக்கையாளர்கள் அளவில் 374 சதவீத வளர்ச்சியை அறிவித்து ஐரோப்பாவின் வேகமாக வளரும் கிரிப்டோகரன்சி சந்தைகளுக்கான செயற்தளங்களில் ஒன்றாக ஆகியுள்ளது.
விக்டர் ப்ரொகோபென்யாவின் VP Capital தொகுமுதலீட்டில் கணினி தொலைநோக்கு மற்றும் செயற்கை அறிவு எல்லைகளுக்குள் பல்வேறு தொழில்நுட்பத் தொழில்களும் அதேபோல பஸ்ஸிவ் தொகுமுதலீட்டில் ரியல் எஸ்டேட் மற்றும் பல்வேறு பிற உயர் தொழில்நுட்ப நிறுவனங்களும் உள்ளடங்குகின்றன.
பிற புதுமையான தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் தொழில்களும் விக்டரால் நிறுவப்பட்டு வழிநடத்தப்படுவனவற்றில் exp(capital) என்ற ஒரு தனியார் சந்தை உருவாக்க நிறுவனமும் அடங்கும். இந்நிறுவனம் கணிதத்தையும் தொழில்நுட்பத் திறன்களையும் பயன்படுத்தி உலகளாவிய மின்னணுச் சந்தைகளால் உருவாக்கப்படும் வாய்ப்புகளை சாதகமாக்கிக் கொள்கிறது.
Viaden Media நிறுவனத்தை விக்டர் ப்ரொகோபென்யா 2001ல் நிறுவினார். முதலில் இந்நிறுவனம் மென்பொருள் உருவாக்கத்தில் மட்டும் கவனம் செலுத்தியது. பின்னர் விரிவாக்கம் பெற்று பல நிலப்பரப்புக்களை இலக்காகக் கொண்டு கைபேசி செயலிகளை உருவாக்கத் தொடங்கியது. Viaden Mediaவின் சில தயாரிப்புகளில் All-in Fitness, Smart Alarm Clock மற்றும் Yoga.com போன்றவை அடங்கும். இவை 40 நாடுகளில் மிக உயர்வான தரமதிப்பைப் பெற்றுள்ளன. இந்நிறுவனமானது கடைசியில் Sport.com மற்றும் Skywind Group என இருநிவனங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர் Playtech PLC என்ற நிறுவனத்திடம் விற்கப்பட்டது.
விக்டர் ப்ரொகோபென்யா தொலைநோக்குப் பார்வையும் புதுமையான தொழில்நுட்பங்களில் அதிக ஆர்வமும் உடையவர். VP Capital மூலமாக ஆற்றல்மிக்க தொழில்நுட்பங்களையும் சிறந்த தயாரிப்புகளையும், உருவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் நிறுவனர்கள் மற்றும் மேலாண்மைக் குழுக்களுடன் அவர் பணியாற்றுகிறார். இந்நிறுவனமானது அதிநவீன தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆதரவு அளிப்பதோடு அவற்றுக்கு நிதியளிப்பதிலும் அதிக வளர்ச்சிக்கு சாத்தியமுள்ள புதுமையான தொழில்நுட்பங்களிலும் கவனம் செலுத்துகிறது.
பயிற்சிபெற்ற வழக்கறிஞரும் கணினி அறிவியலாளருமான விக்டர், அதிநவீனம் மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களில் ஆர்வம் கொண்டவர். இவர் நார்த்ஈஸ்டர்ன் யுனிவர்சிடியில் நிதியில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். ஸ்விஸ் பிசினஸ் ஸ்கூலில் தொழில் நிர்வாகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அத்துடன் இணையச் சந்தைப்படுத்தலில் முதுகலைப் பட்டமும், கணினி அறிவியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
தனது தொழில்சார் சாதனைகளுடன் கூடவே விக்டர் ப்ரொகோபென்யா தானியங்கிக் கார்கள், கிரிப்டோகரன்சிகள், பிற வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன உலகில் அவற்றின் பயன்பாடுகள் போன்ற சமீபத்திய தொழில்நுட்பப் புதுமைகள் குறித்தும் நன்கு அறிந்துள்ளார்.
VP Capital குறித்து
VP Capital என்பது தொழில்நுட்ப தொழில்முனைவரும் முதலீட்டாளருமான விக்டர் ப்ரொகோபென்யாவின் முதன்மையான முதலீட்டு நிறுவனமாகும். VP Capital-ன் தொகுமுதலீட்டில் Currency.com, Capital.com, Banuba and Facemetrics போன்ற நிதித்தொழில்நுட்பம் மற்றும் பிளாக்செயின் முதல் செயற்கைநுண்ணறிவு மற்றும் எந்திரக் கற்றல் வரை கவனம் செலுத்தக்கூடியவை அடங்கும்.
VP Capital தனது முதலீட்டைக் குவிக்கும் தொழில்நுட்பப் பிரிவுகள்– செயற்கை நுண்ணறிவு, ஆக்மென்ட்டட் ரியாலிட்டி, கணினி நோக்கு, நிதித்தொழில்நுட்பம் மற்றும் பிளாக்செயின் - கலவையான மிகக் குறிப்பிட்ட அரிதான திறன்களும் அதிகளவில் செயலாக்க ஆற்றலும் தேவைப்படுபவை.
2012 முதல், VP Capital அதிநவீன தொழில்நுட்ப நிறுவனங்களின் நிறுவனர்களுடன் இணைந்து பணியாற்றி அவற்றை ஆதரித்து வருவதுடன் சக்திவாய்ந்த தொழில்நுட்பங்களையும் சிறந்த தயாரிப்புகளையும் கட்டமைத்துள்ளது.
ஒரு முதலீட்டாளராக VP Capital தான் ஆதரவளிக்கும் ஒவ்வொரு தொழிலிலும் மிகுந்த ஈடுபாட்டைத் தருவதுடன், வளர்ச்சி, மதிப்பீடுகள், அளவுகோல் மற்றும் விற்பனைகளில் சிறந்த ஊட்டத்தை அளிப்பதற்கான நடைமுறை அணுகுமுறையை உறுதிசெய்வதற்காக இயக்குநர் குழுவில் இருக்கையையும் எடுத்துக் கொள்கிறது.
VP Capital தனது நடப்பு முதலீடுகளின் வளர்ச்சியிலும், புதுமையான தொழில்நுட்ப செயற்திட்டங்களிலும் கவனம் செலுத்துவதுடன் அடுத்த புதிய தொழில்நுட்பப் போக்குகளையும் வணிக வாய்ப்புகளையும் அடையாளம் காண்பதிலும் எப்போதும் திறந்த மனதுடன் உள்ளது.