Currency.com எவ்வாறு செயல்படுகிறது

1.
வர்த்தகர்கள் கிரிப்டோ அல்லது ரொக்கத்துடன் வருகிறார்கள்

2.
அவர்கள் கிரிப்டோ அல்லது டோக்கனைஸ்டு சொத்துக்களை வாங்குகிறார்கள் - வர்த்தகத்தை பயனீட்டின் மூலம் 1-100 வரை அதிகரிக்கலாம்

3.
Currency.com அவர்களின் ஆர்டர்களை மற்ற வாடிக்கையாளர்களின் ஆர்டர்களுடன் பொருத்துகிறது மற்றும் Capital.com, LMAX டிஜிட்டல் மூலம் இடர் காப்பு செய்து அபாயத்தைக் குறைக்கிறது

மற்றும் பிற சந்தைகளான பினான்ஸ், பிட்ஸ்டாம்ப், க்ராக்கின், NASDAQ, NYSE மற்றும் கெயின் கேப்பிட்டல்

4.
வர்த்தகர்கள் டோக்கனைஸ்டு சொத்துக்களை விற்கிறார்கள். கிரிப்டோ அல்லது ரொக்கத்தைத் திரும்பப் பெறுகிறார்கள்

Currency.com விலையிடல் மாதிரி

விலைகள் எங்கிருந்து வருகின்றன?
பணப்புழக்க வழங்குநர்கள் Currency.com-ல் நிறைவேற்றத்தக்க வாங்குதல் மற்றும் விற்பனை விலைகளை ஓடச் செய்கின்றனர்

Currency.com பணப்புழக்கம்

வாடிக்கையாளர்களுக்கு மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த பரவல்கள் மற்றும் உயர்தர ஆர்டர் செயல்படுத்தலை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். வாடிக்கையாளர்கள் மற்றும் பணப்புழக்க வழங்குநர்களிடமிருந்து நாங்கள் பெறும் போட்டித்தன்மை வாய்ந்த ஆர்டரின் விளைவாக விலை உருவாகிறது.
வழக்கமான வழங்கல்/தேவை விலையிடல் மாதிரி தவிர, எங்கள் விலைகள் நம்பகமான LPகளின் பட்டியலிலிருந்து கூடுதல் பணப்புழக்கத்துடன் ஆதரிக்கப்படுகின்றன. அவை: LMAX டிஜிட்டல், Capital.com, பினான்ஸ், பிட்ஸ்டாம்ப், க்ராக்கின், NASDAQ, NYSE மற்றும் கெயின் கேப்பிட்டல்.
விரைவான Currency.com பொருத்தம் மற்றும் விலையிடல் இயந்திரம் உங்கள் ஆர்டர்கள் கோரப்பட்ட அல்லது சிறந்த விலையில் உடனடியாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது.

வர்த்தகம் செய்யத் தயாரா?

3 நிமிடங்களில் நேரடி கணக்கைத் தொடங்குங்கள்

தகிடுதத்தம் இல்லாத வர்த்தகச் சூழல்

சரியான பொருத்தம்

Currency.com உடனடியாக ஆர்டர் புத்தகத்தில் உள்ள சிறந்த ஏல விலை, கேட்கும் விலை மற்றும் அளவினை வழங்குகிறது. அனைத்து ஆர்டர்களும் எங்கள் சேவையகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
உங்கள் ஆர்டர் மற்றொரு வர்த்தகரின் ஆர்டருடன் பொருந்தவில்லை என்றால், அது கூடுதல் பணப்புழக்கத்தால் நிரப்பப்படும். Currency.com சிறந்த விலையில் பணப்புழக்கம் வழங்குனருடன் உங்கள் வர்த்தகத்தைப் பாதுகாக்கிறது மற்றும் கமிஷன்களிலிருந்து மட்டுமே இலாபம் ஈட்டுகிறது. அனைத்து Currency.com ஆர்டர்களிலும் வர்த்தகர் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. உங்கள் நுழைவு ஆர்டர்கள், நிறுத்தங்கள் மற்றும் வரம்புகள் கண்ணுக்குத் தெரியாதவை.

உங்கள் ஆர்டர்களை நிரப்ப போதுமான பணப்புழக்கம்

செயல்பாட்டின் தரம் சந்தையில் எத்தனை ஆட்டக்காரர்கள் உள்ளனர் என்பதைப் பொறுத்து இனி இருக்காது. ஒவ்வொரு கோரிக்கையும் திருப்திகரமாக இருப்பதை உறுதிசெய்ய, ஆர்டர் புத்தகத்தில் எப்போதும் கூடுதல் பணப்புழக்கத்தைச் சேர்க்கிறோம்.

பங்குகள், கமாடிட்டிகள், இன்டெக்ஸ்கள் மற்றும் ஃபோரக்ஸ் உட்பட - 2000-க்கும் மேற்பட்ட டோக்கனைஸ்டு சொத்துக்களை நீங்கள் எப்போதும் நியாயமான விலையில் மற்றும் மிகவும் போட்டித்தன்மையுடன் கூடிய பரவல்கள் மூலம் வாங்கி விற்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.

நம்பகமான சேவையகங்கள் மற்றும் மேம்பட்ட பொருத்து இயந்திரம்

LD4 Equinix சேவையகங்கள் மூலம் புறநிலைப் பாதுகாப்பு

உலகின் முதன்மையான தொழில்முறை சேவையக அளிப்பு, UK-ஐ தளமாகக் கொண்ட LD4 ஈக்வினிக்ஸ், வர்த்தகம் செயல்படுத்தும் நேரம் தோராயமாக 200 மில்லி விநாடிகள் என்பதை உறுதி செய்கிறது.

ஆயுதமேந்திய காவலர்கள் மற்றும் காணொளி கண்காணிப்பு மூலம் எங்கள் சேவையகங்கள் மிகவும் பாதுகாப்பான பூட்டிய தனியார் கூண்டில் வைக்கப்பட்டுள்ளன. Dow Jones, Nasdaq மற்றும் லண்டன், ஃபிராங்ஃபர்ட் பங்குச் சந்தைகள் உட்பட உலகின் பல முன்னணி சந்தைகளில் LD4 ஈக்வினிக்ஸ் பயன்படுத்தப்படுகிறது.

சிறந்த ஆர்டர் பொருத்தம் மற்றும் செயல்படுத்தும் இயந்திரம்

எங்கள் மைய ஆர்டர்-பொருத்தம் மற்றும் செயல்படுத்தும் இயந்திரம் ஒரு வினாடிக்கு 50 மில்லியன் பரிவர்த்தனைகளைக் கையாள முடியும். இது வாடிக்கையாளர் ஆர்டரை வழங்குவதிலும் செயல்படுத்துவதிலும் ஒருபோதும் இடையூறு ஏற்படாது என்பதை உறுதி செய்கிறது.

Currency.com மூலம் உருவாக்கப்பட்ட வர்த்தக-பொருந்தும் இயந்திரம் அதை போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது. இயங்குதளம் நிலையானது. பிளாக்செயினின் வேகத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதுடன் வர்த்தகத்தின் அளவைப் பொருட்படுத்தாமல் போதுமான வேகம் கொண்டது.

வர்த்தகம் செய்யத் தயாரா?

3 நிமிடங்களில் நேரடி கணக்கைத் தொடங்குங்கள்

பாதுகாப்பில் சமரசம் செய்யாமல் நொடிக்கு ஆயிரக்கணக்கான ஆர்டர்கள் செயல்படுத்தப்படுகின்றன

Currency.com கிரிப்டோ வர்த்தக தளத்தில் நாங்கள் என்ன செய்கிறோம், எப்படிச் செய்கிறோம் என்பது பற்றி 100% வெளிப்படையாக இருக்கிறோம். இந்த செயற்பாட்டுத் தளம் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான ஆர்டர்களைக் கையாள முடியும். இது பல பரிமாண அளவீடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது - அதிக தேவையுடைய வர்த்தகர்கள் வினாடிக்கு டன் கணக்கில் ஆர்டர்களை உருவாக்கினாலும், அல்லது ஏராளமான கிரிப்டோகரன்ஸிகள் அல்லது டோக்கன்களை ஆதரிக்க வேண்டிய தேவை இருந்தாலும் இந்தத் தளம் அதனைக் கையாளும். இவை அனைத்தையும் நாங்கள் மிக உயர்ந்த இடர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு தரத்தில் செய்கிறோம்.

iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image