வில்லியம்ஸ் பகுவியல் வர்த்தக சுட்டிக்காட்டியை படித்துப் பயன்படுத்துவது எப்படி

By Currency.com Research Team

வில்லியம்ஸ் பகுவியல் சுட்டிக்காட்டிக்கான எங்கள் வழிகாட்டியைப் படித்து வர்த்தக சமிக்ஞைகளையும் விழிப்பூட்டல்களையும் தீர்மானிப்பதில் அவை எப்படி உதவுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்

வில்லியம் பகுவியல்                                 

வில்லியம்ஸ் பகுவியல் வர்த்தக சுட்டிக்காட்டி என்றால் என்ன?

வில்லியம்ஸ் பகுவியல் அல்லது பகுவியல்கள் என்பது ஒரு டெக்னிகல் அனலிசிஸ் சுட்டிக்காட்டியாகும். இதை பிரபல வர்த்தகரான பில் வில்லியம்ஸ் என்பவர் தனது ‘Trding Chaos' என்ற புத்தகத்தில் அறிமுகப்படுத்தினார். இதை அவர் கேயாஸ் தியரி மற்றும் வர்த்தக உளவியலின் அடிப்படையில் உருவாக்கினார். இந்த சுட்டிக்காட்டி விலையின் போக்கானது திரும்பத் திரும்ப நடைபெறும் ஒன்றாகவும் பகுவியல்கள் அத்தகு திரும்ப நிகழும் போக்குகள் பற்றிய ஆழமான பார்வையை வழங்கும் என்ற யோசனையை மையமாகக் கொண்டது.

இந்த சுட்டிக்காட்டி வழக்கமாக ஐந்து பார்களைக் கொண்ட மாதிரியைப் போலிருக்கும். இது சாத்தியமான தலைகீழ் மாற்றப் புள்ளிகளை அடையாளம் காணவும் விலை நகர்வுகளின் திசையை அறியவும் பயன்படுத்தப்படுகிறது.

பகுவியல் சுட்டிக்காட்டியை எப்படிப் பயன்படுத்துவது

பகுவியல் உருவாக்கத்தைக் கண்டறிவதற்கு அல்லது வில்லியம்ஸ் பகுவியல் முறையைப் பயன்படுத்துவதற்கு, அடுத்தடுத்த ஐந்து விலை பார்களைப் பார்க்க வேண்டும். அதில் மூன்றாவது (அல்லது நடுவில் உள்ளது) அதிகபட்ச உயரத்தை அல்லது மிகக்குறைந்த தாழ்நிலையைக் குறிக்கிறது.

பகுவியல் வர்த்தக சுட்டிக்காட்டியின் அம்புக்குறியானது ஐந்து பார்களில் மூன்றாவது மெழுகுதிரிக்கு மேல் அல்லது கீழ் அவை இருப்பதிலேயே அதிகமாகவோ அல்லது இருப்பதிலேயே குறைவானதாகவோ இருந்தால் மட்டுமே தோன்றும் என்பதை மனதில் கொள்ளவும். மேலும், வில்லியம்ஸ் கூற்றுப்படி ஒரு பகுவியலை உருவாக்க ஐந்து பார்களையும் நீங்கள் ஒருங்கிணைக்க வேண்டியதில்லை.

உங்கள் வர்த்தக செயற்தளத்தில், வில்லியம்ஸ் பகுவியல் வர்த்தக சுட்டிக்காட்டியானது வரைபடத்தில் விலையின் பார்களுக்கு மேலேயோ அல்லது கீழேயோ அம்புகளாகக் காட்டப்படும்.

மெழுகுதிரிக்கு மேலேயுள்ள அம்பு வாங்கு பகுவியல் என்றும் மெழுகுதிரிக்குக் கீழே இருப்பது விற்பனை அம்பு என்றும் அழைக்கப்படுகிறது.

முதலாவது வாங்கு அம்பு என்று அழைக்கப்படுகிறது. காரணம் அது ஒரு தடையாகச் செயல்படுகிறது. அதாவது இந்த மட்டத்தைத் தாண்டி விலை நகரும்போது வாங்கும் சமிக்ஞை நிகழ்கிறது.

விற்பனை பகுவியல் தாங்கு நிலையாகச் செயல்படுகிறது. விலை இந்த பகுவியலுக்கும் கீழே நகரும்போது விற்பனை வாய்ப்புக்கான சாத்தியத்தைச் சுட்டிக் காட்டுகிறது. அதிகளவு நேர வரம்புகளில் பகுவியல் சுட்டிக்காட்டியால் மேலும் நம்பகமான விழிப்பூட்டல்களை வழங்கமுடியும் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் அதில் குறைவான சமிக்ஞைகளே இருக்கும்.

பகுவியல்களை வர்த்தகத்தில் எப்படிப் பயன்படுத்துவது

சிலர் பகுவியல் வர்த்தகச் சுட்டிக்காட்டி இன்றைய வர்த்தகத்துக்குப் பொருந்தாதது என்று கருதினாலும், வில்லியம்ஸ் பகுவியல் சூத்திரமானது இப்போதும் அதிகளவில் வர்த்தகர்களால் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் வர்த்தக யுக்தியை வரையறுப்பதற்கான கையடக்கக் கருவியாக சுட்டிக்காட்டி உள்ளது. அதைப் பின்வருமாறு பயன்படுத்தலாம்:

 • சாத்தியமுள்ள ஸ்டாப்-லாஸ் நிலைகளைக் கண்டறிவதற்கு.
 • அவை தாங்குநிலை மற்றும் தடை நிலைகளாகச் செயல்பட முடியும்.
 • உச்சங்களையும் தாழ்நிலைகளையும் வரையறுப்பதற்கு.
 • சாத்தியமுள்ள நுழைவுப் புள்ளிகளுக்கான சமிக்ஞை தர.
 • ஃபைபோனச்சி திரும்பிவரும் நிலைகளுடன் இணைந்து பயன்படுத்தலாம்.

அவற்றை உன்னிப்பாகப் பார்க்கும்முன், ஒரு முக்கிய அம்சத்தைத் தெளிவுபடுத்திக் கொள்வோம். வர்த்தகர்களுக்கு மேல் கீழ் பகுவியல்களின் பெயர்கள் சற்று குழப்பத்தை ஏற்படுத்தலாம். இதற்குக் காரணம் கீழ் பகுவியலானது ஏறுமுகமாகவும் மேல் பகுவியல் இறங்குமுகமாகவும் பார்க்கப்படுவதுதான்.

அடுத்த படத்தில் இறங்குமுகம் மற்றும் ஏறுமுக பகுநிலைக்கான உதாரணத்தைப் பார்ப்போம். ஓர் இறங்குமுக பகுநிலையானது நடுவிலுள்ள விலை பார் இடது மற்றும் வலதுபுறமுள்ள மற்ற இரு பார்களைக் காட்டிலும் அதிகபட்ச உச்சத்தில் இருக்கும்போது காட்டப்படும்.

வில்லியம்ஸ் பகுவியல் வர்த்தக சுட்டிக்காட்டி
வில்லியம்ஸ் பகுவியல் வர்த்தக சுட்டிக்காட்டி – நன்றி: Currency.com

இது ஓர் இறங்குமுக பகுவியல் எனப்படுகிறது. காரணம் பகுவியல் புள்ளிகள் உயர்ந்திருந்தாலும், அதன் தொடர்ச்சி விலை இறக்கத்தில் காணப்படுகிறது. இதன் மறுபட்சத்தில், ஏறுமுக பகுவியலானது நடுவிலுள்ள பார் இருபுறங்களிலுமுள்ள மற்ற இரு பார்களைக் காட்டிலும் மிகவும் குறைவான தாழ்நிலையைக் கொண்டிருக்கையில் கண்டறியப்படுகிறது.

நீங்கள் பொதுவாக கிட்டத்தட்ட கச்சிதமான பகுவியல்களின் அமைப்பைத் தேட வேண்டும் (மேலே காட்டப்பட்டுள்ளதைப் போன்றது). ஏனெனில் பகுவியல்கள் வெவ்வேறு வடிவங்களில் இருபுறமுமுள்ள பார்களின் வெவ்வேறு நீளங்களில் தோன்றக்கூடும். பகுவியல் அமைப்பு அதன் உள்ளார்ந்த சொத்தைப் பொறுத்தும் அமையும்.

இப்போது, பகுவியல்களின் பயன்பாடு குறித்த கேள்விக்குத் திரும்புவோம். இதன் ஒரு சாத்தியம் ஸ்டாப்-லாஸ் நிலைகளைத் தீர்மானிப்பது. உங்கள் கடைசி பகுவியலின் உச்சியில் ஒரு குறுகிய பொசிசனுக்குள் நுழையும்போது உங்கள் ஸ்டாப் லாஸ் நிலையை அமைக்கிறீர்கள். இதற்கு மாறாக, லாங் செல்லும்போது கடைசி பகுவியலின் அடியில் ஸ்டாப் லாஸ் அமைக்கிறீர்கள்.

மேலும், வில்லியம்ஸ் பகுவியல் வர்த்தக யுக்தியில் ஃபைபோனாச்சி திரும்பச் செல்லும் நிலைகளையும் உள்ளடக்கலாம். பகுவியல்களைப் பிரயோகிப்பதால் தவறாக வழிநடத்தும் சாத்தியமுள்ள நிலைகளை நிராகரிக்கிறீர்கள். காரணம் பகுவியல் தலைகீழ் மாற்றம் நிகழும் நிலைகளில் மட்டுமே நீங்கள் செயல்படுகிறீர்கள்.

முந்தைய பகுவியலுடன் ஒப்பிட்டு தற்போதைய பகுவியலின் நிலையைப் பார்த்து சாத்தியமுள்ள முறிவுகளைத் தீர்மானிக்கவும் நீங்கள் பகுவியல்களைப் பயன்படுத்த முடியும். விலையானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகள் முந்தைய பகுவியலுக்கு மேலோ அல்லது கீழோ நகரும்போது ஒரு சாத்தியமான முறிவுக்கான சமிக்ஞையாக இது உள்ளது என்று வில்லியம்ஸ் குறிப்பிடுகிறார்.

முந்தைய மேல்நோக்கிய பகுவியலுக்கும் மேல் விலை அதிகரிக்கும்போது வாங்குவதற்கான முறிவு தோன்றுகிறது.

முந்தைய கீழ்நோக்கிய பகுவியலுக்கும் கீழே விலை நகர்ந்தால் விற்பனை முறிவு நிகழ்கிறது.

வில்லியம்ஸ் அல்லிகேடர் என்பது மற்றொரு வர்த்தக சுட்டிக்காட்டி. இது பகுவியல்களுடன் காணப்படும் சமிக்ஞைகளைத் தெளிவுபடுத்த உதவுகிறது. வர்த்தகர்கள் தங்களது வில்லியம்ஸ் பகுவியல் வர்த்தக யுக்தியின் ஒரு பகுதியாக இதைச் சேர்த்து ஒரு குறிப்பிட்ட அல்லிகேடர் கோட்டோடு தொடர்புடைய பகுவியல்களின் நிலைகளின் அடிப்படையில் வாங்க அல்லது விற்பதற்கான சமிக்ஞைகளைத் தேடுகிறார்கள். இது வேலை செய்யும் விதம் இதோ:

 • வாங்கு பகுவியலானது சிவப்புக் கோட்டுக்கு மேல் இருக்கும்போது (அல்லிகேடரின் பற்கள்) வாங்கும் ஆர்டரைச் செய்கிறீர்கள்.
 • விற்பனை பகுவியலானது சிவப்புக் கோட்டுக்குக் கீழ் இருக்கும்போது (அல்லிகேடரின் பற்கள்) விற்பனை ஆர்டரைச் செய்கிறீர்கள்.

நீங்களே பார்ப்பதுபோல், வில்லியம்ஸ் பகுவியல் வர்த்தக சுட்டிக்காட்டியை பல வழிகளில் பிரயோகிக்கலாம். எனினும், உங்கள் தனிப்பட்ட விருப்பங்களையும் வர்த்தக யுக்திகளையும் பொறுத்து நீங்கள் பயன்படுத்தும் விதம் அமையும்.  பகுவியல் வர்த்தக சுட்டிக்காட்டி பிற கருவிகளுடன் இணைத்துப் பயன்படுத்த மறக்காதீர்கள். மேலும் பகுவியல்களை வெவ்வேறு கால வரையறைகளுடன் அமைக்கவும், நீண்டகால வரையறை பகுவியல்கள் குறுகியகால சமிக்ஞைகளுக்கான வடிகட்டியாகச் செயல்படச் செய்து குறுகிய கால கட்டங்களில் உருவாகும் வாய்ப்புகளைத் தேடவும் மறக்காதீர்கள்.

பகுவியல் வர்த்தக சுட்டிக்காட்டியின் பலன்கள்

 • பகுவியல் வர்த்தக சுட்டிக்காட்டிக்குப் பின்னாலுள்ள கருத்தை வர்த்தகர் உள்வாங்கிக் கொண்டதும், அது பயன்படுத்த எளிதானதாகவும் வாய்ப்புள்ள வர்த்தக சமிக்ஞைகளையும் பிற வகையான விழிப்பூட்டல்களையும் அடையாளம் காணவும் முடியும்.
 • உச்சங்கள் மற்றும் தாழ்நிலைகள் தவிர்த்து, ஒரு பகுவியல் சுட்டிக்காட்டியானது வாங்கவும் விற்பதற்குமான வாய்ப்புள்ள தாங்குநிலை மற்றும் தடை நிலையையும் காட்டுகிறது.
 • போக்குகளைத் தீர்மானிக்கையில் பகுவியல்களை கூடுதல் சுட்டிக்காட்டியாகவும் நீங்கள் பயன்படுத்தலாம்.
 • சாத்தியமுள்ள முறிவுகளை அடையாளம் காணுதல்.

வில்லியம்ஸ் பகுவியல் சுட்டிக்காட்டியின் குறைபாடுகள்

 • பகுவியல் சுட்டிக்காட்டி இரண்டு பார்கள் வரையிலும் பின் தங்கியிருக்கலாம். ஏனெனில் ஒரு பகுவியலை நிறைவுசெய்ய குறைந்தது இரு மூடிய பார்கள் தேவை. இதன் அர்த்தம் ஒரு சமிக்ஞையை இது தரும்போது, விலையானது சமிக்ஞையுடன் ஒப்பிட வேறொரு நிலையில் இருக்கக்கூடும்.
 • சந்தைப் போக்கின்போது பகுவியல் வர்த்தகம் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சந்தை பக்கவாட்டில் நகரும்போது சுட்டிக்காட்டியைப் பயன்படுத்துவதை நீங்கள் தவிர்க்க வேண்டும்.
 • பகுவியல்கள் உருப்பெருவதை வர்த்தகர்கள் கவனமாகப் பார்க்க வேண்டும். அவற்றில் சில தவறாக வழிநடத்தும் சமிக்ஞைகளைத் தரக்கூடும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

வில்லியம்ஸ் பகுவியல் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

இந்த சுட்டிக்காட்டி வழக்கமாக ஐந்து பார்களைக் கொண்ட மாதிரியைப் போலிருக்கும். இது சாத்தியமான தலைகீழ் மாற்றப் புள்ளிகளை அடையாளம் காணவும் விலை நகர்வுகளின் திசையை அறியவும் பயன்படுத்தப்படுகிறது. பகுவியல் உருவாக்கத்தைக் கண்டறிவதற்கு அல்லது வில்லியம்ஸ் பகுவியல் முறையைப் பயன்படுத்துவதற்கு, அடுத்தடுத்த ஐந்து விலை பார்களைப் பார்க்க வேண்டும். அதில் மூன்றாவது (அல்லது நடுவில் உள்ளது) அதிகபட்ச உயரத்தை அல்லது மிகக்குறைந்த தாழ்நிலையைக் குறிக்கிறது.  பகுவியல் வர்த்தக சுட்டிக்காட்டியின் அம்புக்குறியானது ஐந்து பார்களில் மூன்றாவது மெழுகுதிரிக்கு மேல் அல்லது கீழ் அவை இருப்பதிலேயே அதிகமாகவோ அல்லது இருப்பதிலேயே குறைவானதாகவோ இருந்தால் மட்டுமே தோன்றும்.

வில்லியம்ஸ் பகுவியல் ஒரு பின்தங்கிய சுட்டிக்காட்டியா?

பகுவியல் சுட்டிக்காட்டி இரண்டு பார்கள் வரையிலும் பின் தங்கியிருக்கலாம். ஏனெனில் ஒரு பகுவியலை நிறைவுசெய்ய குறைந்தது இரு மூடிய பார்கள் தேவை. இதன் அர்த்தம் ஒரு சமிக்ஞையை இது தரும்போது, விலையானது சமிக்ஞையுடன் ஒப்பிட வேறொரு நிலையில் இருக்கக்கூடும்.

வில்லியம்ஸ் பகுவியல் நல்லதொரு சுட்டிக்காட்டியா?

சிலர் பகுவியல் வர்த்தகச் சுட்டிக்காட்டி இன்றைய சந்தைகளுக்குப் பொருந்தாதது என்று கருதினாலும், வில்லியம்ஸ் பகுவியல் சூத்திரமானது இப்போதும் அதிகளவில் வர்த்தகர்களால் பயன்படுத்தப்படுகிறது. சுட்டிக்காட்டியானது ஸ்டாப் லாஸ் நிலைகளின் சாத்தியங்களைக் கண்டறிவதன் மூலமும் தாங்குநிலையாகவும் தடை நிலையாகவும் செயல்படுவதன் மூலமும் உங்கள் வர்த்தக யுக்தியை வரையறுப்பதற்கான கையடக்கக் கருவியாக இருக்கக் கூடும்.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image