வேவ்ஸ் விலைக் கணிப்பு: WAVES டோக்கனுக்கான பேரலைகள்

By Currency.com Research Team

வேவ்ஸ் பிளாக்செயின் நெறிமுறை மேம்படுத்தப்பட உள்ளது. WAVES கிரிப்டோகரன்சியில் அடுத்து என்ன?

வேவ்ஸ் விலைக் கணிப்பு                                 
வேவ்ஸுக்கு பெரிய ஆதாயம் இருக்குமா அல்லது சிற்றலை தானா? – புகைப்படம்: Shutterstock
                                

உள்ளடக்கம்

2016 துவக்கத்தில் வேவ்ஸ் செயல்பாட்டுக்கு வந்தது. இது நன்கு நிறுவப்பட்டு, திறந்த-மூல பிளாக்செயின் செயற்தளமாக மையமில்லா நிதி (DeFi) நெறிமுறைகளிலும் அதைப்போன்ற கேமிங் செயற்தளங்களிலும் பிரபலமானதாக உள்ளது. இதன் சொந்த கிரிப்டோகரன்சி WAVES செயற்தளத்துக்கு அடிகோலாக உள்ளது. இது கட்டணங்களையும் மிக முக்கியமாக ஸ்டேக்கிங் மூலம் வலைத்தொடர்பைப் பாதுகாக்கவும் பயன்படுகிறது.

2022ல் 2.0 தரமேம்பாட்டை வேவ்ஸ் அறிவித்துள்ளது. இது பிளாக்செயின் செயற்தளப் பயன்பாட்டை விரிவுபடுத்துவதுடன் கருத்தொற்றுமை இயங்குமுறையையும் புதுப்பிக்கும். வேவ் (WAVES) என்றால் என்ன? வேவ்ஸ் நாணய விலைக் கணிப்பு இலக்குகள் என்ன? 

வேவ்ஸ் பிளாக்செயின்

வேவ்ஸின் பிளாக்செயின் பங்குச்சான்று (PoS) கருத்தொற்றுமை மாதிரி வகையில் இயங்குகிறது. உறுதிப்படுத்தும் முனையங்களில் 71% சுழற்சியிலுள்ள WAVES கவனத்தை ஈர்க்கும்படி ஸ்டேக் செய்யப்பட்டுள்ளது. தினசரி பரிவர்த்தனை 100,000க்கு மேல் என்றும் இவை வலையமைப்பிலுள்ள 250 சரிபார்ப்பிகளால் பாதுகாக்கப்படுவதாக வேவ்ஸ் குறிப்பிடுகிறது. இது ஒரு நொடிக்கு 1,000 பரிவர்த்தனைகளுக்கு மேல் செயல் வீதத்தைக் கொண்டுள்ளது. ஒரு முனையத்தை இயக்கக் குறைந்தது 1000 WAVES ($8,700) ஸ்டேக் தேவை.

வேவ்ஸ் பிளாக்செயினில் கட்டமைக்கப்பட்ட பிரபல DeFi செயற்தளங்களில் நியூட்ரினோவின் ஸ்டேபிள்காயின், swop.fi தானியங்கி பணம் உருவாக்கி, வேவ்ஸின் சொந்த மையமில்லா சந்தை போன்றவை அடங்கும். மொத்தத்தில் $926 மில்லியன் மதிப்பு அனைத்து DeFi நெறிமுறைகளிலும் முடங்கியுள்ளது. NFT கேம்ஸ்களும் சந்தையிடங்களும் நெறிமுறைப் பட்டியல் அம்சங்களில் உள்ளன.

வேவ்ஸ் 2.0, practical-proof-of-stake-sharding (PPoSS) என்றழைக்கப்படும் ஒரு புதிய கருத்தொற்றுமை முறையை அறிமுகப்படுத்தவுள்ளது. வேவ்ஸ் 2.0 எதேரியம் மெய்நிகர் எந்திரத்துடன் இணங்கக்கூடியது. இதனால் எதேரியம் அடிப்படையிலான நெறிமுறை வேவ்ஸுக்கு மாற முடியும்.

தி வேவ்ஸ் அசோசியேஷன் DAO

ஒரு மையமில்லா தன்னாட்சி அமைப்பாக (DAO) இயங்கிவரும் தி வேவ்ஸ் அசோசியேஷன் இலாப நோக்கில்லாத அமைப்பாகும். ஆராய்ச்சி-மேம்பாடு, மானியங்கள் மற்றும் கல்விசார் முயற்சிகளில் இது கவனம் செலுத்துகிறது.

மானியங்கள் DAO மூலமாக முன்மொழியப்பட்டு வேவ்ஸ் அசோசியஷனில் உள்ள அனைத்து உறுப்பினர்களாலும் வாக்களிக்கப்படும். தி வேவ்ஸ் அசோசியேஷன் DAO நுழைவதற்கான அதிகத் தடையைக் கொண்டுள்ளது. பல DAOகள் மிகச்சிறிய டோக்கன்தாரருக்காகத் திறக்கப்படுகையில் வேவ்ஸில் தனிப்பட்ட உறுப்பினர் நிலைக்கு 100 WAVES அல்லது $872 செலவாகும். இதன் இரண்டு மடங்கு விலைக்கு நிறுவனங்களும் இணையலாம்.

வேவ்ஸ் அசோசியேஷனுக்கு பெர்லினைச் சேர்ந்த ரஷிய தொழில்நுட்பத் தொழில் முனைவோர்களான சாஷா இவானோவ், பிராம் நாக்டெகல்ஸ், சாண்டர் டி மூஜ் ஆகியோரைக் கொண்ட நிர்வாகக் குழு உள்ளது. இந்த அசோசியேஷன், “நாங்கள் வேவ்ஸை கட்டுப்படுத்தவோ இயக்கவோ அல்லது நடத்தவோ இல்லை” என்று குறிப்பிடுகிறது. எனினும் விரிவான வேவ்ஸ் செயற்தளத்தின் நிறுவனர் இவானோவ்.

WAVES டோக்கன் பொருளாதாரம்

WAVES என்பது முழுக்கவே கைமாறத் தக்க கிரிப்டோகரன்சி. தற்போது 107.6 மில்லியன் புழக்கத்தில் உள்ளது. நடப்பு வர்த்தக விலை $17.97. சந்தை மூலதன மதிப்பு $1.9 பில்லியன். சமீபத்திய கணக்கீட்டின்படி 24 மணிநேர வர்த்தகத்தில் இந்த நாணயத்தின் அதிகபட்ச வர்த்தக அளவு $1.4 பில்லியன்.

ஆரம்பகட்ட நாணய வெளியிடும் (ICO) போக்கின் முன்னோடியாக வேவ்ஸ் இருந்தது. இதன் ICO 2016 ஏப்ரலில் ஏற்படுத்தப்பட்டது. 2016 ஜூனில் $16 மில்லியனுக்கு மேல் நிதி திரட்டியபின் நிதியளிப்புச் சுற்று முடிவடைந்தது. துவக்கத்தில் 100 மில்லியன் WAVES வெளியிடப்பட்டன. அதில் 85% விற்பனைக்கும் 9% மேம்பாட்டுக்குழுவுக்கும் ஒதுக்கப்பட்டன. எஞ்சிய 6% துவக்ககட்ட ஆதரவாளர்கள், யுக்திசார் கூட்டாளிகள், பிழை கண்டுபிடிப்புத் திட்டத்துக்கு விநியோகிக்கப்பட்டது.

WAVES-ன் முதன்மையான மையப்படுத்திய சந்தையாக பினான்ஸ் உள்ளது. கைமாறும் தன்மையும் Bypit, FTX, Kraken மற்றும் பலவற்றில் வழங்கப்படுகிறது. வேவ்ஸின் சொந்த மையமில்லா சந்தை பயனரால் ஏற்படுத்தப்படும் கைமாற்றத்தக்க தொகுப்புகளை ஆதரிக்கிறது. இதில் பயனர்கள் தொகுப்புகளில் பங்களிப்பு செய்வதன் மூலம் 4% வருடாந்திர பலன் வெகுமதிகளைப் பெறமுடியும்.

WAVES: சமீபத்திய விலைச் செயல்பாடு

2021 மே 4ல் WAVES புதிய உச்ச விலையான $41.33ஐ எட்டியது. தொடர்ந்த மாதங்களில் நீடித்த சரிவைச் சந்தித்து பின் அக்டோபரில் $32 என்ற அடையாளத்தைத் தாண்டியது. அதன்பின் பரவலான கிரிப்டோகரன்சி சந்தையில் நிலவிய மந்தநிலையால் தொடர்ந்து இறங்குமுகமாக இருந்தது.

WAVES-ன் சமீபத்திய வர்த்தக மதிப்பு $8.70. இது 2016 ICOவுக்குப் பின் 6.5 மடங்கு இலாபத்தைக் குறிக்கிறது. இப்போது வேவ்ஸ் கிரிப்டோ விலைக் கணிப்பைப் பார்க்கலாம்.

அலை அறிக்கை: முன்னறிவிப்பாளர்கள் என்ன நினைக்கிறார்கள்?

Wallet Investor-ன் வேவ்ஸ் விலைக் கணிப்பு நியாயமான அளவில் நேர்மறையாக உள்ளது. இதன் 12 மாத விலைக் கணிப்பாக $22.4 உள்ளது. இது 157% ஆதாயத்தைக் குறிக்கிறது. தளத்தின் 2025க்கான சராசரி விலை $58.3. அந்த ஆண்டு இறுதியில் இதன் பலன் 570%.

Gov.Capital-ன் சற்று மாற்றமில்லாத வேவ்ஸ் விலைக் கணிப்பைத் தருகிறது. 2022ன் சராசரி விலை $15.60 என்றும் ஐந்தாண்டு இலக்காக $105.20 என்றும் சொல்கிறது.

PricePrediction-ன் 2030க்கான வேவ்ஸ் விலைக் கணிப்பு $234.40. இன்று வாங்கும் ஒருவருக்கு 27 மடங்கு பலன் கிடைக்குமென்கிறது. அருகிலுள்ள விலை இலக்குகளில் பெரிய மாற்றமில்லை. 2022ன் விலை இலக்கு $12.27 என்றும் 2025க்கு $35.85 என்றும் சொல்கிறது.

DigitalCoinPrice இதனினும் மாறுதலில்லாத கணிப்பைத் தருகிறது. 2025ன் வேவ்ஸ் விலைக்கணிப்பு $18.64. 2030ல் $40.13 ஆக விலையேறும் என்கிறது. 26 அளவீடுகளில் பதிமூன்று விற்கலாம் என்றும் 10 நடுநிலையாகவும் காட்டுகின்றன. மூன்று அளவீடுகள் மட்டுமே இன்று WAVES-ஐ வாங்கப் பரிந்துரைக்கின்றன. 

வேவ்ஸ் விலைக் கணிப்பு இலக்குகள் தானியங்கி நடைமுறைப்படி ஏற்படுத்தப்படுபவை என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள். இவை ஒரு வழிகாட்டியாகப் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் முதலீடு செய்யும் முன் எப்போதும் விரிவான ஆராய்ச்சியையும் செயல்திட்ட பகுப்பாய்வையும் மேற்கொள்வதை உறுதிப்படுத்துங்கள்.

FAQs

வேவ்ஸ் முழுக்கவே விடுவிக்கப்பட்ட கிரிப்டோகரன்சியாகும். புழக்கத்தில் 107,575,408 நாணயங்கள் உள்ளன.

வேவ்ஸ் ஒரு நல்ல முதலீடாக இருக்கலாம். Currency.com இதன் செயல்திட்டத்தின் மீது விரிவான மதிப்பாய்வையும் அதன் நீண்டகால வணிக வாய்ப்புகளையும் பரிந்துரைக்கிறது. சில சுயேட்சையான மூன்றாம் தரப்பினரின் ஆலோசனையுடன் சேர்த்து வெள்ளையறிக்கையை ஆழ்ந்து படித்தும், இதன் சாலை வரைபடத்தை ஆராய்ந்தும் பாருங்கள்.

முன்னறிவிப்பாளர்களின் வேவ்ஸ் விலைக் கணிப்பு இலக்குகள் வெவ்வேறு படிநிலைகளுக்கு WAVES செல்லுமென்பதை ஏற்கிறது. சிலர் நேர்மறையாகச் சொல்கிறார்கள். மற்றவர்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். வேவ்ஸின் விலைக் கணிப்பு ஊக அடிப்படையிலானது என்பதையும் வாங்குவதற்கு இதை மட்டுமே காரணமாகக் கொள்ளக்கூடாது என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.

தேவையான விரிவான ஆய்வினை மேற்கொண்டு இதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். வெள்ளை அறிக்கையைப் படியுங்கள்; சமூக ஊடக சேனல்களைப் பாருங்கள்; தற்போதுள்ள முதலீட்டாலர்களிடம் கேளுங்கள்; தொழில்சார் முதலீட்டு ஆலோசகரை நாடுங்கள்.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com Bel LLC அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image