WIN நாணய விலைக் கணிப்பு: 2022ல் இந்த கிரிப்டோவுக்கு என்ன நடக்கும்?

By Currency.com Research Team

WIN டோக்கன்கள் WINk கேமிங் செயற்தளத்தில் பயன்படுத்தப்படும் ஒரு கிரிப்டோகரன்சி

WIN நாணய விலைக் கணிப்பு                                 
WIN டோக்கன்கள் WINk-ல் பயனர்கள் பந்தயங்களைக் கட்டவும் பரிவர்த்தனைகளைச் செய்யவும் அனுமதிக்கிறது – புகைப்படம்: Shutterstock
                                

உள்ளடக்கம்

WIN நாணயம் என்றால் என்ன?

WINkLink (WIN) WINk இணையவழி விளையாட்டு செயற்தளத்தில் பயன்படுகிறது. WIN டோக்கன்களைக் கொண்டு பயனர்கள் WINk-ல் பந்தயங்களை வைக்கவும் பரிவர்த்தனைகளைச் செய்யவும் முடிகிறது.

WINk, TRONBet என்று 2019 ஜூலை வரை அறியப்பட்டது. இதுவொரு பிளாக்செயின் அடிப்படையிலான கேமிங் செயற்தளம்.

WINk-யின் டோக்கன் WINkLink. இது TRONBet என்ற பெயரிலிருந்து WINk என்று பெயர் மாற்றப்பட்டபின் செயற்தளத்தை உருவாக்கியோரால் வெளியிடப்பட்டது. WIN டோக்கன்கள் இரண்டு பிளாக்செயின் தரநிலைகளை ஆதரிக்கிறது:

  • TRC20 – TRON பிளாக்செயின்
  • BEP-2 – பினான்ஸ் பிளாக்செயின்

இப்போது நாம் WIN டோக்கன் விலைக் கணிப்பை எப்படிச் செய்வது என்று யோசிக்கலாம். ஆனால் முதலில் WINkLink (WIN) எப்படி இயங்குகிறது என்று தெரிந்துகொள்வோம்.

WIN எப்படி இயங்குகிறது? (WINkLink)

WINk-ன் நோக்கம் பயனர்கள் விளையாடுவதற்கும், சமூக உறவு கொள்வதற்கும் பல பிளாக்செயின் அமைப்புகள் வாயிலாக ஸ்டேக் செய்வதற்கும் வழிவகுக்கும் பிளாக்செயின் துறையின் முன்னணி கேமிங் செயற்தளம் ஆவதுதான்.

WINk-ன் முன்னோடியான TRONbet, TRON வலைத்தொடர்பில் தொடங்கப்பட்ட முதல் மையமில்லா செயலியாகும் (DApp). TRON பிளாக்செயினில் போக்கர், டைஸ், ஸ்லாட்டுகள் உள்ளிட்ட மிகப்பெரிய கேம்ஸ் தொகுப்பை வழங்குவதாக WINk கூறுகிறது.

WINk செயற்தளம் பிரத்யேக கேமிங் DApps உருவாக்குவதற்கு நிரலர்களுக்குத் தேவையான கருவிகளையும் வளங்களையும் தருகிறது.

WIN-ஐ உருவாக்கியவர் யார்?

ஒரு பினான்ஸ் ஆய்வறிக்கை உருவாக்குநர் குழுவிலுள்ள 12 பேரைப் பட்டியலிடுகிறது. இதில் மூவர் கேம்ஸிலும் மேலாண்மையிலும் அனுபவம் உடையவர்கள். இன்னொரு நால்வருக்கு பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் முன்பு பணியாற்றிய அனுபவம் உள்ளது.

இந்தக் குழுவில் Amazon, Alibaba, Ogilvy, Tencent, Gameloft உள்ளிட்ட நன்கு அறியப்பட்ட பெருநிறுவனங்களில் முன்பு பணியாற்றியவர்கள் உள்ளனர். அவர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும் மற்ற விபரங்கள் ஏதும் வழங்கப்படவில்லை.

இந்த இரகசியத்தன்மைக்குக் காரணம் இந்த உருவாக்குநர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தங்களது சூதாட்ட கேமிங் செயற்தளம் குறித்து சீன அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க விரும்பாததும்தான் என்ற வதந்தி நிலவுகிறது.

ஒவ்வொரு WINk பயனரும் செயற்தளத்தில் தங்களுக்குப் பிடித்த செயலிகளில் விளையாடுவதன் மூலம் டோக்கன்களை மைனிங் செய்கிறார். எவ்வளவு அதிகமாக ஒரு பயனர் விளையாடுகிறாரோ அந்தளவு அதிக டோக்கன்களைப் பெறுவார்.

டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு WinDrops என்றழைக்கப்படும் ஒரு தனிப்பட்ட அம்சமும் உள்ளது. இது மேலும் சிக்கலான விதத்தில் இயங்கக்கூடியது.

2022 ஜனவரில் 27ல் இதுவரையில் 134,000,000 WIN டோக்கன்கள் மீட்டெடுக்க முடியாத முகவரி/கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக WINk டுவீட் செய்தது.

WinDrop எப்படி இயங்குகிறது?

செயற்தள பங்கேற்பாளர்களிடம் Win Power என்றழைக்கப்படும் ஒரு குறிகாட்டி உள்ளது. Win Power ஒரு பயனர் வைத்திருக்கும் WIN டோக்கன்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. எந்தளவு அதிகமான டோக்கன்களை பயனர் வைத்திருக்கிறாரோ அந்தளவு Win Powerஐ அவர்களால் சேர்க்க முடியும்.

ஒவ்வொரு நாளும், இருக்கக்கூடிய Win Power அளவைப் பொறுத்து, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான TRON டோக்கன்களை (TRX) WIN கிரிப்டோகரன்சியை வைத்திருக்கும் அனைவருக்கும் கணினி அமைப்பு விநியோகிக்கும்.

ஒரு பயனர் பெறக்கூடிய TRX அளவு அவர்களது Win Power அளவைப் பொறுத்து இருக்கும்.

WIN நாணய விலை: WIN மைனிங் எப்படிச் செயல்படுகிறது?

WINk செயற்தளம் உருவாக்குநர்களுக்கு செயலிகளை (கேம்ஸ்) உருவாக்குவதற்கும் தயார்நிலை செயல்திட்டங்களை அனுப்புவதற்கும் உதவக்கூடிய கருவிகளை வழங்குகிறது. 

பின்னர் செயற்தளத்தின் உருவாக்குநர்கள் வலைத்தொடர்புக்குள் பரிவர்த்தனைகளுக்கு குறைவான கட்டணம் என்று பயனர்களுக்கு ஆசை காட்டுகின்றனர்.

இதை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் எதேரியம் வலைத்தொடர்பில் சராசரி பரிவர்த்தனைக் கட்டனம் $2.46க்கும் அதிகம். WINஐப் பொறுத்தவரை உங்களுக்குத் தேவையானதெல்லாம் GuildWallet அல்லது TronLink போன்ற TRON வாலெட்டும் எட்டு TRX டோக்கன்கள் அல்லது $0.456 மட்டுமே என்று WalletInvestor கூறுகிறது.

பரிவர்த்தனைகளை நடத்துவதற்கு செயற்தளம் தனது சொந்த அலைக் கற்றையையும் மின் தொகுப்புகளையும் பயன்படுத்துவதால் அவர்களால் இதை வழங்கமுடிகிறது என்று உருவாக்குநர்கள் சொல்கிறார்கள்.

அதேநேரம், மூன்றாம் தரப்புச் செயலிகளின் பயனர்களால் ஈட்டப்படும் டோக்கன்களை இரண்டாம் நிலைச் சந்தையில் விற்கமுடியாது. சரி, 2022க்கான WIN நாணய விலைக் கணிப்பைச் செய்வது சாத்தியமா?

WIN நாணய விலைக் கணிப்பு: WIN என்ன செய்கிறது?

WIN நாணயம் இரட்டை டோக்கனாகக் கிடைக்கிறது –TRC20 அல்லது BEP2.

TRC20 என்பது TRC டோக்கனைப் போன்றதே. எனவே இது TRON மெய்நிகர் இயந்திரங்களைச் (TVMs) சார்ந்துள்ளது. இவை TRON உருவாக்குநர்களால் பயன்படுத்தப்பட்டு, TRON வலைத்தொடர்பினால் ஆதரிக்கப்படுகிறது.

BEP2 டோக்கன்கள் பினான்ஸ் செயின் (BC) வலைத்தொடர்பில் வழங்கப்படுகின்றன. இந்த டோக்கன்கள் கட்டணங்களைச் செலுத்தவும் வலைத் தொடர்புக்குள் ஏதேனும் பரிவர்த்தனையைச் செயல்படுத்தவும் பயன்படுகின்றன.

WINkயின் மையமில்லா கேமிங் செயற்தளங்கள் சூதாட்ட DApps விரைவாகவும் இலகுவாகவும் பரிவர்த்தனைகளை உற்பத்தி செய்கையில், பயனர்கள் தங்கள் நிதியை முழுமையான பாதுகாப்பின்கீழ் வைத்திருக்க அனுமதிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

மிகக்குறைந்த கஸினோ இயக்கத்தை வழங்குவதால் பயனர் குறைவான கட்டணத்தையே செலுத்த வேண்டி வருகிறது என்பதுடன் அநாமதேயமாகவும் நிரூபிக்கத்தக்க நடுநிலைமையையும் கொண்டிருப்பதாகக் கூறுகிறது .

WINk தலைவர், கென் பார்க் கூறுகிறார்:

“பிளாக்செயின் தொழில்நுட்பங்கள் கேமிங் துறையில் புரட்சியை ஏற்படுத்தி பிரமாதமான பயனர் அனுபவத்தை வழங்கும் என்று நாங்கள் உண்மையாகவே நம்புகிறோம்.”

WIN விலை வரலாறு

இது தோற்றுவிக்கப்பட்ட 2019க்கும் 2021 வசந்த காலத்துக்கும் இடையில், WIN-ன் விலை குறிப்பிடத்தக்கதாக இல்லை. $0.0008ஐச் சுற்றியே இருந்தது.

பிறகு ஏப்ரல் துவக்கத்தில், விலை 400% வரை மேலுயர்ந்தது. ஏப்ரல் 7, 2021 இல் WIN விலை $0.002682 என்ற உச்சத்துக்கு சென்றது. இந்த பெருவெடிப்புக்குக் காரணம் அப்போது பரிவர்த்தனைக் கட்டணம் இல்லையென்று கூறியதால் WINkயின் ETH பயனர்கள் WINக்கு மாறினர்.

எனினும் விலை திரும்பவும் கீழிறங்கியது. இந்த மெய்நிகர் கரன்சியின் சந்தை மூலதனம் ஏப்ரலில் $1 பில்லியனை நெருங்கிக் கொண்டிருந்தது. ஜூலை நடுவில் இது $144.6 மில்லியனாகக் குறைந்தது.

அதிலிருந்து ஐந்து மாதங்களில் விலை மெதுவாகவும் நிச்சயத்துடனும் ஏறத் தொடங்கியது. 2022 ஜனவரி 27ல் சந்தை மூலதனம் $289 மில்லியனாக இருந்தது. CoinMarketCap தரவரிசைப்படி ஒட்டுமொத்த கிரிப்டோ சந்தையில் இது #164 என்ற தரமதிப்பைப் பெற்றுள்ளது.

இதை எழுதிக் கொண்டிருக்கும் அதே நாளில் WIN விலை $0.0003015 குறியீட்டைச் சுற்றியபடி இருந்தது.

WIN நாணயம் ஒரு நல்ல முதலீடு தானா?

WIN நாணயக் கணிப்பைச் அணுகும்போது மிக உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். கவனமாக முதலீடு செய்ய வேண்டும். இழப்பதற்குத் தயாராக இல்லாத பட்சத்தில் உங்கள் பணத்தை முதலீடு செய்யாதீர்கள். கிரிப்டோகரன்சிகள் அதிக அபாயம் மற்றும் மாறியல்புகொண்ட முறையாவணங்கள். இதில் உங்கள் பணத்தை இடுவதாக இருந்தால் உங்கள் சொந்தக் ஆராய்ச்சியை முதலில் செய்துகொள்ளுங்கள்.

டெலமெறே ரிஹாப்ன் மருத்துவ இயக்குநர் மைக் டெலானே, இந்தவகை கிரிப்டோகரன்சி அபாயங்களில் முதலீடு செய்ய நினைக்கும் எந்த ஒரு நபரும் மெய்நிகர் சூதாட்டத்துக்கு அடிமையாகிறார் என்கிறார். அவரது ஆலோசனைகள்:

  • நேரத்துக்கும் பணத்துக்கும் வரம்புகளை அமையுங்கள். இதனால் எவ்வளவு நேரம் கிரிப்டோ முதலீட்டு இணையதளங்களில் நீங்கள் நேரம் செலவிடுகிறீர்கள் என்பதைக் கட்டுப்படுத்த முடியும்.
  • சூதாடும்போது அல்லது உங்கள் பணத்தைக் கையாளும்போது மதுவருந்துவதைத் தவிருங்கள். டெலானே சொல்கிறார்: “மதுவின் தாக்கத்தின்கீழ் இருக்கும்போது எந்த வகையான நிதி முதலீடுகளையும் தவிர்க்கும்படி உறுதியாகப் பரிந்துரைக்கிறோம்.”
  • அடிக்கடி இடைவேளை எடுங்கள். “சூதாட்டம் தனிநபர்களை அப்படியே உறிஞ்சிவிடும். திணறடிப்பதாக உணரச் செய்யும்”, என்று டெலானே சொல்கிறார். செயலிகள் மற்றும் உங்கள் கிரிப்டோ முதலீடுகளைப் பார்க்க நீங்கள் திறந்து வைத்திருக்கக்கூடிய எந்த இணைய தாவல்கள்களின் அறிவிப்புகளை அழிக்க அல்லது குறைந்தது அணைத்துவைக்கும்படியும் பரிந்துரைக்கிறார்.
  • வங்கியை உடைக்காதீர்கள். உங்கள் நேரம் முடிந்ததும் செலவு வரம்பை எட்டியதும், முந்தைய இழப்புகளை ஈடுகட்டுகிறேன் என்று உங்கள் முதலீடுகளைப் பெருக்க முயற்சிக்காதீர்கள் – அல்லது புரியும்படி சொல்வதென்றால் நட்டங்களைத் துரத்தாதீர்கள்.

டெலானே மேலும் கூறுகிறார்: “சிலவேளைகளில் பணம் சம்பாதிப்பீர்கள்; சில வேளைகளில் பணத்தை இழப்பீர்கள்; ஆனால் இழந்த பணத்தைத் திரும்பப் பெறும் நம்பிக்கையில் அளவுக்கதிகமாக முதலீடு செய்வதைத் தவிர்ப்பது முக்கியம்.”

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

WIN நாணயம் $1ஐத் தொடுமா?

2022க்கான WIN நாணயக் கணிப்பைச் செய்ய விரும்புவோரிடமிருந்து பல கேள்விகள் உள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரியில் WINk இணையதளத்தில் செயலிழப்பு பிரச்சினைகள் ஏற்பட்டன. அந்த நேரத்தில் பயனர்களால் தங்கள் கணக்குகளை அணுகமுடியவில்லை. அதனால் பந்தயங்களை வைக்க முடியவில்லை. பயனர்கள் WINk இணையதள உதவிக்குழுவைத் தொடர்புகொள்ளவும் முடியவில்லை என்று புகாரளித்தனர்.

WIN நாணயத்தை எங்கு வாங்கலாம்?

WINkLink வாங்கக்கூடிய இடங்கள்:

  • இரண்டாம்நிலைச் சந்தையில் (சந்தைகள் மற்றும் பிற பயனர்களிடமிருந்து);
  • சலுகை விற்பனைகளின்போது; அல்லது
  • டோக்கன்கள் இலவசமாக விநியோகிக்கப்படும்போது (WinDrops என்றழைக்கப்படுவது).

இரண்டாம் நிலைச் சந்தையான Binance, Mandala Exchange, KuCoin, Hotcoin Global, Gate.io, Poloniex, Liquid, WazirX மற்றும் பிற சந்தைகளில் WIN நாணயத்தை வாங்கலாம்.

வித்தியாசங்களுக்கான ஒப்பந்தங்கள் மூலம் (CFDs) கிரிப்டோகரன்சி சந்தையில் WIN அல்லது நீங்கள் விரும்பும் வேறு எந்த நாணயத்தையும் வர்த்தகம் செய்து பரிட்சயத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த நிதிசார் முறையாவணங்கள், செயற்தளம் ஆதரிக்கும் எந்த முறையாவணங்களிலும் உங்கள் விலைக் கணிப்பின் அடிப்படையில் அச்சொத்தின் விலையைக் கண்காணித்து லாங் அல்லது ஷார்ட் பொசிசன்களை எடுக்க உதவுகின்றன.

CFDs என்பவை பயனீடுள்ள தயாரிப்புகள். எனவே உங்கள் அதாயங்களைப் பெருக்கிக் காட்டும் – ஆனால் உங்கள் இழப்பின் அளவையும் அதிகரிக்கும்.

WIN ஒரு நல்ல முதலீடு தானா?

பல கிரிப்டோகரன்சிகளைப் போல, WIN-ம் மாறியல்புடைய, ஊகவணிக டோக்கன். $1ஐ அடைவதைவிட விலை சரிவதற்கே ஒருவேளை அதிக வாய்ப்பு இருக்கலாம். எந்த WIN டோக்கன் விலைக் கணிப்பு குறித்தும் கவனமாக இருங்கள்.

உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்யுங்கள். அபாயம் குறித்த உங்கள் மனநிலை, இந்தச் சந்தையில் உங்கள் அனுபவம், உங்கள் தொகுமுதலீட்டின் பரவல், பணத்தை இழப்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பவற்றின் அடிப்படையிலேயே உங்கள் வர்த்தக முடிவுகள் இருக்கவேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். உங்களால்  தாங்கக்கூடிய இழப்புக்கு அதிகமாக ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள்.

WIN நாணயம் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?

WINkயின் டோக்கன் – WINkLink, WIN அல்லது WINkLink நாணயம் – ஜூலை 2019ல் TRONBbet என்ற பெயரிலிருந்து WINk எனப் பெயர் மாற்றபப்ட்டபின் செயற்தள உருவாக்குநர்களால் வெளியிடப்பட்டது.

WIN நாணயத்தை யார் வைத்திருக்கிறார்கள்?

உருவாக்கம் மற்றும்  மேலாண்மை குழு குறித்து தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் WINkயின் தலைமைச் செயல் அதிகாரி லூசியா வாங் என்பது நமக்குத் தெரியும். #LinktheFuture மெய்நிகர் கலந்துரையாடல் மீதான இவரது ‘மையமில்லா பொழுதுபோக்கின் மலர்ச்சி ஏன் தவிர்க்கமுடியாத ஒன்று’ உரையை நீங்கள் இங்கு காணலாம்.

WIN எப்படி இயங்குகிறது

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image