WINkLink (WIN) என்றால் என்ன? உங்கள் ஆகச்சிறந்த வழிகாட்டி

By Currency.com Research Team

WIN என்றால் என்ன? அது எந்த விதத்தில் WINkLink, WINk உடன் தொடர்புடையது?

                                
WIN என்பது இரு வலைத்தொடர்புகளுக்கும் சொந்த டோக்கனாக உள்ளது – புகைப்படம்: Shutterstock
                                

உள்ளடக்கம்

நீங்கள் WIN கிரிப்டோகரன்சி, WINk சம்பாதிக்க-விளையாடு கேமிங் செயற்தளம், WINkLink வலைத்தொடர்பு குறித்து கேள்விப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அவை என்ன, அவற்றுக்கிடையிலுள்ள தொடர்பென்ன? WINkLink (WIN) என்றால் என்ன? WINkLink எப்படி இயங்குகிறது? WINkLink நாணயம் எதற்கு பயன்படுத்தப்படுகிறது? பார்க்கலாம்.

WINk, WIN மற்றும் WINkLink

WINkLink, WINk, WIN ஆகியவற்றுக்கிடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. பெரும்பாலானோர் WINk-ல் கவனம் செலுத்தும்போது, இந்த விசயத்துக்காகத்தான் WINk பயன்படுத்தப்படுகிறது என்று சொன்னால் அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. குழப்பமூட்டும்படி, நீங்கள் WIN நாணயத்தையும் பார்ப்பீர்கள். இது தொழில்நுட்ப ரீதியாக ஒரு நாணயமல்ல; இதுவொரு டோக்கன். “WINkLink கிரிப்டோகரன்சி” அல்லது “WINkLink (WIN)” என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் இங்கு நாம் WINkLink அமைப்பையும் WIN கிரிப்டோவையும் வேறுபடுத்திக் காட்ட முயற்சிக்கிறோம்.

எனவே WIN நாணயம் மற்றும் இரண்டு வலைத்தொடர்புகள் என்று வரும்போது அவை எதற்குப் பயன்படுகின்றன என்று விளக்க முயற்சிக்கிறோம்.

WINkLink விளக்கம்

WINkLink வலைத்தொடர்பானது TRON பிளாக்செயினை அடிப்படையாகக் கொண்டது. WINkLink-ன் பின்னுள்ள கருத்துக்கள் அனைத்தும் ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் குறித்ததே. ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் என்பது குறிப்பிட்ட நிபந்தனைகள் பூர்த்தியாகும்போது தானாகவே நிறைவேற்றப்படும் நிரல்கள். இவை கிரிப்டோகரன்சி சூழல்மண்டலத்தில் மிக முக்கியமான விசயங்களாகும். இவை பல ஒப்பந்தங்களையும் பரிவர்த்தனைகளையும் பிளாக்செயின்களில் இடம்பெற அனுமதிக்கின்றன. ஆனால் இதிலுள்ள ஒரு பிரச்சினையை நிவர்த்திக்க WinkLink முனைகிறது.

அது என்ன பிரச்சினையென்றால், ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் பிளாக்செயினுக்கு வெளியே இணைப்பதிலும், தொடர்புகொள்வதிலும் நன்றாகச் செயல்படுவதில்லை. இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள பெரும்பாலும் ஒரு ஆரக்கிள் -அதாவது எளிமையாகச் சொல்வதானால் பிளாக்செயினுக்கு வெளியிலுள்ள தரவுகள் பிளாக்செயினிலுள்ள தகவல்களுடன் தொடர்புகொள்ளச் செய்யும் ஒரு சாதனம் அல்லது ஒரு நிரல்-பயன்படுத்தப்படுகிறது. இதனால் பல ஸ்மார்ட் ஒப்பந்தங்களுக்குத் தேவையான தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன.

WinkLink பின்னாலுள்ளவர்களின் கூற்றுப்படி இதிலுள்ள பிரச்சினை என்னவென்றால் ஆரக்கிள்கள் தங்களிடம், மையப்படுத்திய அதிகார மையத்துக்கு அறிக்கையளிக்கும்படி ஒரு மையப்படுத்திய படிநிலைகள் அமைப்புடையதாக உள்ளன. இங்குதான் WinkLink வருகிறது.

WinkLink-ன் அடிப்படைக் கொள்கை மையமில்லா ஆரக்கிள்களை வழங்க உதவுவதாகும். இது WinkLink அமைப்பில் தனிப்பட்ட பகுதிகளைக் கொண்டிருப்பதன் மூலம் செய்யப்படுகிறது. பிளாக்செயினில் தொகுப்பு ஒப்பந்தம் என்றழைக்கப்படும் ஒன்றுள்ளது; இது மக்கள் தங்கள் ஸ்மார்ட் ஒப்பந்தத்தில் எந்த மாதிரியான விசயங்களை விரும்புகிறார்கள் என்று தேர்ந்தெடுக்க உதவுகிறது.

இதில் செயினுக்கு வெளியிலும் ஓர் அங்கம் உள்ளது. இது ஆரக்கிள் முனையம் எனப்படுகிறது. இந்த முனையங்கள், வலைத்தொடர்பிலுள்ள கணினிகள் பிளாக்செயினிலிருந்து தரவுகளை எடுத்து அதை தொகுப்பு ஒப்பந்தத்தில் அதைக் கணக்கிடுகிறது. இந்த ஆரக்கிள் முனையங்கள் எந்தப் பணிகள், எப்போது, யாரால் செய்துமுடிக்கப்படவேண்டும் என்பதற்கும் பொறுப்பாகின்றன. இதன் இறுதியான திட்டம் என்னவென்றால் ஸ்மார்ட் ஒப்பந்தங்களை அணுகத்தக்கதாக, எளிதில் உருவாக்கவும் பயன்படுத்தவும் கூடியதாக அதேநேரத்தில் மையமில்லாததாக இருக்கும் ஓர் அமைப்பை உருவாக்குவதாகும்.

WINkLink வெள்ளையறிக்கைப்படி, கிரிப்டோகரன்சி ஓரளவு பின்யோசனை கொண்டதாகவே பார்க்கப்படுகிறது. வலைத்தொடர்பின் சொந்த டோக்கனுக்கான விளக்கம் ஒரு பத்தியளவே தரப்பட்டுள்ளது. அது என்ன சொல்கிறதெனில்: “WIN என்பது ஒரு TRC-20 டோக்கனாகும். WINkLink வலைத்தொடர்பு WIN டோக்கனைப் பயன்படுத்தி செயினுக்கு வெளியே தகவல்களை எடுத்துத் தருவதற்காகவும், பிளாக்செயினில் வாசிக்கத்தக்க வடிவத்தில் தரவினை வடிவமைத்துத் தருவதற்காகவும், செயினுக்கு வெளியே கணக்கீடுவதற்காகவும், இயக்குநர்களாக அவை வழங்கும் நேர உத்தரவாதத்துக்காகவும் WINkLink முனைய இயக்குநர்களுக்கு தொகையைச் செலுத்துகின்றன. WIN டோக்கனுக்கு WINkLink பல வழிகளில் ஆற்றலளிக்கிறது.”

இந்த வெள்ளையறிக்கை WINkLink எவ்வாறு டோக்கனுக்கு சக்தியளிக்கிறது என்பதை விவரிக்கவோ விளக்கவோ இல்லை. அந்தப் பல வழிகளில் எந்த ஒன்றைப் பற்றியும் பட்டியலிடவும் இல்லை. WINkLink உடன் இது குறித்துக் கேட்டோம். ஆனால் பதிலில்லை.

WINk விளக்கம்

இது நம்மை அடுத்த புள்ளிக்குக் கொண்டு வருகிறது. நீங்கள் WIN குறித்து கேள்விப்பட்டிருந்தால், அது எவ்வாறு WINkLink வலைத்தொடர்புக்கு சக்தியளிக்கிறது, ஆதரிக்கிறது என்பதைப் பற்றியதாக இருக்க பெரும்பாலும் வாய்ப்பில்லை. மாறாக, WINk பிளாக்செயின் கேமிங் செயற்தளத்தில் உள்ள சூழல் குறித்து வேண்டுமானால் நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும்.  

2021ல் பிளாக்செயின் அடிப்படையிலான சம்பாதிக்க-விளையாடு (P2E) விளையாட்டுக்கள் பெரிய செய்தியாக ஆனபோது, கிரிப்டோவெர்ஸையும் தாண்டி மெட்டாவெர்ஸ் தலைப்புச் செய்தியாக உலகில் இடம்பிடித்தபோது, அவை புதிய விசயமாக இல்லை. WINkLink அமைப்பினாலும் அதைப் பயன்படுத்தியும் ஸ்மார்ட் ஒப்பந்தங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒன்றாக WINk சம்பாதிக்க-விளையாடு பிளாக்செயின் கேமிங் செயற்தளம் உள்ளது. 

இங்கே சுட்டிக்காட்ட வேண்டியது என்னவென்றால் WIN என்பது WINk-ன் சொந்த டோக்கன் என்பதுடன் WINkLink-க்கும் சொந்த டோக்கனாக உள்ளது. பெரும்பாலானோர் WIN ஆனது WINk உடன் மட்டுமே இணைந்திருக்கிறது என்பதுபோலச் செயல்படுவதையும் சுட்டிக்காட்ட வேண்டும். அதாவது நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல, அது உண்மையல்ல. எனினும் இன்னொருபுறம், மையமில்லா ஸ்மார்ட் ஒப்பந்த ஆரக்கிளை உருவாக்குவதை விட சூதாட்டம் – இது P2E-யின் அடிப்படையாக உள்ளது மற்றும் WINk கேமிங் செயற்தளம் இதைப் பற்றியது - மேலும் கவர்ச்சியான ஆர்வமூட்டும் ஒன்றாக இருக்கிறது. அதனால்தான் நிறையபேர் WINkLink உடன் WIN-ன் இணைப்பைவிட WINk உடன் அதன் WIN-ன் இணைப்பு குறித்து அதிகம் பேசுகின்றனர்.

WINk கேமிங் செயற்தளமானது WINkLink ஸ்மார்ட் ஒப்பந்த ஆரக்கிளைக் காட்டிலும் பழையது
WINk கேமிங் செயற்தளமானது WINkLink ஸ்மார்ட் ஒப்பந்த ஆரக்கிளைக் காட்டிலும் பழையது – புகழ்: wink.org

இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விசயம் WINk ஆனது WINkLink வலைத்தொடர்பின் ஓர் அம்சமாக உள்ள ஸ்மார்ட் ஒப்பந்தங்களைப் பயன்படுத்துவதுடன் பெரும்பாலும் ஒரேமாதிரியான அமைப்பையும் கொண்ட TRONbet-ஐப் பின்பற்றுகிறது. இதன் விளைவாக, WINk என்பது TRONbet இன் மறுபெயரிடலாகக் காணப்படலாம், TRONbet 2019 இல் WINk தொடங்கிய நேரத்தில் நிறுத்தப்பட்டது. இதன் அர்த்தம் WINk உண்மையில் 2021 ஏப்ரலில் தொடங்கப்பட்ட WINkLink அமைப்பைக் காட்டிலும் பழையது. எனினும் கேமிங் செயற்தளத்துக்குப் பிறகு பிரதான வலைத்தொடர்பு வந்ததுடன் பார்க்கையில் இந்த கால வரம்பு இயல்புக்கு மாறானதாகத் தோன்றலாம்.

WINk பயன்படுத்துவோர் தங்களது WIN-ஐ dice, poker போன்ற பல்வேறு விளையாட்டுகளிலும் அத்துடன் பல்வேறு மெய்நிகர் ஸ்லாட் இயந்திரங்களிலும் ஸ்டேக் செய்யமுடியும்.

ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஆற்றலை அளிக்கும் ஸ்மார்ட் ஒப்பந்தங்களை வழங்கும் WINk-ஐ பயனர்கள் பார்க்கமுடியும். இது அதன் பொழுதுபோக்கு மாற்றுவழிகளின் மீது வெளிப்படைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் அதிகரிக்கிறது. இந்த செயற்தளம் அதில் ஈடுபடும் உருவாக்குநர்கள், ஆட்டக்காரர்கள், முதலீட்டாளர்கள் ஆகிய ஒவ்வொரு தரப்பினரும் பலனடையும் செயல்திட்டத்தைத் தருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. WIN வைத்திருப்பவர்களுக்கு ஆளுகை உரிமைகளை வழங்குவதன் மூலமும், WIN-ல் முதலீடும் செய்துள்ள ஆட்டக்காரர்களுக்கு விளையாட்டுக்களில் தள்ளுபடியை வழங்கியும் இது நிறைவேற்றப்படுகிறது.

சிலநேரங்களில் மக்கள் WIN இரு பிளாக்செயின்களில் இயங்குகிறது என்று சொல்வதைப் பற்றி நாம் விளக்க வேண்டியுள்ளது. இது உண்மையல்ல. உண்மை என்னவென்றால் 2020 இறுதியில் WINk பினான்ஸ் உடன் இணைந்து BLINk-ஐ தோற்றுவித்தது. இதனால் WIN இன் பதிப்பு பினான்ஸ் ஸ்மார்ட் செயினிலும் இயங்கக்கூடியதாக உள்ளது.

WIN வரலாறு

WIN வரலாற்றைப் பார்த்தோமெனில் முதலில் அது 2019ல் சந்தைக்கு வந்தது. இந்த டோக்கனுக்கும் அதன் இரு வலைத்தொடர்புகளுக்கும் பின்னாலிருப்பவர்கள்: தயாரிப்பு தலைமைப் பொறுப்பிலிருந்துக்கும் முன்னாள் Tencent பணியாளர் என் யாங், முன்னாள் Baidu உருவாக்குநர் ஜாக்கி லி. 2022 பிப்ரவரி 9ம் தேதிப்படி, 961.74 பில்லியன் WIN புழக்கத்தில் இருந்தன. இதன் மொத்த வழங்கல் 994 பில்லியனுக்கு சற்று அதிகம். இந்நாணயத்தின் சந்தை மூலதன மதிப்பு $334.94 பில்லியன். இந்த அளவுப்படி பெரிய கிரிப்டோக்களின் வரிசையில் 166வது இடத்தில் உள்ளது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எத்தனை WINkLink நாணயங்கள் உள்ளன?

2022 பிப்ரவரி 9ன்படி, மொத்த வழங்கலான 994 பில்லியனுக்குச் சற்று கூடுதலான நாணயங்களில் 961.74 பில்லியன் WIN நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன.

WINkLink-ஐ தனித்துவமாகக் காட்டுவது எது?

WIN நாணயத்தை வழக்கத்துக்கு மாறானதாகக் காட்டுவது அது இருவேறு வலைத்தொடர்புகளுடன் இணைந்திருப்பதுதான் – WINkLink ஸ்மார்ட் ஒப்பந்த ஆரக்கிள் மற்றும் WINk கேமிங் செயற்தளம்.

WINkLink-ஐ உருவாக்கியவர் யார்?

WINkLink, WINk, WIN ஆகியவை என் யாங் மற்றும் ஜாக்கி லி தலைமையில் ஒன்பதுபேர் கொண்ட குழுவினால் உருவாக்கப்பட்டது. 

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image